text
stringlengths 11
513
|
---|
சொன்னதாக சொல்லித் திரிந்த காசியின் சுய எள்ளலையும் கடந்து மெல்லவே மன ஆரோக்கியம் குறைந்தது. ஆனாலும் அங்கே வீட்டிலிருந்த காலத்தில் நிறையப் படித்தான் என்று தெரிகிறது. ( எனக்கு ) புரியாத கவிதைகள் நிறைய எழுதினான். நான் பதிலே போடவில்லை. ஒரு வினாடிகூட காலூன்ற முடியாமல் கொந்தளித்தான் காசி. தன்னுடம்புக்குள்ளேயே பொறியில் சிக்கிய ஒரு எலியாகிவிட்டது அவன் மனது. ஒரு முட்டாள் மனநல வைத்தியன் நானூறு ரூபாய் காசுக்காக நான்கு தரம் ' ஷாக் ' ட்ரீட்மெண்ட் செய்துவிட்டான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும்
|
அடிப்பதாக மனப் பிரமையில் ( ? ) பரிதவித்துப் போனானாம் காசி. நிறைய மாத்திரைகள்... மனம் அடங்கவில்லை. ஷணப்பித்தன் - ஷணச்சித்தன் என்றானான் காசி. பத்தடிக்குள் மூன்று திசை. இந்த மலைக்கிராமத்திற்கு வருகிறேன் பேர்வழி என்று நான்கு முறை பஸ் ஏறியவன் ஒரு தரம் 40 கி.மீட்டர் வந்துவிட்டுத் திரும்பி , இரண்டு முறை 100 கிலோ மீட்டருக்கு டிக்கெட் வந்துவிட்டு ஆறாவது கிலோ மீட்டரிலேயே திரும்பிவிட்டானாம். ஒரு ஜின்னிங் பாக்டரியில் பஞ்சு பிரிக்கப் போகும் , உறவுக்காரப் பெண்ணை கல்யாணத்திற்குக் கேட்டு அப்பாவை வாதித்தான். பெண் யாருமில்லை.
|
பெரியப்பாவின் பேத்தி. பெரியப்பா இறந்தவுடன் சொத்துப் பிரிப்பில் ஒரே அண்ணனோடு , ஜன்மப் பகை சேர்ந்துவிட்டதான் உறவற்றுப் போன காசிக்கு ஒன்றுவிட்ட அக்காவின் பெண். பெரியம்மாவுக்கு இந்த ஏற்பாட்டில் ரகசிய சம்மதம். காரணங்களில் சொத்தும் ஒன்றாக இருக்கக்கூடும். தெரியவில்லை. அப்பாவும் யாரையோ பார்த்து கேட்டுவிட்டார். ' பெண் கேட்க என்ன தைரியம் ' என்று அப்பன் குடிகாரன் தூதுவரை ஏசி அனுப்பினானாம். " ஏதோ ஒரு பொண்ணுப்பா கல்யாணம் ஆனா எனக்கு எல்லாஞ் செரியாயிடும். இங்க சொந்தக்காரங்க வீட்டுல எத்தனை நாளுக்கு ? எண்ணிப்பாத்தா
|
பயமாயிருக்குதுப்பா... " என்று பச்சையாகக் கதறியிருக்கிறாள் காசி. தவித்துக் கொண்டே இருந்தவன் ஒரு மாலையில் தேங்காய் பருப்பியைக் கடித்துக் கொண்டே இரண்டு பாட்டில்கள் டிக் -20 ஐக் காலி செய்தான். விஷயம் தெரிய , பெரியம்மா அவசர அவசரமாக நாய்ப்பீயைக் கரைத்து வாயில் ஊற்றி விட்டாள். மீண்டும் வேறொரு மனநல டாக்டர். மாத்திரைகள். 10 திடீரென ஒரு சாயங்காலம் இம்மலைக் கிராமத் தோட்டத்திற்கு வந்தான். உடம்பு ஊதிக் கறுத்து ஆள் பயங்கரமாக இருந்தான். இரண்டாவது நாள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். யாராவது பொண்ணு வேண்டும் என்று ஒரு பொண்ணோட
|
ஒரு நாள் முழுக்க தனியா இருக்கணும். ஏற்பாடு செய் என்று பிடிவாதம். முப்து மைல்கள் பிரயாணம் செய்து அந்த எல்லைப் புற சின்ன டவுனுக்கு சென்றால் எனக்குத் தெரிந்த ஒரு பெண் - அவளும் ஊரில் இல்லை. அந்த சமயத்தில் நானும் வேலையில் இல்லை. அப்பா திடீரென இறந்துவிட்டதால் , கடலூர் அரசு வேலையைவிட்டு இங்கே தோட்டம் வந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அம்மா , தங்கைகளக்குத் துணையாக விவசாயத்தில் இறங்கியிருந்தேன். கூட எல்.ஐ.சி ஏஜண்ட் வேலை. ஒரு சாமியாருடன் தீவிரப் பழக்கமாயிருந்தது எனக்கு. எங்கள் கிராமப் பக்கம் சின்ன குடிசை ஒன்றில்
|
இருந்தார். சீக்கிரமே தெரிந்தது , கூட அழகான ஒரு சிஷ்யை என்று. நாங்கள் சொந்தக் குடிசையாக ஆசிரமம் கட்ட சூலித்தோம். ' விவேக னந்தரின் மறு பிறப்பு ' என்று சொல்லிக் கொண்ட சாமியாருக்கு நான்தான் பிரதம சிஷ்யன். கீழிறங்கி சாமியார் நகரங்களுக்குப் போனார். கீர்த்தி பரவியது. இங்கிலீஷ் சாமியார் அவர். ஃபார்மர் லைப்பில் எம்.பி.ஏ. ஒரு பழம் பெரும் திரைப்பட அதிபரின் நெருங்கிய உறவுக்காரர். மனைவி படிதாண்டிவிட்டாள். புருஷன் வீட்டையே தாண்டி ஆசிரமம் கட்டிக் கொண்டுவிட்டார். பின்னாளில்தான் எனக்கு எல்லாம் தெரிந்தது. சாமியிடம் காசியை
|
அழைத்துப் போனேன். எல்லாவற்றையும் சொன்னான். பத்து வயதுப் பையனிடம்கூட மனதைக் கழற்றிக் கையில் தந்துவிட்டு , ' பாத்துட்டு மறக்காம தாடா ' என்ற போகிற தன்மையில் காசி இருப்பதை சாமியாரின் மூளை புரிந்து கொண்டுவிட்டது. ' நாலுபேர் மாதிரி லைப்பிலே செட்டில் ஆகணுங்கற ஆசையே அத்துப் போச்சு சாமி இவனுக்கு ' ' கடவுள் நம்பிக்கை உண்டா ? ' காசியே பதில் சொன்னான். ' இல்லே சாமி... ஆனா ' கடவுள்னு ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி ! " ' நல்லாப் பேசறீங்களே ; இதுக்கு முன்னாடி யாராவது சாமியார்கிட்டே போயிருக்கீங்களா ? " "
|
போயிருக்கேன் சாமி. சகஜ சைதன்யா கிட்டே போனேன். தியானம் கத்துக்கப் போனேன். மந்திரம் தந்தார். மந்திரத்தை வெளியே சொல்லக் கூடாதுன்னார். ' ஐங்'கற அதை வெளியே எல்லாம் சொன்னேன். மறுபடியும் பாத்து அப்படி செஞ்சதை சொன்னேன். பரவால்லே தொடர்ந்து பண்ணுங்கன்னார். கனவுகள் தொந்தரவு பத்தி சொன்னேன். போன பிறவியிலே அடக்கி வெச்ச ஆசைகூட இந்தப் பிறவியிலே கனவா வரும்னார். பயந்து போயிட்டேன் சாமி.. அப்புறம் போகவே இல்லை... " கடைசியில் சாமியார் ஒரே வரியில் காசிக்கு அருள் வாக்காகத் தீர்வு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. " காசி... உனக்கு
|
செக்ஸ்தான் பிரச்னை... யூ ஹாவ் செக்ஸ் வித் ஹர் என்று ரம்பையை அழைத்துக் காட்டினார். காசி இரண்டு நாட்களாக குழம்பி முடிவெடுக்க முடியாமல் இருந்தான் முடியாது என்று ஒரு வழியாக முடிவு சொன்னான். தனக்கு தங்கைபோல இருப்பதாகவும் , தான் வேண்டுவது தாயான 11 பெண் என்றும் சாமியாரிடமே உளறினான். " நோ அதர் கோ... லீவ் ஹிம்... இப்படியே மெண்டலா இருக்க வேண்டியதுதான். ட்ரைஃபார் சப்ளிமேஷன் நாட் ஃபார் செண்டிமெண்ட்ஸ் இன் செக்சுவாலிட்டி வித் சாய்ஸ் ! நேத்து குருநாதர்கிட்டே உன்னப் பத்திக் கேட்டேன். இன்னும் பத்து வருஷத்துக்கு உனக்கு
|
சோதனைகள் பாக்கின்னார். மொதல்லே உடம்போட நீ இருந்து பழுகணும் " என்று முகத்துக்கு நேராக காசியிடம் சொன்ன சாமி , அவனை ஆசிரமத்திற்குள் அழைத்து வர வேண்டாமென்று என்னிடம் ரகசியமாகச் சொல்லிவிட்டார். கீழே போன காசியிடமிருந்து ஒரு மாதமாக தகவலே இல்லை. கீழே கோயமுத்தூரில் சாமியார் ஒரு பணக்கார வீட்டில் அடிக்கடி எழுந்தருளுவார். ஒருமுறை நானும் கூடப் போனேன். அந்த வீட்டில் ஒரு இளம் பெண் , கணவனை ஒதுக்கிவிட்டு தாய்வீடு வந்துவிட்ட பெண் , மூன்று பெண்களில் நடுப்பெண். ' ஆணாக'சுதந்திரம் பெற்று வளர்ந்த பெண். மூன்று பெண்களில் கல்லுமில்லை
|
, புல்லுமில்லை. ஆனால் ' இம்பொட்டண்ட் ' என்று தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்துவிட்டவள். மூத்த - இறைய இரண்டு சகோதரிகளும் ' வசதி'யாக வாழ்க்கைப் பட்டவர்கள். சாமியாரிடம் மிகுந்த விசனத்தோடு குடும்பம் முறையிட்டது. காசிக்குத் தெரிந்த குடும்பம் என்று தெரிந்தது. நான் காசியின் நண்பன் என்பதையும் , காசியைப் பற்றியும் ஏதோ பேச்சு வாக்கில் சாமி , யதேச்சையாக தன்னிடம் வந்த ' கேஸ் ஹிஸ்டரி'களில் ஒன்றாகச் சொல்லி வைத்தார். காசியைப் பார்த்தபோது நானும் யதேச்சையாக அந்தப் பெண்ணின் துயர ஸ்திதியைப் பற்றி சொல்லித் தொலைத்தேன். தயாராக
|
காசிக்குள்ளிருந்த விதி , காசியின் பாஷையில் ' கேரக்டர் ' வீறுகொண்டு எழும்பிவிட்டது. காசி கல்யாணம் முடித்து ஒரு மாதம்கூட கூடி வாழவில்லை. இரண்டாவது மாதம் ஒரு நாள் மாலையில் இந்த மலைக்கிராமத்து தோட்டத்து வாசலில் வந்து நின்றான். அன்றிரவு முழுவதும் ஊருக்குள் நாங்கள் இரண்டு பேர் மட்டுந்தான் தூங்காமல் இருந்திருப்போம். மாப்பிள்ளைக் களை அறவே இல்லை. முகம் எழுமைச் சாணியில் பிடித்து வைத்தது மாதிரி இருந்தது. " அரைக்கிலோ முந்திரி கேக்குக் உங்க எந்த கவிதையைத் தூக்கிட்டு கடைக்கு போகன்னு கேட்கறாருடா மாமனார். புஸ்தகங்களைக்
|
கட்டி எடைக்ப் போட்டுட்டு , மூளையை பணம் பண்ண யூஸ் பண்ணணுங்கறார். வீட்டு மாப்பிள்ளையா அங்கயே இருக்கணுமாம். நடுத்தரக் குடும்பங்கள் வாழற எங்க லைனுக்கு அவளால் வந்து குடும்பம் பண்ண முடியாதாம். பணக்காரங்களக் கண்டா பொறாமைப்படற லொக்காலிடியாம் எங்களது. அப்பாவையும் ' மாமனார் வீட்டுலையே வந்து இருக்கறதானா இருக்கலாங்கறார்.... மூணு பேருக்கு ரெண்டு வேலைக்காரங்க இப்ப , இன்னும் ரெண்டு பேர் இருந்தா அவங்களுக்கும் வேலை குடுக்க சரியாயிருக்குமாம். தினமும் ஸ்கூட்டர் சவாரி , ஐஸ்கிரீம்பார் , நிச்சயம் சினிமா , வராத புதுத்தமிழ்ப்ட
|
பாட்டு , இவ்வளவுதான் அந்தப் பெண்ணுக்கு அன்றாட உலகம். அல்சேஷன் நாய்க்கும் தெரு நாய்க்கும் ஆன வித்தியாசம். என்னால் சகிக்க முடியலே. என்னோட ' தாய் ' இமேஜ் எழவெல்லாம் சனியன் வேண்டாம் , ஒரு ' பெண்'ணாவாவது இருந்திருக்கலாம். எண்ணிப் பாத்தா ஒரு பத்து பன்னெண்டு தரம் கூடியிருப்போம் - உன்னால நம்ப முடியாதுடா குணா முத்தம் கொடுக்க அனுமதிச்சதேயில்லை. பிடிக்காமயிருக்கும் சில பேருக்கு. பரவாயில்லே. ஆனா இங்கே ' லிப்ஸ் ' அழகு நடிகை மஞ்சுளாவைவிட ஒருபடி இறங்கிடக் கூடாதுங்கற லட்சியம் எச்சரிக்கை. அழகு உதடுகள். ஆனா பொய் உதடுகள். 12
|
ஒத்தயா பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னால முடியலே. மறுபடியும் பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சுடா குணா. அப்பாகிட்டே வந்துட்டேன். அப்பா மனம் விட்டுப் போச்சு. ' இந்தப் புத்தகமெல்லாம் படிக்காம , இதப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாதுப்பா... என்னாலே அந்த வீட்லே சமாளிக்க முடியாதுப்பா... அவங்க கௌரவத்துக்கு ஈடுகட்டிப் போக முடியாதுப்பா... எனக்கு பயமா இருக்குது.. அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணக்குவேன்பா ' ன்னு கதறினேன்டா. ' போகப் போக சரியாப் போகும். நீ எதாச்சம் வேலைக்குப் போ முதல்லே'ன்னு அக்கா அக்றையா
|
சொன்னா... ! மூடிட்டுப் போன்னு அக்கா மேலே எரிஞ்சு விழுந்தேன். ' உன்னப் பாத்துட்டு வந்தா கொஞ்சம் மனசு நிம்மதிப்படும்'னு அப்பாகிட்டே சொன்னேன். மொய் வந்த பணத்திலே நூறு ரூபா தந்து அனுப்புனார்டா '. ஒரு வாரம் இருந்தான். நானும் சாமியாரிடம் போவதை நிறுத்தி விட்டிருந்தேன். கொஞ்ச நாள் நிதானமாக சும்மா இருக்கச் சொல்லி அனுப்பிவிட்டேன். செயலுக்கான முடிவாக எதையும் யோசித்துச் சொல்லி முடியவில்லை எனக்கு. குற்றவுணர்வு வேறு மனதின் ஒரு மூலையில். அவனோடு சேர்ந்து பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் சாம்பலே மிச்சம். கீழே போன காசியைப் பற்றி
|
இரண்டு மாதங்களுக்குத் தகவலே இல்லை. தன்ராஜ் எழுதித்தான் பின்னாடி விவரம் தெரிந்தது. காசி பழையபடி ஆரம்பித்துவிட்டிருக்கிறான். கண்ட கண்ட தூக்க மாத்திரைகள். பாதி நடிப்பு , மீதி பைத்தியமென குர்தாவைக் கிழித்திருக்கிறான். ஸ்கூட்டரை வேண்டுமென்றே சுவரில் இடித்தான். மாமனார் பெயரிலுள்ள ஸ்கூட்டர். அவருக்கு கோபம் வராதா ? போதை மாத்திரை அடிமை என்று செருப்பால் அடிக்க வந்தார். திடீரென ஒரு நாள்'இனி நல்லபடி இருப்பேன் ' என்ற திடீர்கங்கணத்தில் அந்த அழகான உதடுகளுக்கு ஐஸ்கிரீம் , புதுப்படம் , ஸ்கூட்டர் பவனி , பட்டுச் சேலைக்கு
|
வாக்களிப்பு என்று பூஜை போட்டான். இரவில் கழுத்துக்கு கீழே ஒரு - ஒரு தடவை மட்டுமே - புணர்ச்சி முடித்து , மாத்திரை இல்லாமலேயே நல்ல தூக்கம். விடியும் முன்பு 5 மணிக்கே எழுந்து ஸ்கூட்டரை விரட்டிக் கொண்டு வந்து அப் ; வை எழுப்பினான். இதற்கு ' மொய் ' வந்த பணத்தில் நூறு காலி இப்படி பூஜை நான்கைந்து முறை நடந்தது. பெண் வீட்டிலேயே காசி இரண்டு வாரம் தொடர்ந்து இருந்தான். படிப்பறிவு அதிகமில்லாத அப்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறுவன்போல கதறி அழுதார். மீண்டும் தூக்க மாத்திரைகள் விழுங்கிவிட்டான். ஆத்மார்த்தமான தற்கொலை
|
முயற்சி. கடிதம் வேறு எழுதி வைத்துவிட்டு கட்டிலேறினான். கதவைத் தாளிட்டிருந்தான். நம்பிக்கையோடு கண் மூடினான். அடுத்த நாள் காலையில் கண் விழித்துவிட்டது. பயங்கர ஏமாற்றம். ஆத்மார்த்தத்தின் ஏமாற்றம். ஆவேசம் கட்டுப்படாமல் கையில் கவர பிளேடு எடுத்தான். தடுமாறிக் கொண்டே நடந்து போய்... ஜி.எச்.சில் இரண்டு வாரங்கள் இருந்தான் காசி. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல் வாரம். கழுத்தில் ஒரு சின்ன ஆபரே'ன். கால்மாட்டில் கேஸ் நோட்டீஸ். Personality disorder , Affection seeking phenomenon , Advised psycho therapy. காசியின் இன் -
|
லேண்ட் மேஜை விரிப்பின்கீழ் சொருகிவிட்டு வெளியே வந்தேன். மேக மூட்டம். கன்னுக்குட்டியை ' பலனு'க்கு பக்கத்துத் தோட்டத்திற்குப் பிடித்துக்கொண்டு போகவேண்டிய வேலை. அம்மாவும் , தங்கைகளும் அவரைக்காய் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். 13 கன்றை அவிழ்த்துப் பிடித்தேன். காசியின் மீதான நினைவுகள் , மூட்டம் கலையாமல் நடந்து கொண்டிருந்தது. இலக்கியமாக எவ்வளவோ நல்ல நல்ல புத்தகங்கள் படித்தும் காசி இவ்வளவு துன்பப்பட்டான் என்பதை நினைத்தபோது காசியின் அந்தப் படிப்புமீதே எனக்கு சந்தேகமும் , சற்று எரிச்சலும் உண்டாயிற்று. எதையும்
|
சந்திப்பதற்கு முன்னாலேயே பயப்பட்டுவிடும் சுபாவம் அவனுக்குள் அடிப்டை சுபாவமாக ஓடிக் கொண்டிருந்தபோல - ரத்த ஓட்டத்தினூடே குமிழியிட்டு ஒரு அவநம்பிக்கையாக , தெரியவில்லை. திடீரென பத்திருபது நாட்கள் இரவுகளில் கண் விழித்து நிறையப் படிப்பான். காசி. அப்போதெல்லாம் நான்கு கடிதங்கள் வாரத்துக்கு எழுதிவிடுவான். கோயமுத்தூரில் ஒரு கட்டத்தில் காசிக்கு வேறொரு நல்ல நண்பனும்கூட இருந்தான். அவன் இளம் வயசு. புல்லாங்குழல் , ஓவியம் , இரவில் நெடுஞ்சாலையோரம் ஒரு டீக்கடை முன்பு அரைமணிக்கொரு டீ குடித்துக்கொண்டு , விடியற்காலை நான்கு ,
|
ஐந்து மணிவரை பேசிக்கொண்டே இருந்துவிட்டுப் பிரிவார்களாம். தனக்கு கலை - இலக்கிய விஷயங்களில் நிறைய கற்றுத்தந்து , ரசனையை வளர்த்துவிட்டதில் அவனுக்குப் பெரும் பங்குண்டு என்று காசியே அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். விளைவுகள் பற்றி அஞ்சாத காசியின் ஓட்டை வாய் பலவீனம் பல மென்மையான இதயங்களை சில தருணங்களில் பாயப்படுத்திவிடும். அப்டி காயப்படுத்திய ஒரு கெட்ட தருணத்தில் அந்த இளங்கவியின் நட்பையும் இழந்துவிட்டான். காசி. இவ்வளவு தூரம் காசி சரிந்ததற்கு , தொடராமல் போன அந்த நட்பும்கூட ஒருவகையில் , காரணங்களில் ஒன்றாக எனக்கு
|
படுகிறது. காசி முக்கால் சந்திர கிரகணத்தின்போது பிறந்தவனென்னு ஒரு தரம் சொல்லியிருக்கிறான். சில காலம் ஜோஸ்யத்தில் கூட நம்பிக்கை வைத்துப் பார்த்தான். தன் மன வழக்கப்படி அதையும் விட்டான் இடையில். அவன் வரையில் எதுவும் உறுதியில்லை என்னறே போய்க் கொண்டிருக்கிறான். தஸ்தாவாஸ்கியின் ' The House of the Head ' ஐத் தமிழில் படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதத்தில் எழுதினான். ' ஒவ்வொரு கைதியும் சிறையிலே விருந்தாளியா இந்த இடம் வந்துவிட்டுப் போறோம்'ங்க மனப்பாங்குல தான் இருக்காங்க. அதனாலே ஐம்பது வயசுலேயும் அவன் முப்பத்தஞ்சு
|
வயசுக்காரனாட்டமே நினைச்சுட்டு நடந்துக்கறான் - னு கதைசொல்லி பெட்ரோவிச் எழுதறான்... ஒரு விருந்தாளியா நானும் என்னை நினைச்சட்டு , இங்க காரியம் செஞ்சுட்டுப் போக முடிஞ்சா எவ்வளவு எவ்வளவு நல்லா இருக்கும் ? " ஆஸ்பத்திரிலிருந்து வந்தவன் , மூன்றாவது வாரம் எனக்கொரு கடிதத்தில் எழுதினான் : வில்லியம் கால்லோஸ் வில்லியம்ஸ் படிச்சிட்டிருக்கேன். நிறைய கவிதைகள் எனக்கு பிடிச்சது. இடையிலே ஒரு தமாஷ். ஜி.எச்.சிலே குடுத்த ஒரு குறிப்புச் சீட்டு. பழைய டயரிலே இருந்தது கண்ணிலே பட்டது. ' மறுமுறை பார்க்க.. கிழமை மாலை 2 மணிக்கு வரவும்.
|
இந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் ' னு குறிப்பு அச்சடிச்சிருந்த குட்டி Case notes சீட்டு அது. அதிலே Diagnosis ங்கற இடத்திலே பேனாவிலே பெரிசா எழுதியிருக்கு : CUTTHROAT Psychiatric - 61 cut - throat 601 GOTIT நம்பிக்கை துரோகம் இல்லையே ? எவர் இருவர்க்கிடையே யாருக்கு யார் பரிசளிச்சிட்ட நம்பிக்கை துரோகம்டா அது ? டாக்டருக்குள்ளே பூந்து மாமனார் எழுதீட்டார் போல... 6 அந்த இன் - லேண்ட் ' ஸ்ரீராமஜெய'த்திற்கு பதிலாக காசிக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை. அவனிடமிருந்தும் இந்த ஒன்றரை வருடங்களாகத் தகவலே இல்லை. ஆனால் சென்ற
|
வாரம் எனக் 14 இனிய அதிர்ச்சி. எதிர்பாராத விதமாக பெங்களூரில் ஒரு மதுபான ' பாரில் ' காசியைச் சந்தித்தேன். சற்றே இளைத்திருந்தான் காசி. நவீன மோஸ்தரில் உடையும் தலைவாரலும். கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் மெல்ல வெளுத்து வருகிறதுபோல. இருமனமொப்பிய திருமண விலக்கு ( Mutual Divorce ) கிடைத்து விட்டதாகச் சொன்னான். முதல் முறை விலக்கு பெற்றது போலவேத தனது அதே ' குடும்ப வக்கீல் ' மூலமாகத்தான் தன் பெண்ணுக்கு இம்முறையும் அதைச் செய்ய வேண்டும் என மாஜி மாமனார் பிடிவாதம் பிடித்து இழுத்ததில் கொஞ்சம் கால தாமதமாகிக் கிடைத்தது என்றான்.
|
அந்தச் செய்தியில் சிறு அதிர்ச்சியோ , முழு சந்தோஷமோ எனக்கில்லை. ரம்மில் ஒரு குவாட்டர் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான். வாயில் புகைந்து கொண்டிருந்தது. ஆச்சரியமான சந்திப்புதானிது என ஆர்வம் பொங்க அவன் முன்னால் உட்கார்ந்திருந்தேன். ' அப்புறம்.... என இங்க ' என்றதற்கு தன் விசிடிங் கார்டாக மேல் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான். மார்க்கெட்டிங் டைரக்டர். அடேயப்பா ! எனக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. பழையபடி இல்லாமல் எப்படியோ ஒரே தொழிலில் ஒட்டிக் கொண்டு , நட்பறுத்துக் கொள்ளாமல் கவனமாக முன்னேறி இருக்கிறான் போல.
|
வெயிட்டரிடம் இன்னொரு டம்ளர் கேட்டான் காசி. ஒரு வேளை அபயக் கட்டையாகப் பற்றினானே ' காசு , காசு ' என்று , அந்த ஸ்ரீராமஜெயம் பண்ணுகிற வேலையோ இவ்வளவும் ! ' எப்படி- எல்லாம் ' என்றேன் உற்சாகமாக. ' அது அது எப்படியோ அப்படித்தான் அது அது ' என்றான் வேதாந்தி மாதிரி. மாலையில் தொடங்கியது இரவு பத்தரைவரை பேசிக் கொண்டிருந்தோம். தனது ஒன்றுவிட்ட அண்ணனிடம் வட்டிக்கு கொஞ்சம் பணம் வாங்கி முதலீடு செய்திருப்பதாகச் சொன்னான். கூட இருக்கும் நண்பரும் நல்ல மாதிரி , பொருளாதார விஷயத்தில் நிறைய ஒத்துழைக்கிறார் என்றான். இனி காசி பிழைத்து
|
விடுவான் என்று வாய்விட்டே சொன்னேன். வாய்விட்டுச் சிரித்தான். ' நானெங்கே இங்கே ' என்று என்னைக் கேட்டான். ஆயுள் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அலுவலக வேலையாக என்று நீட்டிச் சொன்னேன். சிரித்தான். ' நோ ப்ராப்ளம் ' என்றான். ' பாரில் ' நிறைய கூட்டமிருந்தும்கூட , ஏ.சி.யானதாலோ என்னவோ அமைதி கூடி இருந்தது. எவர் உரக்கப் பேசினாலும் தாழ்ந்தே கேட்டது. கேட்கவும் சொல்லவும் நிறைய இருந்தும் , இருவருக்ம் இடையில் என்னவோ சிறு தயக்கம் நின்றிருந்தது. போதையின் ஒரு முன்னேற்ற கட்டத்தில் தயக்கம் விலகிவிட்டது. ஐஸ் கேட்டான் காசி. என் டம்ளரை
|
சீக்கிரம் காலியாக்கித் தரச் சொன்னான். சிகரெட்டைக் காட்டி எடுக்கவில்லையா என்றான். நிறுத்தியாச்சு ! - எப்பாச்சும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மட்டும் என்று , ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தினேன். பீறிட்டுச் சிரித்ததில் ரம் பொறையேறிவிட்டது. நானும் சிரித்துக்கொண்டே கேட்டேன். " ஏண்டா காசி இப்படி சிரிக்கிறே ? ' நோ ப்ராப்ளம் ! இல்லடா குணா.. சமீபத்தில் ' Confessions of Zeno ' னு ஒரு இத்தாலி நாவல் படிச்சேன். அதில் 20 பக்கத்துக்கு ரெண்டாவது அத்தியாயம். The Last Cigarette ன்னு. சிகரெட் விடறது 15 பத்தி. விட தீர்மானம்
|
போட்டு முடியாம எப்படி எல்லாம் அவஸ்தைங்கறதப் பத்தியே பக்கமும்... " நான் பழைய காசியைப் பார்த்துவிட்டேன். மேலும் சுயசரிதை பாணியில் எழுதப்பட்ட அந்த நாவலைப் பற்றியே நீண்ட நேரம் புல்லரித்துப் பேசிக் கொண்டே போனான். நாவலில் அதன் ஆசிரியர் ltalo Sevevo வும் தன்னைப் போலவே ' ஈக்குஞ்சு ' பற்றி கவிதை எழுதியிருப்பதையும் விவரித்து பிரம்மாண்டமாக சந்தோஷப்பட்டான். ஒரு வாய் அருந்திவிட்டு , நாடு மொழி இன சூழல் விவரங்கள் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் , அந்த ஏழு அத்தியாய நாவல் ஏகதேசம் தனது சொன்த வாழ்க்கை வரலாறு போலவே இருக்கிறது
|
என்றான். அவசியம் அதை நான் படிக்க வேண்டும் - போய் அனுப்புகிறேன் என்றான். மேலும் விடாமல் , நாவலின் அத்தியாய தலைப்புகளைக் கேள் என்று வியந்து சொன்னான் : Introduction ருபது The Last Cigarette The Death of my Father The Story of my Marriage Wige and Mistress A Business Partnership Psychoanalysis இன்னொரு குட்டி பெக் வாங்கினான் காசி. நான் போதுமென்று விட்டேன். திடீரென , தான் ஒன்றும் முற்றிலும் மாறிவிட்டதாக நான் நினைத்துவிட வேண்டாமென்று சற்றே நெகிழ்ச்சியாக , லேசாக எச்சரிக்கை விடும் தொனியிலும் , கண்கள் வழியாகவும்
|
பேசினான் காசி. ஒரு சின்ன உதாரணம் பார் என்று விட்டு சொன்னான். ஆறு மாதங்களுக்கு முன் நடந்ததாம் இது : ஒய்.டபிள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கிக் கொண்டு , கிறிஸ்துவ மத நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கம் ஒரு பெண்கள் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பௌதிகத் துணை பேராசியை , காசிக்கு ஒரு நண்பன் மூலம் இரண்டொரு சந்தர்ப்பங்களில் அறிமுகமானாள். மிக அழகான யுவதியாம். துரதிர்டம் - ஒரு குழந்தையோடு அவள் விதவையாகி இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியாகவில்லை. தன்னை மணக்க விருப்பம் வேண்டி விடுதி முகவரிக்கு அவளுக்கு கடிதம்
|
எழுதிக் கேட்டிருக்கிறான். நான்கு கடிதங்கள். கடைசி இரண்டு கடிதங்கள் ரெஜிஸ்டர்டு தபால். நான்கும் வார்டன் கையால் பிரிக்கப்பட்டது ! நண்பன் காசியை தெருவில் மடக்கி ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அறைந்தான் ; பெண்ணின் அண்ணனிடம் இழுத்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போனேன். அந்தப் பெண் மூன்று நாட்களாக அழுது கொண்டிருப்பதாக வேறு சொல்லிவிட்டுப் போனான். ஒரு மாதங் கழித்து கல்லூரி வாசலில் அவள் காலில் விழாத குறையாக வருந்தி மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்தானாம் - மன்னிப்புக் கேட்கப் போனதாலும் அந்தப் பெண்ணைப் பயமுறுத்தி நினைவு தன்
|
உடம்புக்குள் இரத்த ஓட்டத்தில் ஒரு உடையாத குமிழியாக ஓடிக் கொண்டே இருப்பதானது காவிய சோகம் என்றான். 16 நிமிடத்தில் காவிய சோகம் பட்டுவிடும் காசியின் மனநிலை இன்னும் - குறிப்பாக பெண்கள் விஷயத்தில் மாறவே இல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த ரொமாண்டிக் பார்வை ஒரு நோய்க் கூறாகவே இன்னும் படுகிறது. அவனிடம் எனக்கு. ஆனால் வேறு நினைய விஷயங்களில் குணமாகியிருப்பது பேச்சினூடே தெரிந்தது. ' ஆசைப் பட்டதை அடைந்த பின்னாலும் ஒரு பள்ளம் மிச்சமாகி அதில் நலுங்குமே ஒரு சோகம் அதை அனுபவித்தால் தெரியும் ஆசையின் குணம் என்ன என்று ' -
|
பின்னால் பேசும்போது எதற்கோ இப்படி சொன்னான். சமீபத்தில் திருப்பதி போய் வந்தானாம். ஜாலித் துணையாக ஒரு நண்பனோடு போனவன் ' கம்பெனி ஸேக்'குக்கு தானும் மொட்டையடித்துக் கொண்டானாம். கம்பெனி ஸேக் ஆக வேறு கோவில்களுக்கும் அப்படியே போய்விட்டு , திருவண்ணாமலை வந்த போது ராம்சூரத் குமார் என்றொரு யோகியைச் சந்தித்ததாகச் சொன்னான். ' நீ கதவைத் தட்டும் விதம் சகிக்கக் கூடியதாக இல்லை ' என்பதையே கோபம் தணிந்த கடைசியிலும் தனக்கான ஒரே ஆசிச் செய்தியாக அவர் வழங்கி அனுப்பியதையும் அதில் பூரண அர்த்தமிருப்பதாகவும் சொன்னான். நான் இன்னொரு
|
சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன். அவன் அப்பாவைப் பற்றிக் கேட்டேன். ' நோ ப்ராப்ளம் ' என்றான். அடிக்டி ' நோ ப்ராப்ளம் ' என்ற வார்த்தையையே , எதற்கும் பதிலாக அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டே வந்தேன். கேட்டேன் , சிரித்துக் கொண்டே ' நோ ப்ராப்ளம் ' என்றான். எனக்கு அந்த பதில் அருவருப்பாகவும் , எரிச்சலாகவும் பட்டது. காரியங்களை காரியங்களுக்காக மட்டுமே செய்வதில் ஒரு விடுதலைஉணர்வும் , பரபரப்பற்ற பேரார்வமும் இருப்பதைக் கண்டுகொண்டு விட்டதால் , எந்தக் காரியமுமே தனக்குப் பேரானந்தமாக இருக்கிறது என்றான். நான் ஒரு நிமிஷம்
|
பேசவில்லை. சொல்லும்போது அவனுக்கு நாக்கு லாவகம் கொஞ்சம் இழந்து , எழும்புவதில் சிரமப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். என் நான்கு தங்கைகளுக்கும் காரியம் செய்து முடிப்பதற்குள் பட்ட கஷ்ட அனுபவங்கள் எனக்குள் ஒற்றை எண்ணமாக , மின்னலின் ஒரு கீற்றாக உருக்கொண்டு அறைந்தது ஈயைத் துரத்தும் பல்லியாக அது வேகமாக ஓடியதில் , பல்லியின் வால் அறுந்து நினைவில் இடறி விழுந்தது. ' என்ன யோசனை ' என்றான். ' நோ ப்ராப்ளம் ' என்றேன். சிரித்துக் கொண்டே திடீரென்று உரக்க அவன் நூறு கொசுவர்த்திச் சுருள்களைக் கொடுத்து , இரண்டிரண்டாக ஒட்டி இருப்பதை ,
|
ஒன்று ஒன்றாக தனித்தனியாகப் பிரித்துவைக்கச் சொன்னால் பொறுமையாகச் செய்ய முடியுமா என்று கேட்டான். மறு நிமிஷமும் நான் பேசாதிருந்தேன். முகம் தொட்டு ' என்ன ' ? என்றான். கூலி எவ்வளவு என்றேன். எழுந்து என் முன் மண்டையிலடித்துச் சிரித்தா. ஓயவில்லை. இருட்டிவிட்டது வெளியே. ஏ.சி.யிலும் நன்றாக வியர்த்துவிட்டது காசிக்கு. என்னால் வயதான கிழப் பிச்சைக்காரர்களைத் தெருவில் பார்த்தால் , மனதின் ஆழத்தில் அவர்களைத் தன் அப்பாவோடு ஒரு கோணத்தில் ஒப்பிட்டுக் கொண்டு , குற்றவுணர்ச்சி - சுய இரக்கம் - இயலாமை - பயம் எல்லாம் கலக் அவசரக்
|
கருணையாக செயல்பட்ட நாட்கள் மாதிரி இப்போது இல்லை. அவர்களை அவர்களாகவே பார்த்து அவர்களுக்காகப் பார்க்க முடிகிறதென்றும் , அவர்களைப் போன்ற இன்னும் பலரின் ஸ்திதியை மாற்றிவிட சமூகதளத்தில் காரியமாற்ற முனைந்திருக்கும் சில நல்ல மனக்ளுடனும் தான் பழகிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். ' மனமாக ' இதை சுருக்கி விடுவதை அவர்களே ஒத்துக கொள்ள மாட்டார்களெனினும் தன் மனதில் பட்டது இவ்வளவுதான் என்று எனக்கு புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு போனான். மேலும் எனக்கு இமைகளில் கனம் சுருட்டி உணர்ந்தேன். வெளியில் போனால் நன்றாக இருக்கும் என்று
|
பட்டது. காசி மேலும் ஒரு சிகரெட்டை , புது பாக்கெட் கிழித்து எடுத்தான். 17 ஆனாலும் , தனக்கு கல்யாண ஆசை இம்சிக்கிறது இன்னும் என்றான் திடீரென்று. தனிமை , துவைத்தல் , ஹோட்டல் இவைகளையும் திருமணத்திற்கான சாக்குகளில் ஒன்றாக வைத்து யோசிப்பதில் தவறுண்டா என்று என்னிடம் ஒரு சிறுவன்போல கேட்டான். பைத்தியக்காரன் ! பெய்த பெருமழைவிட்ட சில மாலை நேரங்களாக , சில நாட்கள் கழிவதிலிருந்து , தன் வாழ்க்கைக்கு ஊட்டம் சேகரித்துக் கொள்வதாகக் கூறினான். சில சமயம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் தொலைதூரம் உட்கார்ந்துகொண்டு போகும்போது ,
|
பஸ்ஸின் ரீதி கூட்டும் ஓட்ட வேகத்தின் சங்கீதச் சரடில் இணைந்துவிடும் போது வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக உணர்வதாகவும் சொன்னான். எனக்கும் கேட்க உற்சாகமாகிவிட்டது. பேச்சை நிறுத்திவிட்டு ஃபிரைடு ரைஸ் சாப்பிடுவோமா என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு அவன் கேட்டவிதம் மிகவும் பிடித்திருந்தது , எனக்கு ஃபிரைடு ரைஸ் பிடிக்காவிட்டாலும். எவ்வளவோ தான் நிதானப் பட்டிருந்தாலும் சில சமயம் எல்லாம் கொட்டிவிடுகிறது என்றான். தனியறையில் பின்னிரவில் மோனத்தில் தனக்கு பிடித்த கவிஞனைப் படித்துக் கொண்டிருக்கும் போது , வாசலில்
|
கட்டிலிலிருந்து அப்பா அவருக்கான ஏதோ ஒரு தொனி சேர்த்து உரத்து கொட்டாவி விட்டால் தாங்க முடியவில்லை. எழுந்து போய் அந்த வாயை அடைத்து அமுக்கிவிடலாம் போலிருக்கிறது. ஒரு கொட்டாவி அந்த மாதிரி வந்தால் போதும் , அந்தப் பின்னிரவே தனக்கு பாழ் என்றும் சொன்னபோது சற்றே சோர்வாகிவிட்டான். அப்பா இறந்து விட்ட பின்பும் தான் வாழ்க்கையைத் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை மெல்லவே கூடிவருகிறது என்றான். அடிப்படை சுபாவமாகவே ' சுயம் நசித்து ' விட்ட நான்கைந்து நண்பர்கள் , எழுத்து , படிப்பு இதெல்லாம் மட்டுந்தான் இதற்கு அடிப்படைக் காரணம்
|
என்றான். என்ன இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாய்தானே ? என்று கேட்டுவிட்டு கடைசி ' சிப்'பையும் முடித்தான். சிகரெட் பொருத்திக் கொண்டான். திடீரென தான் சமீபத்தில் கண்ட கனவுகளைப் பற்றி பேச்சை மடை மாற்றிக் கொண்டான். அழகான கண்ணாடிக் கிண்ணத்தில் மிதந்த மிளகாய் நீரை சில்வர் கரண்டியால் கலக்கிக் கொண்டே பேசினான். முன்னைப் போல கனவுகள் வந்தாலும் , நோ - ப்ராப்ளம் என்றான். ரமணரின் பரவச முகம் ஒருமுறை வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு கடித்து ரத்தம் வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை
|
பாம்பு கடித்து ரத்தம் வந்துவிட்டதாம். பாடையில் வைத்து ஒரு கனவில் தன்னைக் கண்டானாம். தீவிரவாதியாக போலீஸாரால் துரத்தப்பட்டு ஒரு கனவில் ஓடினானாம். ஓரிரவு நெடுஞ்சுவர் தாண்டி , மலைகள் தாண்டி , விண்ணில் பறந்து போவது மாதிரி , கைகளால் பேரானந்தமாகக் கடைந்து கடைந்து பறந்துகொண்டே இருந்தானாம். இந்த ஒரு கனவு மட்டும் மீண்டும் வராதா என்று ஏக்கப்படுவதாகச் சொன்னவன் , அடிக்கடி திரும்பத் திரும்ப வரும் எரிச்சலூட்டும் ஒரு கனவென , பரீட்சைக்குப் படிக்காமலேயே போய்விட்டு ஹாலில் திணறுவதைச் சொன்னான் கனவுகளை நான்கு நாட்களுக்குக்
|
கவனித்து , விடிந்ததும் ஒரு குயர் ரூல்டு நோட்டில் எழுதி வைக்க ஆரம்பித்தால் , ஐந்தாம் நாள் வராதென்றான். தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால் கனவு புறமுதுகு எடுக்கும் என்றான். மீறி , நிச்சயம் வராதா என்றால் பெருவாழ்வின் பல புதிரிகளுக்கும் போல இதற்கும் நிச்சயமாகச் சொல்ல முடியாதுதானே என்று கேட்டான். கத்தி , கபடாக்கள் , முள் கரண்டி அலங்காரமாக சூடு பறக்க மேஜைக்கு வந்தன ஃபிரைடு ரைஸ் தட்டுகள். அநேகமாக என் பங்கில் பாதிக்கும் மேல் காசிதான் சாப்பிட வேண்டியிருக்கும். 18 செல்லம்மாள் - புதுமைப்பித்தன் 1 செல்லம்மாளுக்கு
|
அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது ; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே , உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே , பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை , கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு , செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து
|
நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி , இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய , ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது. ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே , அவரது மனசிலிருந்து பெரும்பளு இறங்கியது. மனசிலே , மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு பெருகி அவரை
|
நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி. பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது ; அல்லது , அவரது மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து , ' போதி ' மரம் வரையில் கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை , நோய் , சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.
|
பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால் , அவர் ஏறிய சிறுசிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார். குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப் பங்கிட்டால் , பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா. 19 பிரமநாயகம்
|
பிள்ளை நான்காவது குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால் , மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப் படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி , மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும் , பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து , அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது. பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார்
|
காலமானார். சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன் விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க , பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார். சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச் சோதித்தாள் ; குணத்தினால் அல்ல , உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம். பிரமநாயகம்
|
பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி , ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில் வெளியிலும் படருகிறது. பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள் , முதலில் ரணம் காட்டி , பிறகு ஆறி மரத்துப் போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து , அதற்காக முதலாளியின் மனசைப்
|
பக்குவமடையச் செய்து , பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு , வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது , நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை. இப்படியாக , மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து , ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு , பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய
|
வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய , தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார். உளைச்சலும் செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும். காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து , சற்றுக் கலகலப்புக் குறைவாக உள்ள , மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார். அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால் நடையாகவே புறப்பட்டுத் தமது
|
வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார். பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி , செயலுள்ளவர்கள் 20 சாப்பிட்டுக் களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார். செல்லம்மாள் அன்றைப் பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது வீடு இருட்டி , வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு அடுப்பு மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில் அந்தப்
|
பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக் கிடக்குமாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார். சென்னையில் பத்து வருஷங்களையும் இப்படியாக , பிரமநாயகம் பிள்ளை கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற துணிச்சலான நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம் , சக்தியின்மை
|
மனசில் ஆழ்ந்த ஏமாற்றத்தை , கைப்பை , தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது. சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர் , அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன் , அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில் , உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள் , வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு , தற்சமயம் பிரச்சனைகளை
|
மறப்பதற்குச் சௌகரியமாக , போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது. அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத் தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட , அவருக்குப் பிரியமான காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு , கையில் உமிக்கரிச் சாம்பலுடன் புழைக்கடைக்குச் சென்றாள். 2 " இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே " என்று நடைப்படியைத்
|
தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை எச்சரித்துவிட்டு , வெளிப் புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி , ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து , நிலைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து விட்டு , தெருவில் இறங்கி நடந்தார். அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது. 21 செல்லம்மாள் ,
|
பேச்சின் போக்கில் , அதாவது முந்திய நாள் இரவு , நெஞ்சு வலிக்கு ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது , " வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம் ; வரும்போது நெல்லிக்காய் அடையும் , ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும் ” என்று சொல்லி விட்டாள். பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம் ; பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா. " அதற்கு என்ன , பார்த்துக்
|
கொள்ளுவோமே ! இன்னம் புரட்டாசி களியலியே ; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும் ? " என்றார். " அது சதிதான் ; இப்பமே சொன்னாத்தானே , அவுக ஒரு வளி பண்ணுவாக ! " என்று அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். ' அவுக ' என்றது கடை முதலாளிப் அவகாச பிள்ளையைத்தான். " தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே ; கடையிலேயிருந்து வரும் ; இந்த வருஷம் எனக்கு என்னவாம் ? " என்று கேட்டாள். " எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு. மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு " என்று சிரித்தார் பிரமநாயகம். வழி
|
நெடுக , ' அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு எடுத்துக் கொண்டு வருவது ? பழைய பாக்கியே தீரவில்லையே ! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா ? ' என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார். " என்னடே பெரமநாயகம் , ஏன் இத்தினி நாளிய ? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே ? வீட்டிலே எப்படி இருக்கு ? சதி , சதி , மேலே போயி அரைப் பீசு எடுத்துக்கிட்டு வா ; கையோட வடக்கு மூலையிலே , பனியன்
|
கட்டு இருக்கு பாரு , அதையும் அப்படியே தூக்கியா " என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம் , அரைக் கஜன் , பட்டு , பழுக்கா , சேலம் , கொள்ளேகாலம் , பாப்லின் , டுவில் என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை. மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி , மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு , மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார். நடைப்படியருகில் ,
|
பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை இறக்கிவைத்துவிட்டு , கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல் விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில் , இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது. பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். வீட்டில் விளக்கில்லை. உறங்கி இருப்பாள். நாளியாகலே... ' என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த
|
மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது. முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து , கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை , தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப் பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு : சுவாசம்
|
மெல்லிய இழைபோல் ஒடிக்கொண்டிருந்தது. நிமிர்ந்து பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற் கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது. சாவகாசமாக , கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள் நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத்
|
திரும்பி வந்தார். சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு , செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி , சூடு ஏறும்படித் தேய்த்துவிட்டு , கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம் இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும் தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து , கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத்
|
துண்டை விளக்கில் கரித்துப் புகையை மூக்கருகில் பிடித்தார். முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார். இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள் , புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள். உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும் 23 மயக்கம். மறுபடியும் புகையை ஊத. முனகி , சிறு குழந்தை மாதிரி அழுதுகொண்டே , " தண்ணி... " என்று கேட்டாள் செல்லம்மாள். " இந்தா , கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ "
|
என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள் மறுபடியும் பல் கிட்டிவிட்டது ; மயக்கம். பிரமநாயகம் பிள்ளை , தாம் அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார். செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப் புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது. " நீங்க எப்ப வந்திய ? அம்மெயெ எங்கே ? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா ? ” என்றாள். பிரமநாயகம் பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி , இதமாக ,
|
புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை ; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும். திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு , " அம்மா , அம்மா , ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்... துரோகி ! துரோகி... " என்று உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார். செல்லம்மாள் மறுபடியும் பிதற்ற
|
ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப் புலப்படவில்லை. ” அம்மா , அம்மா... நீ எப்போ வந்தே ?... தந்தி கொடுத்தாங்களா... ? " என்றாள். " ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்தது. உடம்புக்கு எப்படி இருக்கிறது ? ” என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு இம்மாதிரிப் பிதற்றல் வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை தொடர்ந்து ஏற்படும். " அம்மா , எனக்குக் கொஞ்சம் தண்ணி தா இவுங்க இப்படித்தாம்மா... என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக்
|
கடைக்குப் போயிடுதாக... எப்ப ஊருக்குப் போகலாம் ?... யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா ?... இனிமே நான் பொடவெயே கேக்கலே... என்னைக் கட்டிப் போடாதிய. …. மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ ! என்னெவிட்டிடுங் கன்னா ! நான் உங்களை என்ன செஞ்சேன் ?... கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா ?... நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்... அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க. " மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது. 24 வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. '
|
இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது ? கொஞ்ச தூரமா ? ” மறுபடியும் சுக்குப் பிரயோகம் செய்தார். நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது. அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும் , அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு. செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து படுத்தாள். என்ன சொல்லுகிறாள்
|
என்பது பிடிபடாமல் , காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை , " என்ன வேண்டும் ? " என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன் , சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி அகன்றது. பத்து நிமிஷம் கழியவில்லை ; செல்லம்மாள் விழித்துக் கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள். " தலையை வலிக்கிறது "
|
என்றாள் சிணுங்கிக் கொண்டே. " மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது " என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள். மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு ; காலையில் சரியாகப் போய்விடும் ” என்றார். " உம் " என்று கொண்டு கண்களை மூடியவள் , " நாக்கை வறட்டுது ; தண்ணி " என்றாள் , எழுந்து உட்கார்ந்து கொண்டு. " ஏந்திரியாதே ; விளப்போறே " என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு , " அது வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது " என்றாள். " பச்சைத்
|
தண்ணி குடிக்கப்படாது ; வெந்நிதான் உடம்புக்கு நல்லது " என்று சொல்லிப் பார்த்தார் ; தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார். 25 கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும் , " உங்களைத்தானே ; எப்ப வந்திய ? சாப்பிட்டியளா ? " என்றாள். " நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு ; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே " என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது ; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.
|
பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாக விரித்துக் கொண்டு , " முருகா " என்று கொட்டாவியுடன் உட்காரும்பொழுது , ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது. பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள் , வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை வண்டியில்
|
காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல் பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து , கன்னத்துக்கு அண்டை கொடுத்து , உதடுகள் ஒருபுறம் சுழிக்க , அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு , புழைக்கடைப்புறம் சென்றார். அவர் திரும்பிவந்து " முருகா " என்று விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கையில் , செல்லம்மாள்
|
விழித்து எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே ஏறிட்டுப் பார்த்தாள். " இப்பொ எப்படி இருக்கு ? நல்லாத் தூங்கினெ போல இருக்கே " என்றார் பிரமநாயகம் பிள்ளை. " மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது... சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை " என்று செல்லம்மாள் , தலையைச் சற்று இறக்கி , உச்சியைச் சொறிந்தபடி , புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள். " அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன் ; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது ;
|
பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா ? என்றார். " வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன் " என்றாள் செல்லம்மாள். படாது. " " நல்ல கதையாத்தான் இருக்கு ; நேத்துக் கெடந்த கெடப்பெ மறந்து போனியா ? நடமாடப் 26 " ஒங்களுக்குத்தான் என்ன , வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது " என்று சொல்லிக் கொண்டே சுருட்டி வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது. மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக்
|
கொண்டார். " பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க முடியல்லே " என்றாள். அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து , கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார். பல்லைத் தேய்த்துவிட்டு , " அப்பாடா " " அம்மாடா " என்ற அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள். பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு , பதமாக இருக்கு , குடி : ஆறிப்போச்சுன்னு சொல்லாதே "
|
என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு , " சூடே இல்லையே ! அடுப்பிலே கங்கு கெடக்கா ? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க " என்றாள். " அதெ அப்பிடியே வச்சிறு ; வேறெ சூடா இருக்கு ; தாரேன் " என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார். காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு , சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக்
|
குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள் , " நீங்க என்ன சாப்பிட்டிய ? " என்றாள். " பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன் , நீ காப்பியைச் சீக்கிரம் நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன் " என்றார். குடி. " வைத்தியனும் வேண்டாம் ; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப ? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச தோசைமாவு இருந்துதே , அதெ என்ன பண்ணிய ? " என்றாள். " புளிப்பாவது கத்திரிக்காயாவது ? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன் ;
|
நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து போச்சுப் போலே ! " என்று எழுந்தார். " அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய ? நீங்க சாப்பிடுங்களேன் " என்றாள் செல்லம்மாள். 27 வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை , பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை. அடுப்பங்கரையில் ' சுர் சுர் ' என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து உட்காரவைத்துவிட்டு , " என்னத்தைச் சொன்னாலும் காதுலே
|
ஏறமாட்டேன்கிறதே ; இன்னம் என்ன சிறுபிள்ளையா ? " என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை. வேர்க்க விறுவிறுக்க , செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக் கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள். " போதும் போதும். சிரிக்காதே ; வைத்தியர் வந்திருக்கிறார். ஏந்திரி " என்று அவளைக்
|
கையைப் பிடித்துத் தூக்கினார். ” இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன். " " நீ ஏந்திரி " என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார். " நீங்க போங்க. நானே வருதேன் " என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு , தள்ளாடிப் பின் தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள். வைத்தியன் நாடியைப் பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான். " அம்மா , இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப் போச்சு. தெகன சக்தியே இல்லியே ! இன்னும்
|
மூணு நாளைக்கு வெறும் பால் கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம். காப்பியைக் கொஞ்ச நாளைக்கி நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும் பால். மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது. ஐயா , மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க. இந்தத் தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க ; நான் மூணு நாள் கழிஞ்சு வருகிறேன் " என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியேறினான். " பாத்துப் பாத்து , நல்ல வைத்தியனைத் தேடிப்
|
புடிச்சாந்திய ; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம் ; ஆய் ! நான் என்ன காச்சக்காரியா ? ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும் ? மனுசான்னா மயக்கம் வாறதில்லையா ! வந்தா , வந்த வளியாப் போகுது " என்றாள் செல்லம்மாள். இந்தச் சமயத்தில் வெளியில் , " ஐயா , ஐயா ! " என்று ஒரு குரல் கேட்டது. 28 " என்ன , முனுசாமியா ! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு விட்டாகளாக்கும். வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே ; நேத்துத் தப்பினது மறு பிழைப்பு ; நாளைக்கு முடிஞ்சா வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி , நீ எனக்கு ஒரு காரியம்
|
செய்வாயா ? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது பாரு ; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா என்று அனுப்பினார். " என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க " என்றாள் செல்லம்மாள். " அடெடே ! மறந்தே போயிட்டேன். நேத்துப் பொடவை எடுத்தாந்து வச்சேன் ; உனக்கு எது புடிச்சிருக்கு பாரு. வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம் " என்று மூட்டையை எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை. " விடியன்னையே
|
மூட்டையைப் பாத்தேன் ; கேக்கணும்னு நெனச்சேன் ; மறந்தே போச்சு " என்று கூறிக்கொண்டே மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். " எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு ; என்ன வெலையாம் ? " என்றாள். " அதெப்பத்தி ஒனக்கென்ன ? புடிச்சதெ எடுத்துக்கோ " என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு , மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோத்தில் வைத்தார். " கண்டமானிக்குக் காசெச் செலவு பண்ணிப்புட்டு , பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய. நான் இப்பவே சொல்லிப் பிட்டேன் " என்று
|
கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள். வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு , கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15 வாங்கி வரும்படியும் , சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும் முனிசாமியிடம் சொல்லியனுப்பினார். அன்று பாயில் தலை சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே போயிற்று. r க்ஷிணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருஷை செய்ததன் பயனாக , அடுப்பில் கிடந்த பால் கஞ்சி , பசை மாதிரிக் குளு குளு என்றாகிவிட ,
|
பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட , மறுபடியும் பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன. அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல் மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் 29 மயங்கிக் கிடந்தாள். செத்துப் போய் விடுவோமோ என்ற பயம் அவளுக்கு
|
ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில் மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன. " எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக வருது , வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை " என்றாள் செல்லம்மாள். “ உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி இருக்கிறது. சொல்லுகிறபடி , ஆடாமெ அசங்காமெ படுத்துக் கிடந்தாத்தானே ! பயப்பட வேண்டாம் ; எல்லாம் சரியாகப் போயிடும் " என்றார் பிரமநாயகம் பிள்ளை. அவருக்கும் உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது. " கொஞ்ச நேரத்தில் பால்காரன் வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன்.
|
குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா ? ” என்றார். " எளுதி என்னத்துக்கு ? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா வந்துக்கிட முடியுமா ? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத் தாரியளா ? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும் " என்று சொல்லிவிட்டுச் சற்று கண்ணை மூடினாள். " இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே ஒதுக்கிக்கோ ; நான் காப்பி போட்டுத் தாரேன் " என்று அடுப்பங்கரைக்குச் சென்றார். அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர் இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது
|
பால்காரனும் வந்தான். கருப்பட்டிக் காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு , " நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் " என்று வெளியே புறப்பட்டார். " சுருங்க வந்து சேருங்க ; எனக்கு ஒருபடியா வருது " என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு , பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது. அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது
|
வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும் வருவதாகக் காணவில்லை. கவலை. கற்பனையால் பல மடங்கு பெருகித் தோன்ற , நிலைமையும் விலாசமும் தெரிவித்து , உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதிவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவர் ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில் மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக் கிடந்தது. அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்து வந்து அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக் கழுவி , அவளைத்
|
தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினார். 30 வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும் , கால் கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில் தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார். அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. " ஸார் ! உள்ளே யார் இருக்கிறது ? " என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார். " நல்ல சமயத்தில் வந்தீர்களையா ! " என்று
|
சொல்லிக்கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை. " இப்போ என்ன ? " என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார். பல் கிட்டிவிட்டிருந்தது. " ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க ; ஊசி குத்தணும் " என்றார். பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து ' ஸ்பிரிட் '
|
விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம் , இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு , மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள். டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தார். " கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால் கொடுங்கோ " என்று கேட்டார்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.