text
stringlengths 11
513
|
---|
பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச் சவுக்காரக் கட்டியைக் கொடுக்க , மௌனமாகக் கை கழுவிவிட்டு , " தூங்குகிறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள் ; இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா ; ஆஸ்பத்திரிதான் நல்லது " என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தார். முன் தொடர்ந்த பிள்ளை , " எப்படி இருக்கிறது ? " என்று விநயமாகக் கேட்க , " இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று
|
சொல்லுங்கள் ; பிறகு பார்ப்போம் ; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள் ” என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே திரும்பினார். செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள். 31 பிரமநாயகம் பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம். அவளுடைய நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. மென்மையான துணியின் மேல் அதற்கு உட்கார்ந்திருக்கப் பிரியம்
|
இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு , அவளது உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து , எங்கு அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது. " தூ தூ " என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள். சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். " உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட் டுப் போயிட்டியளே " என்று கடிந்து கொண்டாள். " நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா ? ” என்று
|
சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தார். " நான் செத்துத்தான் போவேன் போலிருக்கு ; வீணாத் தடபுடல் பண்ணாதிய " என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள். " உடம்பில் தளர்ச்சியாக இருக்கிறதால் தான் அப்படித் தோணுது ; காலைப் பிடிக்கட்டா ? " என்று மெதுவாகத் தடவிக்கொடுத்தார். " அப்பாடா ! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப் பக்கத்திலேயே இருங்க " என்று அவர் கையைச் செல்லம்மாள் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு
|
, " அம்மையெப் பாக்கணும் போல இருக்கு " என்று கண்களைத் திறக்காமலே சொன்னாள். " நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது ; அதுக்கென்ன பிரமாதம் ? " என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம் புரண்டுவிட்டதா ? ஊம் , துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால் போதும். அவ எங்கெ வரப்போறா ? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க " என்றாள் செல்லம்மாள். " நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ " என்று சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக்கொண்டு நெற்றியைத் தடவிக் கொடுத்தார். "
|
வலிக்குது. தாகமாக இருக்கு , கொஞ்சம் வெந்நி ” என்றாள். 32 வெந்நி வயத்தைப் பெரட்டும் ; இப்பந்தானே வாந்தியெடுத்தது ? " என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் , செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம் பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள். " நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது " என்றாள் மறுபடியும். " எல்லாம் தளர்ச்சியின் கோளாறுதான் ; பயப்படாதே " என்று நெஞ்சைத் தடவிக்கொடுத்தார். ஒரு விநாடி
|
கழித்து , " பசிக்குது ; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன் " என்றாள் செல்லம்மாள். " இதோ எடுத்து வாரேன் " என்று உள்ளே ஓடிச் சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார். " செல்லம்மா ! " என்று மெதுவாகக் கூப்பிட்டார். பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது. "
|
செல்லம்மா , பால் தெரைஞ்சு போச்சு ; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு ” என்றார். " ஆகட்டும் " என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள். சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை அசைத்துவிட்டாள். " ஏன் , வௌக்கை... " - விக்கலுடன் உடல் குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின , அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது. பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார். உடல்தான் இருந்தது. வைத்த கையை
|
மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன. சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். " இனிமேல் ஆவது ஒன்றுமில்லை " என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார். 33 அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது. அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார். அருகில்
|
உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக் கேட்டது. உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும் பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார். உடலை எடுத்து வந்தார். ' " செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே ; என்னமாக் கனக்கிறது ! " என்று எண்ணமிட்டார். தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது. கீழே உட்காரவைத்து , நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால் அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து
|
உடலைத் துவட்டினார். மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார். நிறை நாழி வைத்தார். செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார். கூடத்தில் மூச்சுத் திணறுவது போல்
|
இருந்தது. வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார். ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது. வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால் , தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது. அருகில் , " ஐயா ! " என்றான் முனிசாமி. " முதலாளி குடுத்தாங்க " என்று நோட்டுகளை நீட்டினான் ; " அம்மாவுக்கு எப்படி இருக்கு ? ' ' என்றான். 34 " அம்மா தவறிப்
|
போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க ; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு , முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா " என்றார். நிதானமாகவே பேசினார் ; குரலில் உளைச்சல் தொனிக்கவில்லை. பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான். பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில் மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார். அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது. பிரமநாயகம் பிள்ளை அதை உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக
|
வீசிக்கொண்டே இருந்தார். அதிகாலையில் , மனசில் வருத்தமில்லாமல் , பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது. 35 காஞ்சனை புதுமைப்பித்தன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை , அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை , இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன் ;
|
அதாவது , சரடுவிட்டு , அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன் ; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய் ; அதாவது கடவுள் , தர்மம் என்று பல நாமரூபங்களுடன் , உலக " மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது ; இதற்குத்தான் சிருஷ்டி , கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல் , அந்தப் பிரமனின் கைவேலையும்
|
பொய்தானா ? நான் பொய்யா ? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால் , தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது ? " அட சட் ! " என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த
|
விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும் ! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால் , அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும் ? உடனே எனக்கு அணைத்தேன் , எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய் , நாமும் இருட்டும் ஐக்கியமாய் , பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா ? நாமும் நம்
|
இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா ? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு ; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி ' டொடக் '
|
என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு ; மற்றப்படி சாதுவான , ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும் ! நாக்கு , சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால் , அதிலும் மனசை , கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது விளக்கை 36 என்றால் , இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா ? உள்ளங்கையில் வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக்
|
கொண்டேன். சீ ! என்ன நாற்றம் ! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது ? குமட்டல் எடுக்க , புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து , வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன். துர்நாற்றம் தாங்க முடியவில்லை , உடல் அழுகி , நாற்றம் எடுத்துப் போன பிணம் போல ; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே ! கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை ;
|
நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம் ! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன். கொட்டி தும்மல் என் மனைவியை எழுப்பிவிட்டது. " என்ன , இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை ? மணி என்ன ? " என்று கொட்டாவி விட்டாள். மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று. என்ன அதிசயம் ! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது.
|
ஊதுவத்தி வாசனை ; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி ; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது. உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா ? ” என்று கேட்டேன். " ஒண்ணும் இல்லியே " என்றாள். சற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு , " ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது ; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள் ; எனக்கு உறக்கம் வருது ; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள் " என்றாள். விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான். 37 லேசாக வீட்டிலிருந்த ஜன்னல் ,
|
வாசல் , கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது. துர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். 2 நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வெளிமுற்றத்துக்கு வந்து
|
பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது. வீட்டின் " ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும் ? " என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். ' ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில் ' அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது. " அது உன்
|
சமையல் விமரிசையால் வந்த வினை " என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன். " உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா , வேறே என்னத்தைப் பேசப் போறிய ? எல்லாம் நீங்கள் எழுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை ! ” என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள். நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு , பல்லைத் துலக்கிவிட்டு , கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன். 38 அப்போது ஒரு பிச்சைக்காரி , அதிலும் வாலிபப் பிச்சைக்காரி , ஏதோ
|
பாட்டுப் பாடியபடி , " அம்மா , தாயே ! " என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள். நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன். " உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை ? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன ? " என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி. வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா ? கும்பி கொதிக்குது தாயே ! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை ; மானத்தை மறைக்க முழத்துணி
|
குடம்மா " என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள். " நான் வேலை தாரேன் ; வீட்டோ டவே இருக்கியா ? வயத்துக்குச் சோறு போடுவேன் ; மானத்துக்குத் துணி தருவேன் ; என்ன சொல்லுதே ! " என்றாள். " அது போதாதா அம்மா ? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா ? " என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள். " என்ன , நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா ? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே " என்றாள் என் மனைவி. ' சீ ! உனக்கு என்ன பைத்தியமா ?
|
எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே ! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா ? ” என்றேன். வெளியில் நின்ற பிச்சைக்காரி ' களுக் ' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது. 39 " முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா ? நீ இப்படி உள்ளே வாம்மா " என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.
|
உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன ! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா ? மறுபடியும் பார்க்கும் போது , பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ , அது புன்சிரிப்பா ! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது ! என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது
|
நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா ? என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை ! தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும்
|
என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி , பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும் ! அடிக்கடி ' களுக் களுக் ' என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது , சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம். சாயந்தரம் இருக்கும் ; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த
|
வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன. " நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே ; ஒரு கதை சொல்லு " என்றாள் என் மனைவி. 40 " ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும்
|
போயிருக்கிறேன். அங்கே , காசியில் ஒரு கதையைக் கேட்டேன் ; உனக்குச் சொல்லட்டா ? " என்றாள். சொல்லேன் ; என்ன கதை ? " என்று கேட்டாள் என் மனைவி. " அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம் , தந்திரம் , மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை. "
|
இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு ; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு ? அந்தக் குருவுக்கு... " அதிசயம் ! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா ? கையிலிருப்பது ' சரித்திர சாசனங்கள் என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம் , அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது ' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ்
|
மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன , எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா ! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன. என்ன திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு ! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள் , ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும் ,
|
சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி ! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது ; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது. 41 " உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே
|
போயிட்டுதே " என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது. காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன ! ஏதோ ஒரு பேரு " என்றாள் பிச்சைக்காரி. என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா ? நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர். வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை , " பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம் ? " என்ற
|
பாணம் எதிரேற்றது. காஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது ? அவளை எப்படிக் காப்பாற்றுவது ? சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள். நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை
|
மூட முடியவில்லை. எப்படி முடியும் ? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது. எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது. பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை. 42 எங்கோ கதவு கிரீச்சிட்டது. திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின. நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம் ; வாய் உளறவில்லை. என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது. அவளுடையதுதானா ? எழுந்து குனிந்து கவனித்தேன்.
|
நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள். கீழே சென்று பார்க்க ஆவல் ; ஆனால் பயம் ! போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன். ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது. மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது. கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின. திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ ? 43 விடுவிடு
|
என்று மாடிக்குச் சென்றேன். அங்கே அமைதி. பழைய அமைதி. மனம் தெளியவில்லை. மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன். மனித நடமாட்டம் இல்லை. எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஒங்கியது. பிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது. வெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன். ஆனால் கீழே ! மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல். 44 கீழே இறங்கினேன் , தைரியமாகச் செல்ல முடியவில்லை. அதோ !
|
காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு , " என்ன , தூக்கம் வரவில்லையா ? ' என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன். அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா ? வந்தது போலத் தான் ஞாபகம். நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது. " என்ன , வரவரத்தான் , இப்படித் தூங்கித் தொலைக்கிறக ; காப்பி ஆறுது ! " என்று என் மனைவி எழுப்பினாள். 3 இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு
|
மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால் , மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது ? தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை , தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா ? அதே மாதிரிதான் இதுவும் , என்னைப் போன்ற ஒருவன் , ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன் , " ஸார் , எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது ;
|
ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா ? " என்று கேட்டால் , நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது ? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும் ? 45 இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ ? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ ? அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல்
|
கழித்துவிட்டார்கள். இன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை. இரவு படுக்கப் போகும்போது என் மனைவி , " காஞ்சனை , இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள் " என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று. இது என்ன சூழ்ச்சி ! இன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன். " என்ன படுக்கலியா ? " என்றாள் என் மனைவி. " எனக்கு உறக்கம் வரவில்லை "
|
என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது. " உங்கள் இஷ்டம் " என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம் ; அது வெறும் உறக்கமா ? நானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன் , சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன். பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது. 46 இதென்ன வாசனை ! பக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது. சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு
|
அவளை எழுப்பி உருட்டினேன். பிரக்ஞை வரவே , தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். " ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது " என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு. கழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது , " பயப்படாதே ; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய் " என்று மனமறிந்து பொய் சொன்னேன். அவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள். அதே சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.
|
கர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு. அதிகாரத் தோரணையிலே , " காஞ்சனை ! காஞ்சனை ! " என்ற குரல். என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல் ! கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன. 47 அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி. நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன். நடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு ! " இங்கே வா ' என்று சமிக்ஞை செய்தான். நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன். போகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான்
|
எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை. தெருவிற்குப் போனேன். " அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே " என்றான். விபூதி சுட்டது. நான் அதைக் கொண்டுவந்து பூசினேன் , அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா ! எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே ! மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. காலையில் காப்பி கொடுக்கும்போது , " இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் ! " என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல ? 48 கடவுளும்
|
கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் ' பிராட்வே ' யும் ' எஸ்பிளனேடு ' ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். டிராமில் ஏறிச் சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்து விட்டு அப்புறம் டிக்கட் வாங்கித்
|
திருவல்லிக்கேணிக்குப் போனால் அரை ' கப் ' காபி குடித்து விட்டு வீட்டுக்குப் போகலாம் ; ஆனால் வெற்றிலை கிடையாது... " கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது , அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம். " இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும். ' இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில்
|
ஈடுபட்டிருக்கும்பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார். திடாரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி , இந்தா , பிடி வரத்தை என்று வற்புறுத்தவில்லை. ' " ஐயா , திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது ? என்றுதான் கேட்டார். " டிராமிலும் போகலாம் , பஸ்சிலும் போகலாம் , கேட்டுக்கேட்டு நடந்தும் போகலாம் ; மதுரைக்கு வழி வாயிலே என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை. " நான் மதுரைக்குப் போகவில்லை ; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன் ; எப்படிப் போனால் சுருக்க வழி ? என்றார் கடவுள் இரண்டுபேரும் விழுந்து விழுந்து
|
சிரித்தார்கள். சாடி மோதித் தள்ளிக் கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள். மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு ; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு ; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை ; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு ; எந்த ஜனக் கும்பலிலும் , எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதி தீட்சண்யமான கண்கள் ; காரிக்கம் ஷர்ட் ,
|
காரிக்கம் வேஷ்டி , காரிக்கம் மேல் அங்க வஸ்திரம். வழி கேட்டவரைக் கந்தசாமி பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம் , அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம். 49 தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல நரைத்த சிகை , கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக்கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கரேலென்று , நாலு திசையிலும் சுழன்று ,
|
சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கவிழ்ந்தது. சிரிப்பு ? -அந்தச் சிரிப்பு , கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது. ரொம்பத் தாகமாக இருக்கிறது என்றார் கடவுள். " இங்கே ஜலம் கிலம் கிடைக்காது ; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம் ; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல் என்றார் கந்தசாமிப் பிள்ளை. வாருங்களேன் , அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம் என்றார் கடவுள். கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர் , தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர். * '
|
சரி , வாருங்கள் போவோம் என்றார் , ” பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால் ? ' என்ற சந்தேகம் தட்டியது. ' துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான் ' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம். இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின்தொடர்ந்தார். இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங்கொடுக்காமல் , “ சூடா , ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி ! என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை. ' தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப்
|
காப்பிகள் என்று சொல் என்றார் கடவுள். அப்படி அல்ல ; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும் என்று தமிழ்க்கொடி நாட்டினார் பிள்ளை முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். நல்ல உயரமான கட்டடமாக இருக்கிறது ; வெளுச்சமும் நன்றாக வருகிறது என்றார். பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ ? கோவில் கட்டுகிறதுபோல என்று நினைத்துக்கொண்டாராக்கும் ! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள் என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை , கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம்
|
நடுநடுங்கியது. அப்படி என்றால்... ? என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும் ? என்று கேட்டார் கடவுள். 50 ' ஓ ! அதுவா ? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி , உத்யோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே , பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம் ; அதன்படி இந்த ஈ , கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துத்தான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள் என்றார் கந்தசாமிப்
|
பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டு விட்டதோ என்று சந்தேகித்தார். கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தை விட்டு வெளுயே வர முயன்று கொண்டிருந்தது. ' இதோ இருக்கிறதே ! என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்து விட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது. * ' என்ன ஐயா , எச்சிலைத் தொட்டு விட்டாரே...
|
இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும் என்றார் பிள்ளை. ஈயை வர விடக்கூடாது. ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம் ' என்று முனகிக் கொண்டார் கடவுள். பையன் இரண்டு ' கப் ' காப்பி கொண்டு வந்து வைத்தான். கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது. " நம்முடைய லீலை " என்றார் கடவுள். உம்முடைய லீலை இல்லைங்காணும் , ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கறான் ; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே என்று காதோடு காதாய்ச் சொன்னார்
|
கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்னையைத் தீர்த்து விட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு. ' சிக்கரிப் பவுடர் என்றால்... ? என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள் , சிக்கரிப் பவுடர் , காப்பி மாதிரிதான் இருக்கும் ; ஆனால் காப்பி அல்ல ; சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி ' என்றார் கந்தசாமிப் பிள்ளை. தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள். பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது , கடவுள் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார் ; கந்தசாமிப் பிள்ளை
|
திடுக்கிட்டார். 51 ' சில்லறை கேட்டால் தரமாட்டேனா ? அதற்காக மூன்றணா பில் எதற்கு ? கண்ணைத் துடைக்கவா , மனசைத் துடைக்கவா ? என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம் என்றார் கடவுள். என்றார் ' அப்படியானால் சில்லறையை வைத்துக் கொண்டு வந்திருப்பீர்களே ? ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டு விட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக , வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதிமூன்று சரியா ? பார்த்துக்கொள்ளும் சாமியாரே ! நீங்கள் சொல்லிவிட்டால்
|
நமக்கும் சரிதான் ; எனக்குக் கணக்கு வராது என்றார் கடவுள். ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி. வெளுயே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள். கடவுள் , தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுகளில் ஐந்தாவது மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார். கந்தசாமிப் பிள்ளைக்கு , பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார் * ' கள்ள நோட்டு ; என்னை ஏமாற்றப் பார்த்தான் ; நான் அவனை
|
ஏமாற்றிவிட்டேன் என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது. என் கையில் கொடுத்தால் , பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக்கொண்டு வந்திருப்பேனே ! ' * என்றார் கந்த சாமிப் பிள்ளை. ' சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டாரா இல்லையா ? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக் கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு ; அனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன் ' என்றார் கடவுள். வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடை பெற்றுக் கொள்ளுவது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு. '
|
திருவல்லிக்கேணிக்குத்தானே ? வாருங்கள் டிராமில் ஏறுவோம் என்றார் கந்தசாமிப் அது வேண்டாம் ; எனக்குத் தலை சுற்றும் ; மெதுவாக நடந்தே போய்விடலாம் என்றார் பிள்ளை. கடவுள். 52 * ' ஐயா , நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது ; ரிக்ஷாவிலே ஏறிப்போகலாமே என்றார் கந்தசாமிப் பிள்ளை , நாம்தான் வழி காட்டுகிறோமே ; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன ? என்பதுதான் அவருடைய கட்சி. நர வாகனமா ? அதுதான் சிலாக்கியமானது என்றார் கடவுள். இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்கள். சாமி
|
, கொஞ்சம் இருங்க ; வௌக்கை ஏத்திக்கிறேன் என்றான் ரிக்ஷாக்காரன். பொழுது மங்கி , மின்சார வெளுச்சம் மிஞ்சியது. ' இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகிவிட்டோமே ! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது ; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே , இப்படிச் சந்திக்க வேண்டும் என்றால்... " கடவுள் சிரித்தார். பல் , இருட்டில் மோகனமாக மின்னியது. நான் யார் என்பது இருக்கட்டும் , நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன் ' என்றார் அவர். கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில்
|
எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக் கொண்டால் விட்டு வைப்பாரா ? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார். ' சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா ? கேட்டார் கந்தசாமிப் பிள்ளை. இல்லை என்றார் கடவுள். அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்று தான் கொள்ள வேண்டும் என்றார் கந்த சாமிப் பிள்ளை. என்று பரிச்சயம் உண்டு என்றார் கடவுள். " இதென்னடா சங்கடமாக இருக்கிறது ? ' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. " உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில்
|
பரிச்சயமுண்டு ; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிச்சயமில்லை என்று கொள்வோம் ; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒருமுறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும் ; அப்பொழுதுதான்... " " பதினேழு வருஷ இதழ்களா ! பதினேழு பன்னிரண்டு இரு நூற்று நாலு. கடவுள் மனசு நடுநடுங்கியது. ' ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம் என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது. " ' தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை.
|
வருஷ சந்தா உள்நாட்டுக்கு ரூபாய் ஒன்று ; வெளுநாடு என்றால் இரண்டே முக்கால் ; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு ; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம் என்று கடவுளைச் சந்தாதாரராகச் சேர்க்கவும் முயன்றார். ” பதினேழு வால்யூம்கள் தவிர , இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓடஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா ? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக்கூடாது என்று யோசித்துவிட்டு , யாருடைய ஜீவியம் ? என்று கேட்டார் கடவுள். '
|
உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல. பத்திரிகை ஆயுளும் அல்ல ; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக் கொண்டுதான் இருப்பார் ; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு என்றார் கந்தசாமிப் பிள்ளை. இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம். என்னடா திரும்பிப் பாக்கிறே ? மோட்டார் வருது மோதிக்காதே ; வேகமாகப் போ என்றார்
|
கந்தசாமிப் பிள்ளை , * ' என்ன சாமி , நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா ? வண்டிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு என்றான் ரிக்ஷாக்காரன். வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம் ; நீ வண்டியே இஸ்துக்கினு போ ' என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை. ' தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன் ; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும் , குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக் கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் ; பாருங்கோ , நமக்கு ஒரு பழைய
|
சுவடி ஒன்று கிடைத்தது ; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை. ஏதேது , மகன் ஓய்கிற வழியாய் காணோமேஎன்று நினைத்தார் கடவுள். தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர் ? என்று கேட்டார். பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு , நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்று விடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது ; அப்பொழுதுதான் , சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு
|
வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாதி என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால் தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாய்க் குணமாக வேண்டும் ; மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக்கூடாது. இதுதான் வியாபார முறை. 54 இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா ? என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை. கடவுள் விஷயம் புரிந்தவர்போலத் தலையை ஆட்டினார். இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள் , நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம் என்று கடவுளின் வலது
|
கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை. ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா ? என்று சிரித்தார் கடவுள். அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது என்றார் கந்தசாமிப் பிள்ளை. நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். *பித்தம் ஏறி அடிக்கிறது ; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டா ? என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை. *நீ கெட்டிக்காரன்தான் ; வேறும் எத்தனையோ உண்டு என்று சிரித்தார் கடவுள். ஆமாம் , நாம் என்னத்தை யெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம் ; அதிருக்கட்டும் , திருவல்லிக்கேணியில் எங்கே ? என்றார் கந்தசாமிப் பிள்ளை. ஏழாம்
|
நம்பர் வீடு , ஆபீஸ் வெங்கடாசல முதலி சந்து என்றார் கடவுள். அடெடெ ! அது நம்ம விலாசமாச்சே ; அங்கே யாரைப் பார்க்க வேண்டும் ?'கந்தசாமிப் பிள்ளையை ! *சரியாப் போச்சு , போங்க ; நான்தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ ? இனம் தெரியவில்லையே ? என்றார் கந்தசாமிப் பிள்ளை. நானா ? கடவுள் ! என்றார் சாவகாசமாக , மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார் , கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது , வருவதாவது ! பூலோகத்தைப் பார்க்க வந்தேன் ; நான் இன்னும் சில நாட்களுக்கு
|
உம்முடைய அதிதி. கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும் ; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளுயில் சொல்லிக் கொள்ள வேண்டாம் ; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக் கூடாதுஎன்றார். அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா என்றார் கந்தசாமிப் பிள்ளை. வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள். 55 கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். " "
|
நல்லா இருக்கணும் சாமி என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன். கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது ! என்னடா , பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது ? என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை. அப்படிச் சொல்லடா அப்பா ; இத்தனை நாளா காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன ? என்றார் கடவுள். அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும் ! என்றார் கந்தசாமிப் பிள்ளை. எசமான் , நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ , சாமி !
|
நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன் ; வந்தா பாக்கணும்என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன். " மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன்தான் ! தெரியும் போடா ; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன் என்றார் கந்தசாமிப் பிள்ளை. வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல ? கடவுளுக்குக் கண்ணில்லெ ; உன்னியே சொல்ல வச்சான் , என்னியே கேக்க வச்சான் என்று சொல்லிக் கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான். கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து சிரித்தார்.
|
மனசிலே மகிழ்ச்சி , குளிர்ச்சி.இதுதான் பூலோகம் என்றார் கந்தசாமிப் பிள்ளை. " இவ்வளவுதானா ! என்றார் கடவுள். இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார். கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார். பக்தா ! என்றார் கடவுள். எதிரில் கிழவனார் நிற்கவில்லை. 56 புலித் தோலாடையும் , சடா முடியும் மானும் மழுவும் , பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு. பக்தா ! என்றார் மறுபடியும். கந்தசாமிப் பிள்ளைக்கு
|
விஷயம் புரிந்து விட்டது.ஓய் கடவுளே , இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீ வரத்தைக் கொடுத்துவிட்டு உம் பாட்டுக்குப் போவீர். இன்னொரு தெய்வம் வரும் , தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர் ; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டார் ; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல , என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும் ; மனுஷ அத்துக்குக்
|
கட்டுப்பட்டிருக்க வேண்டும் ; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் , வீட்டுக்கு ஒழுங்காக வாரும் என்றார் கந்தசாமிப் பிள்ளை. கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்திலே வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப்பட்டது. கந்தசாமிப் பிள்ளை , வாசலருகில் சற்று நின்றார். சாமி , உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா ? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா ? என்றார்.பரமசிவந்தான் சரி ; பழைய பரமசிவம். அப்போ , உங்களை அப்பா
|
என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன் , உடன்பட வேணும் என்றார் கந்தசாமிப் பிள்ளை. அப்பா என்று வேண்டாமப்பா ; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை′ என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.அப்படி உங்கள் சொத்து என்னவோ ? என்றார் கந்தசாமிப் பிள்ளை. " இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான் என்றார் கடவுள். " பயப்பட வேண்டாம் ; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார்
|
கந்தசாமிப் பிள்ளை. வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ ? ஒரு குழந்தை , அதற்கு நாலு வயது இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை 57 வளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார் , கடமையில் வழுவித் தொங்கி , குழந்தை
|
குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும் , ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடுபோட முயன்று , வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா , அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும்போது அப்பா உள்ளே நுழைந்தார். அப்பா
|
!என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக் கொண்டது. அண்ணாந்து பார்த்து எனக்கு என்னா கொண்டாந்தே? என்று கேட்டது. என்னைத்தான் கொண்டாந்தேன் என்றார் கந்தசாமிப் பிள்ளை. என்னப்பா , தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே ; பொரி கடலையாவது கொண்டாரப்படாது ? என்று சிணுங்கியது குழந்தை. பொரி கடலை உடம்புக்காகாது ; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார் கந்தசாமிப் பிள்ளை. " இதுதான் உம்முடைய குழந்தையோ ? என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.
|
கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார். சும்மா சொல்லும் ; இப்போதெல்லாம் நான் சுத்த சைவன் ; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால் , தயிர் கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை என்று சிரித்தார் கடவுள். ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து என்றார் கந்தசாமிப் பிள்ளை. இப்படி உட்காருங்கள் ; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது ; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை. கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார். மனசிலே துறுதுறுப்பும் எல்லையற்ற
|
நிம்மதியும் இருந்தன. ஒரு வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே என்று கைகளை நீட்டினார் கடவுள். ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை. எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா ; நான் என்ன அப்பிடியா ? என்று கேட்டது. 58 அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறுத்தென்பட்டது. அதென்ன தாத்தா , கன்னங் கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு ? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு என்று
|
கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிப் பேசிக்கொண்டு மடியில் எழுந்து நின்று கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம்பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது. கூச்சமா இருக்கு என்று உடம்பை நெளுத்தார் கடவுள். ஏன் தாத்தா , களுத்திலே நெருப்பு கிருப்புப்பட்டு பொத்துப் போச்சா ? எனக்கும் இந்தா பாரு என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப்போன கொப்புளத்தைக் காட்டியது. பாப்பா , அது நாகப்பளந்தாண்டி யம்மா ; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக் கொண்டேன். எனக்குப்
|
பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலே இருந்து அது அங்கியே சிக்கிச்கிச்சு ; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லையா ? என்று கேட்டார் கடவுள். வட்டும் கரித்துண்டும் இருக்கே ; நீ வட்டாட வருதியா ? என்று கூப்பிட்டது. 14 குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள். ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள். தாத்தா , தோத்துப் போனியே என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை. ஏன் ? என்று கேட்டார் கடவுள். கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம். முந்தியே
|
சொல்லப்படாதா ? என்றார் கடவுள்.ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா ?என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை. அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர , ஸ்ரீமதி , பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளுப்பட்டார்கள். இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா ; கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குந்தான் கொடுத்திருக்கு. தெரியாதா என்றார் கந்தசாமிப் பிள்ளை. 59 என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே , அந்த மாமாவா ? வாருங்க மாமா , சேவிக்கிறேன்என்று குடத்தை இறக்கி வைத்து
|
விட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது. *பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும் என்று ஆசீர்வதித்தார் கடவுள். காந்திமதி அம்மையாருக்கு ( அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர் ) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது.வாசலில் இருக்கிற அரிசி மூட்டை அப்படியே போட்டு வச்சிருந்தா ? ஞாபகமூட்டினார் கடவுள். இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பத்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக ; இவுக மறதிக்குத்தான்
|
மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னு பாக்கணும் என்றாள் , காந்திமதி அம்மாள். காதாக , *பாத்துக் கிட்டுத்தான் நிக்காறே என்றார் கடவுள் கிராமியமாக.பாத்துச் சிரிக்கணும் , அப்பத்தான் புத்தி வரும் என்றாள் அம்மையார். கடவுள் சிரித்தார். என்று கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள். அந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே என்றார் பிள்ளை காதோடு இனிமேல் இல்லை என்றார் கடவுள். கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார் ; மூட்டை அசையவே இல்லை. நல்ல இளவட்டம் ! என்று
|
சிரித்துக்கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள் : நீங்க எடுக்கதாவது ; உங்களைத்தானே , ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க ; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே ! என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.நீ சும்மா இரம்மா ; எங்கே போடனும்ணு சொல்லுதே ? என்றார் கடவுள்.இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும் ; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள். 60 கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டு விட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று. " இனிமேல் என்ன யோசனை ? என்றார் கடவுள்.
|
தூங்கத்தான் என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.தாத்தா , நானும் ஒங் கூடத்தான் படுத்துக்குவேன் என்று ஓடிவந்தது குழந்தை. " நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு என்றார் கந்தசாமிப் பிள்ளை. " என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர் ? என்று கேட்டார் கடவுள். மனுஷாள் கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் , நடந்தாகணும் ; தூங்க இஷ்டமில்லை என்றால் , பேசாமல் படுத்துக் கொண்டிருங்கள். ராத்திரியில் அபவாதத்துக்கு இடமாகும் என்றார் கந்தசாமிப் பிள்ளை. கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை
|
ஆபீசில் தரையில் உட்கார்ந்துக் கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது. ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு , அப்பனே வயமான செங்கரும்பு , காச்சிய வெந்நீருடனே கருடப்பிச்சு , கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை ( கருடப் பச்சை என்றும் பாடம் ).... என்று எழுதி விட்டு , வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு , இன்றைக்கும் பத்திரிகை போகாது என்று முனகியபடி , எழுதியதைச் சுருட்டி மூலையில்
|
வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார். வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை ; கைநிறைய மிட்டாய்ப் பொட்டலம். தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம் என்று துள்ளியது குழந்தை. எதற்காக ஓய் , ஒரு கட்டடத்தைக் கட்டி , எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது ? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ ? என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது. அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்து
|
விடுவார்களா ? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும் ; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள் ; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்து விடுகிறேன் ; இன்று பத்திரிகை போய் ஆகவேணும் என்று கையை நீட்டினார் பிள்ளை. 61 " இது யாரை ஏமாற்ற ? யார் நன்மைக்கு ? என்று சிரித்தார் கடவுள். தானம் வாங்கவும் பிரியமில்லை ; கடன் வாங்கும் யோசனையும் இல்லை ; அதனால்தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டார்களே
|
! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணைவரையில் எல்லாம் கலப்படந்தான். இது உங்களுக்குத் தெரியாதா ? என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை. கடவுள் யோசனையில் ஆழ்ந்தார். அதிருக்கட்டும் , போகரிலே சொல்லியிருக்கிறதே , கருடப்பச்சை ; அப்படி ஒரு மூலிகை உண்டா ? அல்லது கருடப்பிச்சுதானா ? என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை. பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு ; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே , இது நியாயமா ? நான் என்னத்தைக் கண்டேன் ? உம்மை உண்டாக்கினேன் ; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார் ;
|
அதற்கும் நான்தான் பழியா ?என்று வாயை மடக்கினார் கடவுள். நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்து விட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கி விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் ; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால் , இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலைஎன்றார் கந்தசாமிப் பிள்ளை. பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை ,ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே ? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது ; இதைத் தின்னு பாரு , இனீச்சுக் கெடக்கு என்று
|
கடவுளை அழைத்தது. குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டே ,பாப்பா , உதுந்தது எனக்கு , முழுசு உனக்கு ! என்றார் கடவுள். குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது. தாத்தா , முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு சொல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா ? என்று கேட்டது குழந்தை. கடவுள் விழுந்து விழுந்து சிரித்தார். அவ்வளவும் உனக்கே உனக்குத்தான் என்றார். அவ்வளவுமா ! எனக்கா ! என்று கேட்டது குழந்தை.ஆமாம். உனக்கே உனக்கு என்றார் கடவுள். *அப்புறம் பசிக்காதே !
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.