text
stringlengths
11
513
சாப்பிடாட்டா அம்மா அடிப்பாகளே ! அப்பா லேவியம் குடப்பாகளே !என்று கவலைப்பட்டது குழந்தை. பசிக்கும். பயப்படாதே ! என்றார் கடவுள். 62 தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும் , அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும் என்றார் கந்தசாமிப் பிள்ளை. *நான்தான் இருக்கிறேனே ! என்றார் கடவுள். நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன் ? என்றார் கந்தசாமிப் பிள்ளை. சில விநாடிகள் பொறுத்து , இன்றைச் செலவு போக , அந்த நூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம் ? என்றார் கந்தசாமிப் பிள்ளை.உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது
என்று சிரித்தார் கடவுள். அதற்குப் பிறகு என்ன யோசனை ? அதுதான் எனக்கும் புரியவில்லை. என்னைப்போல வைத்தியம் செய்யலாமே !உம்முடன் போட்டி போட நமக்கு இஷ்டம் இல்லை. " அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே ; லோகத்து முட்டாள் தனத்தோடே போட்டி போடுகிறீர்கள் ; பிரியமில்லை என்றால் , சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாமே ?' நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர் ; -அதில் துட்டு வருமா ? என்று சிரித்தார் கடவுள். அப்போ?எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே ; என்ன சொல்லுகிறீர் ? தேவியை வேண்டுமானாலும்
தருவிக்கிறேன்.' கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார்.எனக்கு என்னவோ பிரியமில்லை ! என்றார். பிறகு பிழைக்கிற வழி ? என்னங்காணும். பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே பிழைக்கிறது ? " உங்கள் இஷ்டம் என்றார் கந்தசாமிப் பிள்ளை. கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார். 63வாருங்கள் , போவோம் என்று ஆணியில் கிடந்த மேல் வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார். குழந்தை என்றார் கடவுள். " அதுதான் உறங்குகிறதே ; வருகிற வரையிலும் உறங்கட்டும் என்றார் பிள்ளை. கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர்
பிருகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை ; மற்றொருவர் கடவுள் ! மூன்றாவது பெண் ; -தேவி. நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார் என்று விளக்கிக்கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை ; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது. *சாமி இருக்காங்களா ; நான் வந்திருக்கேன் என்று சொல்லு என்று அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. பிள்ளையவர்களா ! வரவேணும் , வரவேணும் ; பஸ்பம் நேத்தோடே
தீர்ந்து போச்சே ; உங்களைக் காணவில்லையே என்று கவலைப்பட்டேன் என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும் , மல் வேஷ்டியும் , தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான்பகதூர் ஓடிவந்தது. எல்லோரையும் கும்பிட்டுக் கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது. " உட்காருங்கள் , உட்காருங்கள் என்றார் திவான் பகதூர். கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே , பரவாயில்லை ; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன் ; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணிவைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர
சாகரம். உங்கள் நிருத்திய கலாமண்டலியில் , வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும் என்றார் கந்தசாமிப் பிள்ளை. திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள் வாங்கின. கைகளைக் குவித்து , ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க் கட்டையிலுமாக வைத்துக் கொண்டு உம் ,உம் என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் பெயர் கூத்தனார் ; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள் என்று உறவைச் சற்று விளக்கி வைத்தார் கந்தசாமிப் பிள்ளை. நான் கேள்விப்பட்டதே இல்லை ; இதற்கு
முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா ? என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார். கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் , நாங்கள் ஆடாத இடம் இல்லைஎன்றாள் தேவி , 64என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும் ; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே , சதஸிலே சோபிக்காதே என்றுதான் யோசிக்கிறேன் என்றார் வர்ணபேத திவான் பகதூர். பெண் பார்க்க வந்தீரா , அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ ? “ என்று கேட்டாள் அம்மா , கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க ; கலைக்கும்
கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரெஸிடெண்டா இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள்தான் கறுத்திருக்கும். ** தேவி. “ உம்ம மண்டலியுமாச்ச , சுண்டெலியுமாச்சு ! என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள். அப்படிக் கோவிச்சுக்கப்படாது என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள். *இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்தமாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம்
பிச்சை வாங்கவேணும். ஒருமுறைதான் சற்றுப் பாருங்களேன் என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை. " சரி , பார்க்கிறது ; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம் ? ! என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். சரி , நடக்கட்டும் ! என்று சொல்லிக் கொண்டு இமைகளை மூடினார்.எங்கே இடம் விசாலமாக இருக்கும் ? என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள். *அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே என்றார் கடவுள். சரி என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டார்கள். சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான
குரலில் இசை எழுந்தது. "மயான ருத்திரனாம் இவன் மயான ருத்திரனாம்... கதவுகள் திறந்தன. கடவுள் புலித்தோலுடையும் , திரிசூலமும் , பாம்பும் , கங்கையும் சடையும் பின்னிப் புரள , கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார். மறுபடியும் இசை. மின்னலைச் சிக்கலெடுத்து உதறியதுபோல , ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் , கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது ; கண்களில் வெறியும் , உதட்டில் சிரிப்பும் புரண்டோட , காலைத் தூக்கினார். 65 கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று
நினைத்துப் பதறி எழுந்தார். ஓய் கூத்தனாரே , உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும். சட் ! வெறும் தெருக்கூத்தாக இருக்கு ; என்னங்காணும் , போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு என்று அதட்டினார் திவான் பகதூர். ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி , சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள். ஓய் ! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும் ? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டாரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா ? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக்கொள்ள வேணும்.
கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும் ! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதலிலே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம் , ஜாக்கிரதை ! என்றார் திவான் பகதூர். ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டு விடவில்லை.கந்தசாமிப் பிள்ளைவாள் ; நீர் ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது ; கச்சேரியும்
வைக்க முடியாது ; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம் ?' கால் மணி நேரம் கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டுபேர் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள் , தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. இரண்டுபேரும் மௌனமாக இருந்தார்கள். தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாதுபோல இருக்கே ! என்றார் கடவுள். நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை ; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை , வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே ! கடவுள் , ச்சு
என்று நாக்கைச் சூள் கொட்டினார்.அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ !' உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல்என்றார் கடவுள்.உங்களைப் பார்த்தாலோ ? என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை. *** உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம் ; உடன் இருந்து வாழ முடியாது என்றார் கடவுள். உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை. மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது. கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை , ஜீவிய சந்தா வரவு
ரூபாய் இருபத்தைந்துஎன்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை. *தாத்தா ஊருக்குப் போயாச்சா , அப்பா ? என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை வெயிலோடு போய் ச. தமிழ்செல்வன் மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஒடியாந்திருக்கு என்று புரியவில்லை. “ ஓம் மாப்பிள்ளை வல்லியாடி " என்று கேட்டதுக்குபொறு பொறுங்கிற மாதிரி கையைக் காமிச்சிட்டு விறுவிறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டுஸ்... ஆத்தாடின்னு
உட்கார்ந்தாள். “ ஓம் மாப்பள்ளை வல்லியாடி ?'அவரு... ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரமே வந்தா அவுக யேவாரம் கெட்டுப் போயிருமாம். " - “ சரி... அப்பன்னா நீ சித்த வெயில் தாழக் கிளம்பி வாறது... தீயாப் பொசுக்குற இந்த வெயில்ல ஓடியாராட்டா என்ன... " “ ஆமா. அது சரி... பொங்கலுக்கு மச்சான் அவுக வந்திருக்காகளாமில்ல... " ஆத்தாளுக்கு இப்ப விளங்கியது. அவளுடைய மச்சான் - ஆத்தாளின் ஒரே தம்பியின் மகன் தங்கராசு இன்னிக்கி நடக்கிற காளியம்மங்கோயில் பொங்கலுக்காக டவுனிலிருந்து வந்திருக்கான். அது தெரிஞ்சுதான் கழுத
இப்படி ஓடியாந்திருக்கு. “ மதியம் கஞ்சி குடிச்சிட்டு கிளம்பினியாட்டி " என்று கேட்டதுக்கு கழுதஇல்லை ” யென்கவும் ஆத்தா கஞ்சி ஊத்தி முன்னால் வைத்து குடிக்கச் சொன்னாள். உடம்பெல்லாம் காய்ஞ்சு போயி காதுல கழுத்தில ஒண்ணுமேயில்லாம கருத்துப் போன அவளைப் பார்க்கப் பார்க்க ஆத்தாளுக்குக் கண்ணீர்தான் மாலை மாலையாக வந்தது. தங்கராசு மச்சானுக்குத்தான் மாரியம்மா என்று சின்னப் பிள்ளையிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். கள்ளன் - போலீஸ் விளையாட்டிலிருந்து காட்டிலே கள்ளிப்பழம் பிடுங்கப் போகிற வரைக்கும் ரெண்டு பேரும் எந்நேரமும்
ஒண்ணாவேதான் அலைவார்கள். கடைசிக்கி இப்படி ஆகிப்போச்சே என்று ஆத்தாளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியெல்லாமோ மகளை வச்சிப் பாக்கணுமின்னு ஆசைப்பட்டிருந்தாள். பேச்சை மாற்றுவதற்காக “ அண்ணன் எங்கத்தா ” என்று கேட்டாள். “ “ நீங்க ரெண்டு பேரும் வருவீக , அரிசிச் சோறு காச்சணும்னிட்டு அரிசி பருப்பு வாங்கியாறம்னு டவுனுக்கு போனான். கஞ்சியைக் குடித்துவிட்டு சீனியம்மாளைப் பார்க்க விரைந்தாள் மாரி. சீனியம்மள்தான் மச்சான் வந்திருக்கிற சேதியை டவுணுக்கு தீப்பெட்டி ஒட்டப் போன பிள்ளைகள் மூலம் மாரியம்மாளுக்குச் சொல்லிவிட்டது. சேதி
கேள்விப்பட்டதிலிருந்தே அவள் ஒரு நிலையில் இல்லை. உடனே ஊருக்குப் போகணுமென்று ஒத்தக்காலில் நின்றாள். ஆனால் , அவள் புருஷன் உடனே அனுப்பி விடவில்லை. நாளைக் கழிச்சுப் பொங்கலுக்கு இன்னைக்கே என்ன ஊரு என்று 68 சொல்லிவிட்டான். அவ அடிக்கடி ஊருக்கு ஊருக்குன்னு கிளம்பறது அவனுக்கு வள்ளுசாப் பிடிக்கவில்லை. அவ ஊரு இந்தா மூணு மைலுக்குள்ளே இருக்குங்கிறதுக்காக ஒன்ரவாட்டம் ஊருக்குப் போனா எப்படி ? அவ போறதப் பத்திகூட ஒண்ணுமில்ல. போற வட்டமெல்லாம் கடையிலேருந்து பருப்பு , வெல்லம் அது இதுன்னு தூக்கிட்டு வேற போயிர்றா. இந்தச் சின்ன
ஊர்லே யேவாரம் ஒடுறதே பெரிய பாடா இருக்கு. இப்ப கோயில் கொடைக்குப் போணுமின்னு நிக்கா என்று வயிறு எரிந்தான். ஆனாலும் , ஒரேடியாக அவளிடம் முகத்தை முறிச்சுப் பேச அவனுக்கு முடியாது. அப்பிடி இப்பிடியென்று ரெண்டு புலப்பம் புலம்பி அனுப்பி வைப்பான். இதைப் பத்தியெல்லாம் மாரிக்கு கவலை கிடையாது. அவளுக்கு நினைத்தால் ஊருக்குப் போயிறணும். அதுவும் மச்சான் அவுக வந்திருக்கும்போது எப்பிடி இங்க நிற்க முடியும் ? அவ பிறந்து வளர்ந்ததே தங்கராசுக்காத்தான் என்கிற மாதிரி யல்லவா வளர்ந்தாள். அவள் நாலாப்புப் படிக்கிறபோது தங்கராசின்
அப்பாவுக்கு புதுக்கோட்டைக்கு மாற்றலாகி குடும்பத்தோடு கிளம்பியபோது அவள் போட்ட கூப்பாட்டை இன்னைக்கும் கூட கிழவிகள் சொல்லிச் சிரிப்பார்கள். நானும் கூட வருவேன் என்று தெருவில் புரண்டு கையைக் காலை உதறி ஒரே கூப்பாடு. அதைச் சொல்லிச் சொல்லி பொம்பிள்ளைகள் அவளிடம் , “ என்னட்டி ஒம் புருசங்காரன் என்னைக்கு வாரானாம் " என்று கேலி பேசுவார்கள். ஆனால் , அவள் அதையெல்லாம் கேலியாக நினைக்கவில்லை. நிசத்துக்குத்தான் கேட்கிறார்கள் என்று நம்புவாள். ஊர்ப் பிள்ளைகளெல்லாம் கம்மாய் தண்ணியில் குதியாளம் போடும்போது இவள் மட்டும் கம்மாய்
பக்கமே போக மாட்டாள். சும்மாத் தண்ணியிலே குதிச்சா சொறிபிடித்து மேலெல்லாம் வங்கு வத்தும். டவுன்ல படிக்கிற மச்சானுக்குப் பிடிக்காது. அதேபோல கஞ்சியக் குடிச்சி வகுறு வச்சிப்போயி மச்சான் “ ஒன்னைக் கட்ட மாட்டேன்னு சொல்லிட்டா என்னாகுறது ? சும்மா மச்சான் மச்சான் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் பெரிய மனுஷியானதும் மச்சானைப் பத்தி நினைக்கவே வெட்கமும் கூச்சமுமாயிருந்தது. கொஞ்ச நாளைக்கி. வெறும் மச்சானைப் பத்தின நினைப்போடு அப்புறம் கனாக்களும் வந்து மனசைப் படபடக்க வைத்தன. டவுனுக்கு தீப்பெட்டி ஒட்டப் போகையிலும் வரையிலும் ,
ஓட்டும்போதும் மச்சானின் நினைப்பு இருந்துகொண்டே இருக்கும். பஞ்சத்திலே பேதி வந்து அவ அய்யா மட்டும் சாகாம இருந்திருந்தா மச்சானுக்குப் பொருத்தமா அவளும் படிச்சிருப்பா. அது ஒரு குறை மட்டும் அவ மனசிலே இருந்து கொண்டிருந்தது. அதுவும் போயிருச்சு மச்சான் ஒரு தடவை அவுக தங்கச்சி கோமதி கலியாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தபோது. எந்த வித்தியாசமும் பாராம ஆத்தாளோடவும் அண்ணனோடவும் ரொம்பப் பிரியமா பேசிக்கிட்டிருந்த மச்சானை கதவு இடுக்கு வழியாப் பாத்துப் பாத்து பூரிச்சுப் போனா மாரியம்மா , மச்சானைப் பத்தின ஒவ்வொரு சேதியையும்
சேர்த்துச் சேர்த்து மனசுக்குள்ளே பூட்டி வச்சிக்கிட்டா. வருஷம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப் போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப் பத்தின நினைப்பு மட்டும் மாறவே இல்லை. அதனாலேதான் தங்கராசு அவளுக்கில்லை என்று ஆன பிறகும்கூட அவளால் அண்ணனையும் ஆத்தாளையும் போலத் துப்புரவாக வெறுத்துவிட முடியவில்லை. அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கு , மாமனும் அத்தையும் வந்தது. தங்கராசு மச்சான் கலியாணத்துக்கு பரிசம் போடத்தான் மாமனும் அத்தையும் வருவாகன்னு இருந்தபோது , வேற இடத்திலே பொண்ணையும் பாத்து பத்திரிகையும்
வச்சிட்டு சும்மாவும் போகாம் மாமா 69 அண்ணங்கிட்டே , “ கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியே வந்திரணும்பா. கோமதி கலியாணத்தை முடிச்சு வச்ச மாதிரி வேலைகளையும் பொறுப்பா இருந்து நீதான் பாத்துக் கணுமப்பா ” என்று வேறு சொல்லிவிட்டுப் போனார். அவுக அங்கிட்டுப் போகவும் ஆத்தாளிடம் வந்து அண்ணன் “ தங்கு தங்'கென்று குதித்தான். “ என்னய என்ன சுத்தக் கேணப்பயனு நெனச்சுட்டாகளா ” என்று.கோமதி கலியா ணத்துக்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அண்ணன் செய்தான்னு சொன்னா அது நாளக்கி நம்ம தங்கச்சி வந்து வாழப் போற வீடு
, நாம வந்து ஒத்தாசை செய்யாட்டா யாரு செய்வா என்று நினைத்து செய்தது. ஆனா , இப்படி நகைநட்டுக்கு ஆசைப்பட்டு மாமா அந்நியத்தில போவாகன்னு யாரு கண்டது. என்ன மாமானும் மச்சானும். என்று வெறுத்துவிட்டது அவனுக்கு.ஆனால் , அண்ணன் ஏறிக்கொண்டு பேசியபோது ஆத்தா பதிலுக்கு கூப்பாடுதான் போட்டாள். “ “ என்னடா குதிக்கே ? படிச்சு உத்தியோகம் பாக்குற மாப் பிள்ளை தீப்பெட்டியாபீசுக்கு போயிட்டு வந்து வீச்ச மெடுத்துப் போயிக் கெடக்கிற கழுதயக் கட்டுவான்னு நீ நெனச்சுக்கிட்டா அவுக என்னடா செய்வாக ” என்று ஆத்திரமாகப் பேசினாள். அப்படி
அப்போதைக்குப் பேசினாலும் அன்னைக்கு ராத்திரி செத்துபோன அய்யாவிடம் முறையீடு செய்து சத்தம் போட்டு ஒப்பாரி வைத்தாள். “ ஏ... என் ராசாவே... என்ன ஆண்டாரே ! இப்பிடி விட்டுப் போனீரே... மணவடையிலே வந்து முறைமாப்பிள்ளை நானிருக்க எவன் இவ கழுத்தில தாலி கட்டுவான்னு சொல்லி என்னச் சிறையெடுத்து வந்தீரே... இப்பிடி நிர்க்கதியா நிக்க விடவா சிறையெடுத்தீர் ஐயாவே... தம்பீ தம்பீன்னு பேகொண்டு போயி அலைஞ்சேனே... அவனைத் தூக்கி வளத்தேனே... என் ராசாவே... எனக்குப் பூமியிலே ஆருமில்லாமப் போயிட்டாகளே... " பக்கத்துப் பொம்பிளைகளெல்லாம்
வைதார்கள் , “ என்ன இவளும் பொம்பளதான... அப்பயும் இப்படியா ஒப்பாரி வச்சு அழுவாக ” என்று. பிறகு அண்ணன் வந்து , “ இப்பம் நீ சும்மாருக்கியா என்ன வேணுங்கு" என்று அரட்டவும்தான் ஒப்பாரியை நிப்பாட்டினாள். மறுநாள் அண்ணன் , “ தங்கராசு கலியாணத்துக்கு ஒருத்தரும் போகப்புடாது ” ன்னு சொன்னபோது மறுபேச்சுப் பேசாமல் ஆத்தாளும் சரியென்று சொல்லிவிட்டாள்.அவனுக்கும் நமக்கும் இனிமே என்ன இருக்குஎன்று சொல்லிவிட்டாள். ஆனால் , மாரியம்மா அப்படியெல்லாம் ஆகவிடவில்லை. பலவாறு அண்ணனிடமும் ஆத்தாளிடமும் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் மசியாமல் போக
, கடைசியில். ……. “ நீங்க யாரும் மச்சான் கலியாணத்துக்குப் போகலைன்னா நான் நாண்டுக்கிட்டுச் செத்துருவேன்என்று ஒரு போடு போட்டதும் சரியென்று அண்ணன் மட்டும் கலியாணத்துக்குப் போய்வந்தான். எம்புட்டோ கேட்டுப்பாத்தும் கலியாணச் சேதி எதையும் அவன் மாரியம்மாளுக்கோ ஆத்தாளுக்கோ சொல்லவில்லை. எல்லாம் முடிஞ்சது ” என்பதோடு நிறுத்திக்கொண்டான். 70 தன் பிரியமான மச்சானின் கல்யாணம் எப்பிடியெல்லாம் நடந்திருக்கும் என்று மாரியம்மாள் தினமும் பலவாறாக தீப்பெட்டி ஒட்டியபடிக்கே நினைத்து நினைத்துப் பார்ப்பாள். “ எங்கிட்டு இருந்தாலும்
நல்லாருக்கட்டும்என்று கண் நிறைய , மனசு துடிக்க வேண்டிக்கொள்வாள். தங்கராசு கலியாணத்துக்குப் போய்விட்டு வந்த அண்ணன் சும்மா இருக்கவில்லை. அலைஞ்சு பெறக்கி இவளுக்கு மாவில்பட்டியிலேயே அய்யா வழியில் சொந்தமான பையனை மாப்பிளை பார்த்துவிட்டான். சின்ன வயசிலே நாகலாபுரத்து நாடார் ஒருத்தர் கடையில் சம்பளத்துக்கு இருக்க மெட்ராசுக்குப் போய் வந்த பையன். மாரியம் மாளோட நாலு பவுன் நகையை வித்து மாவில்பட்டியிலேயே ஒரு கடையையும் வைத்துக் கொடுத்துவிட்டான். இத்தனைக்குப் பிறகும் , கோவில் கொடைக்கு மச்சான் வந்திருக்காகன்னு தெரிஞ்சதும்
உடனே பாக்கணுமின்னு ஓடியாந்துட்டா. அவுக எப்படி இருக்காக ? அந்த அக்கா எப்படி இருக்காக ? மச்சானும் அந்த அக்காளும் நல்லா பிரியமா இருக்காகளான்னு பாக்கணும் அவளுக்கு. ஆனா , வந்த உடனேயே மச்சானையும் அந்த அக்கா ளையும் பார்க்கக் கிளம்பிவிடவில்லை. மத்தியான நேரம் , சாப்புட்டு சித்த கண்ணசந்திருப்பாக என்று இருந்துவிட்டு சாயந்தி ரமாகப் போனாள். கட்டிலில் படுத்தவாக்கில் பாட்டையாவுடன் பேசிக் கொண்டிருந்தான் மச்சான். குடும்புடுறேன் மச்சான் என்று மனசு படபடக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனாள். தங்கராசின் அப்பத்தாளும் அந்த அக்காளும்
அடுப்படியில் வேலையாக இருந்தார்கள். பொன்னாத்தா இவளைப் பிரியத்துடன் வரவேற்றாள். அந்த அக்கா ரொம்ப லட்சணமாக இருந்தார்கள். நகைநட்டு ரொம்ப போட்ருப் பாகன்னு பாத்தா அப்படி ஒண்ணும் காணம். கழட்டி வச்சிருப்பாக என்று நினைத்துக்கொண்டாள். ரொம்ப பிரியம் நிறைந்த பார்வையுடன் அந்த அக்காளுடன் வாஞ்சையோடு பேசினாள் மாரியம்மா. பேசிக்கிட்டிருங்க , இந்தா வாரேன்னு பொன்னாத்தா கடைக்கு ஏதோ வாங்கப் போகவும் மாரியம்மா அந்த அக்காளிடம் இன்னும் நெருங்கி கிட்ட உட்கார்ந்து கொண்டு கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டாள். ரகசியமான , அதே சமயம் ரொம்பப்
பிரியம் பொங்கிய குரலில் , “ “ யக்கா... மாசமாயிருக்கிகளா ” என்று ஆர்வத்துடன் கேட்டாள். பட்டென்று அந்த அக்கா ஒரு நெடிப்புடன் ,ஆம , அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்பம் " என்று சொல்லிவிட்டாள். மாரியம்மாளுக்குத் தாங்க முடிய வில்லை. அதைச் சொல்லும்போது லேசான சிரிப்புடன்தான் அந்த அக்கா சொன்னாலும் அந்த வார்த்தைகளில் ஏறியிருந்த வெறுப்பும் சூடும் அவளால் தாங்க முடியாததாக , இதுநாள் வரையிலும் அவள் கண்டிராததாக இருந்தது. ஒரு ஏனத்தைக் கழுவுகிற சாக்கில் வீட்டின் பின்புறம் போய் உடைந்து வருகிற மனசை அடக்கிக் கொண்டாள். உள்ளே மச்சான்
அவுக பேச்சுக்குரல் கேட்டது. 71 “ மாரியம்மா போயிட்டாளா ” என்று உள்ளே வந்த மச்சான் அந்த அக்காளிடம்” “ காப்பி குடிச்சிட்டியா ஜானு " என்று பிரியமாகக் கேட்டதும் படக்குனு அந்த அக்கா , “ ஆஹாகாகா... ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக... " என்று சொல்லிவிட்டது. ரொம்ப மெதுவான தொண்டையிலே பேசினாலும் அந்தக் குரல் இறுகிப்போய் வெறுப்பில் வெந்து கொதிக்கிறதாய் இருந்தது. வெளியே நின்றிருந்த மாரியம்மாளுக்கு தலையை வலிக்கிற மாதிரியும் காய்ச்சல் வர்ற மாதிரியும் படபடன்னு வந்து. கழுவின ஏனத்தை அப்படியே வைத்துவிட்டு
பின்புறமாகவே விறுவிறுவென்று வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டாள். ஆத்தாளும் அண்ணனும் கேட்டதுக்குமண்டையடிக்கிஎன்று சொல்லிவிட்டாள். சிறு வயசில் கள்ளிப்பழம் பிடுங்கப் போய் நேரங்கழித்து வரும்போது வழியில் தேடி வந்த மாமாவிடம் மாட்டிக் கொண்டு முழித்த தங்கராசின் பாவமான முகம் நினைப்பில் வந்து உறுத்தியது. தண்ணியைத் தண்ணியைக் குடித்தும் அடங்காமல் நெஞ்சு எரிகிற மாதிரியிருந்தது. அந்த அக்காளின் வீட்டில் நகைநட்டு குறையாகப் போட்டதுக்காக தங்கராசின் அம்மா ரொம்ப கொடுமைப்படுத்துகிறாளாம் என்று சீனியம்மா சொன்னதும் , அந்த அக்காள்
கொடும் வெறுப்பாகப் பேசினதும் நினைப்பில் வந்து இம்சைப் படுத்தியது. எல்லாத்துக்கும் மேலே அந்த வார்த்தைகளது வெறுப்பின் ஆழம் , தாங்க முடியாத வேதனையைத் தந்தது. ராத்திரி ஊரோடு கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது இவ மட்டும் படுத்தே கிடந்தாள். ஒவ்வொன்றாக சிறுவயதில் அவனோடு பழகினது... அய்யாவைப் பத்தி... ஆத்தாளைப் பத்தி... அண்ணனைப் பத்தி... எல்லோரும் படுகிற பாட்டைப் பத்தி.... அந்த அக்காளைப் பத்தி நினைக்கக்கூட பெருந்துன்பமாயிருந்தது. குமுறிக்கொண்டு வந்தது மனசு. ராத்திரி நேரங்கழித்து அவ புருஷன் வந்தான். ரெண்டு
நாளாய் நல்ல யேவாரம் என்றும் தேங்காய் மட்டுமே முப்பத்திரெண்டு காய் வித்திருக்கு என்றும் பொரிகடலைதான் கடைசியில் கேட்டவுகளுக்கு இல்லையென்று சொல்ல வேண்டியதாப் போச்சு என்றும் உற்சாகமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று இவள் ஏதுமே பேசாமல் ஊமையாக இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து ,“ ஏ நாயி , நாம் பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன கல்லுக்கணக்கா இருக்கே ” என்று முடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான். உடனே அணை உடைத்துக் கொண்டதுபோல ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவன் பதறிப்போய் தெரியாமல் தலையைப்
பிடித்துவிட்டேன் என்று சொல்லி , தப்புத்தான் தப்புத்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தான். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சம் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டு வந்தது. ஏதோ தான் பேசிவிட்டதற்காகத்தான் அவள் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு ரொம்ப நேரத்துக்கு அவளை வீணே தேற்றிக் கொண்டிருந்தான் அவன். 72 அழியாச்சுடர் - மௌனி வழக்கமாகக் காலையில் அவனைப் பார்க்கப் போவது போல நான் அன்று செல்லவில்லை. உதயத்திலிருந்தே உக்கிரமாக வெய்யில் அடித்தது. தெளிவுற விளங்காத ஒருவித
அலுப்பு மேலிட்டதனால் நான் வீட்டை விட்டே வெளிக் கிளம்பவில்லை. மாலையில் சென்று அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி , மிக உஷ்ணமான அன்று பகலை , என் வீட்டிலேயே கழித்தேன். நேற்று முன்தினம் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு நான் அவன் வீட்டை அடைந்தே.ன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்றபோது , தன் வீட்டின் முன் அறையில் , அவன் வழக்கம்போல் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்து இருந்த அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணித் திடீரென உட்புகச் சிறிது தயங்கினபடியே ரேழியில்
நின்றேன். என் பக்கம் பாராமலே , என்னை அவன் உள்ளே அழைத்தது திடுக்கிடத்தான் செய்தது. அவனுடைய அப்போதைத் தோற்றமும் கொஞ்சம் ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. உள்ளே ஒரே நாற்காலியும் அதன் அருகில் ஒரு மேஜையும் இருந்தன. மற்றும் எதிரில் வீதிப் பக்கம் ஜன்னல் திறந்திருந்தது. ` காபி சாப்பிட்டாகிவிட்டதா ? ” என்று கேட்டுக் கொண்டே நான் உள்ளே நுழைத்தேன்.இல்லைஎன்றான். " என்ன ? " ` ஆமாம். காலை முதல் இங்கே உட்கார்ந்தபடிதான் இருக்கிறேன் _ யோசனைகள்_எனக் கொஞ்சம் சிரித்தபடி கூறினான். என் நண்பன் சிரிப்பதை மறந்து விட்டான் என்பதும் ,
எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்ததே இல்லை என்பதும் உண்மை. அப்போது அவன் சிரித்ததும் உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத்தான் கேட்டது. அவன் பேசின தொனியும் , என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தன. மேலே நான் யோசிக்க ஆரம்பிக்குமுன் அவன் பேச ஆரம்பித்தான். அவன் சமீப காலமாக ஒருவித மனிதனாக மாறிவிட்டான். ` இங்கே வாப்பா ; இங்கே இப்படி உட்காரு ; எதிரிலே பார் ” என்று சொல்லிக்கொண்டே எழுந்து மேஜையின் மீது அவன் உட்கார்ந்து கொண்டான் ; நான் நாற்காலியில் அமர்ந்தேன். ” நான்
உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அதோ அங்கே என்ன தெரிகிறது பார் ” என்றான். இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம் , பட்ட மரம் போன்ற தோற்றத்தை அளித்துக்கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு , தலைவிரிகோலத்தில் நின்று , மௌனமாகப் புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது. ஆகாயத்தில் பறந்து திடீரென அம்மரக் கிளைகளில் உட்காரும் பட்சிகள் , உயிர் நீத்தவையேபோல் கிளைகளில் அமைந்து ஒன்றாகும். அவற்றின் குரல்கள் மரண ஒலியாக விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. சிறிது சென்று ,
ஒன்றிரண்டாகப் புத்துயிர் பெற்றுக் 73 கிளைகளை விட்டு ஜிவ்வெனப் பறந்து சென்றன. அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும் , வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள் என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக் கிளர்ச்சிக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ` என்ன ? ” என்று அவன் கேட்டது என்னைத் தூக்கிவாரிப் போடும்படி இருந்தது. ` அதோ , அந்த மரந்தான்என்றேன். ` என்ன ? மரமா ? சரிஎன்று சொல்லிக்கொண்டே
உட்கார்ந்தபடியே சிறிது குனிந்து அதைப் பார்த்துவிட்டு அவன் பேசலானான். ஆமாம் ; அதுதான் ; ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கை விரித்துத் தேடத் துழாவுவதைப் பார்த்தாயா ? ஆடி அசைந்து நிற்கிறது அது ; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை.... மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள் , கனத்து மிதந்து வந்து அதன்மேல் தங்கும்...... தாங்காது தளர்ந்து ஆடும்...... விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களிலிருந்து சுத்தப்படுத்துவதா அது.... ? அல்லது தளிர்க்கும் பொருட்டு மழைத்துளிகளுக்கு ஏங்கியா
நிற்கிறது... ? எதற்காக... ? " ` என்ன நீ பெரிய கவியாகிவிட்டாயே ! ஏன் உனக்கு இவ்வளவு வேகமும் வெறுப்பும்..... ! " என்றேன். அவன் பேச்சும் வார்த்தைகளும் எனக்குப் பிடிக்கவில்லை. சொல்லுகிறேன் கேள் : நேற்று நேற்று என்று காலத்தைப் பின்கடத்தி மனம் ஒன்பது வருஷத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்குச் சென்று நின்றது. அந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டிக் கொண்ட பிறகு என் நிலை தடுமாறிப் போய்விட்டது. என்னவெல்லாமோ என் மனம் சொல்ல முடியாத வகையில் அடித்துக்கொள்ளுகிறது. அவ்வளவுதான்... " எனச் சொல்லி நிறுத்தினான். அவன் கண்கள் , காண
முடியாத அசரீரியான ஏதோ வஸ்துவைப் பார்க்கத் துடிப்பதுபோல என்றுமில்லாதபடி ஜொலித்தன. என்னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது. ஆம் , ஒன்பது வருஷத்துக்கு முன்பு நான் கல்லூரி மாணவன். எனக்கு அப்போது வயது பதினெட்டு , அக்கால நிகழ்ச்சி ஒன்றே இன்று காலை முதல் பல்லவியாகப் பலவிதமான கற்பனையில் தோன்றுகிறது. அப்போது நான் பார்ப்பதற்கு எப்படி இருப்பேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கலாம்... நன்றாக... நீ....சரி , சரி , என் நீண்ட மூக்கு , முகத்திற்கு வெகு முன்பாக நீண்டு செல்லுபவர்களைத் திருப்பி இழுப்பது போல
வளைந்திருக்கும். அதன் கீழ் மெல்லிய உதடுகள் மிருதுவாகப் பளீரென்ற பல் வரிசைகளைப் பிறர் கண்கூசச் சிறிது காண்பிக்கும். அப்போதுதான் நான் கிராப் புதிதாகச் செய்து கொண்டேன். நீண்டு கறுத்துத் தழைத்திருந்த என் கூந்தலைப் பறிகொடுத்ததாகவே பிறர் நினைக்கும்படி , படியாத என் முன் குடுமியை , என் கையால் நான் அடிக்கடி தடவிக்கொள்ளுவேன். 74 குறுகுறுவென்ற கண்களோடு என் அழகிலேயே நான் ஈடுபட்டு மதிப்பும் கொண்டிருந்தேன். அப்போது என்னை அநேகர் பார்த்திருக்கலாம். என்னைப் பற்றிய அவர்களுடைய எண்ணங்களை நான் கண்டுகொள்ளவில்லை. இப்போதோவெனின்
நான் பார்ப்பது வறட்டுப் பார்வைதான். என்னுடைய கண்கள் வறண்டவை தாமே ! என் அழகு இளமையிலேயே முடிவடைந்து விட்டது போலும். ஆனால் , என் வாழ்க்கை இளமையில் முடியவில்லையே. அவளும் என்னைப் பார்த்தது உண்டு , ' ` அவள் யார் ? ” என்றேன் நான். ஆமாம் , அவளும் : சொல்லுவதைக் கேள். நான் கோவிலுக்குப் போய் எத்தனை வருஷமாகிறது ? அந்தத் தினத்திற்குப் பின்பு , நேற்று வரையில் நான் கோவிலுக்குப் போனதில்லை. அதற்கு முன் அடிக்கடி போய்க்கொண்டு இருந்தேன். நீயும் என்னோடு வருவதுண்டே. நான் சொல்லும் அன்றிரவிலும் நீ என் பக்கத்தில் இருந்தாய். ` அது
திருவிழா நாள் அல்ல... அவளும் வந்திருந்தாள். அவள் வருவது எனக்குத் தெரியாது. நாம் கோவிலை விட்டு வெளி வந்தபோது உள்ளே போய்க் கொண்டிருந்த அவளை இருவரும் கோவில் வாயிலில் சந்தித்தோம். அவளுக்கு அப்போது வயது பதின்மூன்று இருக்கலாம். அவள் சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையைத் திருப்பியது நானாக இருக்கலாம். ஆனால் திரும்பி , உன்னையும் கூட்டிக்கொண்டு அவள் பின்னோடு உள் செல்ல என்னை இழுத்தது எது ? எனக்குத் தெரியவில்லை. அப்போதைய சிறு பிள்ளைத்தனமாக இருக்கலாம். காதல் , அது , இது என்று காரணம் காட்டாதே.
காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. கர்வந்தான் காரணம் என்று வைத்துக் கொள். ` அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகந்தரம் அவளைத் தொடக்கூடிய அளவு அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. என் வாய் அடிக்கடி ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. ஈசுவர சந்நிதியில் நின்று தலை குனிந்து அவள் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின் வெகு சமீபத்தில் நான் நின்றிருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருகச் சரவிளக்குகள் மங்கி
வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதாகக் கண்டேன். அவன் கண்கள் , விக்கிரகத்திற்குப்பின் சென்று வாழ்க்கையின் ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டுகளித்தனபோலும் ! எவ்வளவு நேரம் அப்படி இருந்தனவோ தெரியாது.காலம்அவள் உருவில் , அந்தச் சந்நிதியில் ஓடாமல் சமைந்து நின்றுவிட்டது. தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பிய போது ஒரு பரவசம் கொண்டவனேபோல என்னையும் அறியாதே உனக்காக நான் எது செய்யவும் காத்து இருக்கிறேன் ; எதையும் செய்ய முடியும்என்று சொல்லி விட்டேன் ! நீயும் , அவளுடன் வந்தவர்களும் சிறிது
எட்டி நின்றிருந்தீர்கள். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்லை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள். அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்போதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம் எதிர்த் தூணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன என்று 75 எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது கீற்றுக்குமேலே சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம் , உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிகமருண்டு பயந்து கோபித்து முகம் சுழித்தது ;
பின்கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பி இருந்தாள். பின்னிய ஜடை பின்தொங்க , மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சென்றாள். நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சதங்கைகள் ஒலிக்கும் ஒலி அவசியம் போலும் ! வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி , வார்த்தைகளாடிக் கொண்டே கால் சதங்கைகள் கணீரென்று ஒலிக்கப்போய் விட்டாள். சந்நிதியின் மௌனம் அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில் சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குறுக்கும்
நெடுக்குமாகப் பறந்தன. " என் நண்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனம் ஓடியது. அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது. கோவில் , சந்நிதானம் , ஆம். பகலிலும் பறக்கும் வௌவால்கள் பகலென்பதையே அறியாதுதான் கோவிலில் உலாவுகின்றன. பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும். உள்ளே , இரவின் மங்கிய வெளிச்சத்தில் சிலைகள் ஜீவ களைகொண்டு நிற்கின்றன. ஆழ்ந்த அனுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிறப்பித்ததுதானா கோவில் ? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன்
பிரகாசத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் , அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும். அச்சந்நிதானம் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது ? நாம் சாயைகள்தாமா..... ? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ? _என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது , ஒரு தரம் என் தேகம் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. என் நண்பனின் பார்வை மகத்தானதாக இருந்தது. ஏதோ ஒரு வகையில் , ஒரு ரகசியத்தை உணர்ந்த அவன் பேச்சுக்கள் உன்னதமாக என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. பேச்சினால் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது என
நினைக்கும்போது அவன் சிறிது தயங்கி நிற்பான். அப்போது அவன் கண்கள் பிரகாசத்தோடு ஜொலிக்கும். அவள் சென்றாள் , பிராகாரத்தைச் சுற்றிவர. பின்னப்பட்டிருந்த அவள் கூந்தல் மெதுவாக அசைந்து ஆடியது. அவள் நடை அமுத்தலாக அவளை முன் செலுத்தியது.பின்தொடர் பின்தொடர்என என் மனத்தில் மறுக்க முடியாதபடி ஓர் எண்ணம் தோன்றியது. வெளியில் நான் வாய்விட்டுச் சொல்லவில்லை. பிராகார ஆரம்பத்தில் ஒரு வில்வ மரம் இருந்தது. அதன் இலைகளின் ஊடே நிலவு தெளிக்கப்பட்டு வெண்மைத் திட்டுகளாகப் படிந்து தெரிந்தது. பிரியமானவளே என்னைப் பார்என்று மனத்தில் நான்
சொல்லிக் கொண்டேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் ` பின்தொடர்என்று சொல்லுவதைத்தான் அவள் பார்வையில் கண்டேன். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அது தலைகீழாகத் தொங்கும் ஒரு வௌவாலின் சப்தம் ; காதில் சிரித்து மனத்தில் மரண பயத்தைக் கொடுக்கும் சப்தம். வில்வ மரத்தடியிலிருந்து அவளைத் தொடர்ந்து நோக்கி நின்றேன். பிறகு அவள் பின்தொடரச் சென்றுகொண்டு இருந்தேன். பகல் போன்று நிலவு காய்ந்தது. பின் நீண்டு தொடர்ந்த அவள் நிழலேபோன்று நானும் அவளைத் தொடர்ந்தேன். மூலைத் திருப்பத்திற்குச் சிறிது முன்பு அவள் என்னைப் பார்க்கத்
திரும்பினாள். நான் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக்கொள்ளும்படிக் கேட்டுக் கெஞ்சுவது போல 76 அவள் பார்வை இருந்தது. அவள் வருத்தத்திலும் வசீகரமாகத் தோன்றினாள். அருகில் நெருங்கிய நான் மறுபடியும் ஒரு தரம் என்ன வேண்டுமானாலும் உனக்காக என்று ஆரம்பித்தவன் முழுவதும் சொல்லி முடிக்கவில்லை. நான் திரும்பி வேகமாக வந்துவிட்டேன். அவளும் கீழ்ப் பிராகாரத்திற்குச் சென்றுவிட்டாள். வில்வ மரத்தடியில் நின்றிருந்த உன்னை அடைந்தேன். இருவரும் பேசாது வீடு சேர்ந்தோம். " அவன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தியபோது ,யார் அவள் ? எனக்கு ஞாபகமில்லையே ?
” என்று கேட்டேன். என்னுடைய கேள்வி அவன் மனத்திலேபடவில்லை. அவன் மேலே பேச ஆரம்பித்தான். எனக்கு ஆத்திரம் மூண்டது. ` அன்று முதல் நான் கோவிலுக்குப் போவதை நிறுத்திவிட்டேன் ; எதற்காக நின்றேன் என்பது எனக்குத் தெரியாது. சுபாவமாகத்தான் போவது நின்றுவிட்டது என்று நினைத்தேன். நேற்று இரவு என் மனம் நிம்மதி கொண்டு இருக்கவில்லை. எங்கேயோ அலையத் தொடங்கியது. கோவிலுக்குச் சென்று ஈசுவர தரிசனம் செய்து வரலாமெனப் புறப்பட்டேன். இரவின் நாழிகை கழித்தே சென்றேன். அதிகக் கூட்டமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய எண்ணம். பெரிய கோபுர
வாயிலைக் கடக்கும்போதே , சுவாமியின் கர்ப்பக்கிருகம் தெரியும். வெகு காலமாக , ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள்ளே சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் வழிபாட்டை முடித்துக் கொண்டு அநந்தத்திலும் உலகின் அவியாத ஒளியை உலகில்விட்டுச் சென்றதுபோலத் தோன்றின அந்தத் தீபத்தின் மறைவும் தோற்றமும். தூண்டப்படாது என்னுள்
எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது. கோவிலில் நான் நினைத்தபடி ஒருவரும் இல்லாமல் இல்லை. அவளுக்கு இப்போது இருபத்திரண்டு வயது இருக்கலாம். நாகரிகப் பாங்கில் அவள் இருந்தாள். அவளை இப்போது கோவிலில் கண்டதும் , என் மனம் வேதனை கொண்டது. எதிர்பாராது நேர்ந்த இந்தச் சந்திப்பினால் அவளிடம் நான் ஒருவகை வெறுப்புக் கொள்ளலானேன். அவள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். இப்போது என்னுடைய நாகரிகப் போக்கு எண்ணங்கள் தடுமாறி , மனமாற்றம் கொள்ளும் நிலைமையில் இருப்பதால் , அவளுடைய அமுத்தலும் நாகரிக
நாசுக்கும் எனக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்தன. நான் , முன்பு அவள் காது கேட்கச் சொன்னவற்றை நினைத்துக் கொண்டபோது , என்னையே நான் வெறுத்துக் கொள்ளாதபடி , அவள் புதுத் தோற்றம் ஆறுதல் கொடுத்தது. முழு வேகத்தோடு அவளை வெறுத்தேன். ஆனால் அவள் கடவுளின் முன்பு தியானத்தில் நிற்கும்போது தன்னுடைய மேற்பூச்சை அறவே அழித்து விட்டாள். கடவுளின் முன்பு மனிதர்கள் எவ்வளவு எழில் கொள்ள முடிகிறது , எத்தகைய மனக்கிளர்ச்சிக்கு உடன்படுதல் முடிகிறது என்பதை அப்போது நான் உணர்ந்தேன். ` அவள் தியானத்தின் மகிமை என்னைப் பைத்தியமாக்கிவிட்டது.
வெறித்து வெறுமனே செய்தது ; ஓர் இன்ப மயம் , ஒரு பரவசம். திரும்பிய அவள் என்னைக் கண்டுகொண்டுவிட்டாள். எதிரில் நின்ற தூணை அவள் சிறிது நேரம் ஊன்றிப் பார்த்தாள். என் வாக்கின் அழியாத சாட்சியாக அமைந்து நின்ற அந்த யாளியும் எழுந்து நின்று கூத்தாடியதைத்தான் நிற்கச் 77 நான் பார்த்தேன். மேலே உற்று நோக்கியபோது ஐயோ ! மற்றொரு யாளி வெகுண்டு குனிந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் பார்க்குமிடத்தைப் பார்த்து நின்ற என் மனம் பதைத்துவிட்டது. என்னை நோக்கி ஆணை இடுபவளாகத் தோன்றினாள். அவள் பார்வை என்னை ஊடுருவித் துளைத்துச்
சென்றது. ஒருவன் , தன் உள்ளூற உறைந்த ரகசியத்தை , ஒரு பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவது போல அவள் பார்வை என்னை விட்டு அகன்றது. உணர்ச்சிகள் எண்ணங்களாக மாறுமுன் , அவள் சொன்னது என்ன என்பதை மனம் புரிந்து கொள்ளுமுன் , அவள் போய்விட்டாள். குனிந்த என் தலை நிமிர்ந்தபோது அவள் மறுபடியும் என் பக்கம் திரும்பியதை நான் பார்த்தேன். ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இருமணிகள் மின்னுவதுபோல இரு சொட்டுக் கண்ணீர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது. ` நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ
காணப்போகிறாய். அவள் என்ன சொன்னாள் ? அவள் என்ன செய்யச் சொன்னாள் ? நான் என்ன செய்ய இருக்கிறது ? எல்லாம் ஒரு கனவுதானா ? அவள் பேசவில்லை. சத்தத்தில் என்ன இருக்கிறது ; பேச்சில் ? உருவில் _ சீசீ ! எல்லாம் அர்த்தமற்றவை உண்மையை உணர்த்த முடியாதவை ; எல்லாம் இருளடைகின்றன. இறுகிய பிடிப்பிலும் துவண்டு புகை போன்று நழுவுகின்றன. ஆனால் எல்லாம் மாயை என்பதை மட்டும் உணர்த்தாது மேலே அதோஎன்று காட்டியும் நாம் பார்த்து அதன் வழியே போகத் தெரிந்துகொள்ளுமுன் மறையவுந்தான் இந்தச் சுட்டு விரல்கள் இருக்கின்றன. இருண்ட வழியில் அடையும்
தடுமாற்றத்தில் அகஸ்மாத்தாகத் தாண்டிக் குதித்தாவது சரியான வழியை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கைதான் நமக்கு இருப்பது. அதோ மரத்தைப் பார். அதன் விரிக்கப்பட்ட கோடுகள் , அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது தெரியவில்லையா ? மெல்லென ஆடும்போது அது வான வெளியில் தேடுகிறது. அது குருட்டுத்தனமாகத்தானே அங்கே தேடுகிறது..... ? " நன்றாக இருட்டிவிட்டது. அவன் வெளியில் வெறித்துப்பார்த்துக் கொண்டு இருக்கும்போது , நான் சொல்லிக் கொள்ளாமலே வெளிக் கிளம்பிவிட்டேன். வீதியில் வந்ததும் உயரே உற்று நோக்கினேன். இரவின் வளைந்த
வானத்திலே கற்பலகையில் குழந்தைகள் புள்ளியிட்டதுபோல எண்ணிலா நட்சத்திரங்கள் தெரிந்தன. தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவுதான் கொட்டினும் , உருகி மடிந்துபடும் அழிவே கிடையாது போல அவைகள் ஜொலித்தன. மேலே இருப்பதை அறிய முடியாத தளர்ச்சியுடன் ஒரு பெருமூச்செறிந்தேன். நடந்து நடந்து வீட்டை அடைந்தேன். இன்று காலையில் அவனை வீட்டில் காணோம். அவன் எங்கே எதற்காகச் சென்றானோ எனக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியுமோ என்பதும் தெரியாது. எல்லாம்அவனுக்கு’த் தெரியும் என்ற எண்ணந்தான் _ அவன் என்பது இருந்தால் , 78 பிரபஞ்ச கானம் -
மௌனி அவன் அவ்வூர் வந்து , மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம் , மேல் காற்று நாளே ஆயினும் , அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக , மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன் , தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து , மாசுபட்ட ஏடுகள் , அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில் , தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால் , பளிரெனத் தோன்றுபவை சில ,
மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில் , எதையோ நினைத்து உருகுவான். சிற்சில சமயம் , இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது , தன்னை மறந்து அவன் மனம் , ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம் , தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது , தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று , அவை காற்றில் மிதந்து பிரிந்து , உலகையே கவலைமயமாக்கிவிடும். எட்டாத
தூரத்தில் வானில் புதைந்து கேலிக் கண்சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது , அவனது பாழ்பட்ட , பழைய வாழ்க்கை நினைவு எழும் கோபித்து , வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி , கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில் அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும் , அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று , அவனுக்குத் தோன்றும். அவ்வூரின் குறுகிய வீதிகள் , நோக நீண்டு உயர்ந்த வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில் , வீடுகளின்
மேற்பாகத்திலே சாய்ந்த சூரியக் கிரணங்கள் விழும்போது , ரகசியக் குகைகளின் வாய்போன்று , இருண்ட உள் பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டி நிற்கும். அது " வா " வென்ற வாய்த் திறப்பல்ல. உள்ளே சென்றதும் மறைந்துவிடும் எண்ணங்களை விழுங்க நிற்கும் அசட்டு வாய்த் திறப்புப் போன்றுதான் தோற்றமளிக்கும். அவன் , அந்தரங்கக் குகையில் மறைந்த எண்ணங்களோவெனில் , பழுக்க காய்ந்த சூட்டுக் கோலால் , எழுதப்பட்டனவே போன்று அடிக்கடி எழுந்தன. மழுங்கி மறைந்திருந்த அந்த நினைவுகளை மிகுந்த அனல் கொண்டு ஜொலித்து எழுச் செய்ய அவனுக்கு ஒரு சிறிய
குழந்தையின் அழுகை போதும் , ஒரு காகத்தின் கரைதல் போதும். மூன்று வருஷங்களுக்கு முன்னால் அவன் சென்றான். காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும் , அது நகர்ந்து சென்று கொண்டேதான் இருக்கும். ஆனாலும் அவன் பிரிந்த நேரம் அவனுக்கு அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. அந்த நிகழ்ச்சி , காலபோக்கில் , சலனமடையாது. அவனுக்கு நின்றது நின்றதுதான். அதுமுதல் , உலகிலே உலக வாழ்விலே , ஒருவகை வெறுப்பைக் கொண்டான். அப்வெறுப்பே , அவன் 79 உள்ளத்தில் கசிந்த தணலாய் கண்களில் பிரகாசித்து நின்றது. மனது மாறுதலை மிக
வேண்டும் நேரத்தில் , உலகின் சந்தோஷத்தை விட மனத்தைத் தாக்கும் துக்கம் வேறொன்றுமில்லை என்பதை அவன் உணர்ந்தான் ; அவனுக்குச் சந்தோஷமே கிடையாது. வெறுப்புத்தான் அவன் மனதில் நிறைந்திருந்தது. எட்டி , மேற்கு வெளியில் தெரிந்த சூரியன் , சிவந்து இருந்தது. கவியும் மேகம் , பற்பல வர்ணச் சித்திரமாக அதைச் சுற்றி அமைந்து , மெழுகி , மெழுகி மாறி மாறிப் பல உருவங்கள் கொண்டது. வாய்விரிந்து நின்ற ஒரு மேகக் குகையின் மேலிருந்து இறங்கிய நீண்ட வெண்மையான தொன்று புகுந்து அதனுடன் கலந்து ஒரு உருக்கொள்ளலாயிற்று. மிக அற்புதமான , உன்னத
ஜீவிகளைக் கொண்டு... அப்போது உலகமும் மஞ்சள் நிறத்தில் இன்ப வருத்தமயமாகத் தோன்றிது. அவள் கண்கள் , அடிக்கடி குறி தவறாது பார்வையை அவன்மீது வீசி எறிந்து ஜொலித்தன. மாலை வெளிச்சம் மயங்கியது. அப்போது அவள் உட்சென்று மறைந்துவிட்டாள். அவன் இருந்த வீட்டிற்கு நேர் எதிரே சிறிது தள்ளி நின்ற தன் விட்டினுள் அவள் சென்றுவிட்டாள். அடிக்கடி அவள் இவனைப் பார்ப்பது உண்டு. அதனால் , இவன் மனபோக்கு கொஞ்சம் மாறுதல் அடைய இடமேற்பட்டது. அவளது பார்வையால் வாழ்க்கை , நடுவே சிறிது வசீகரம் கொண்டது. உலகத்திலும் சிறு ஒளி உலாவுவதைக் கொஞ்சம் இவன்
உணர ஆரம்பித்தான். ஒருநாள் காலை , அவன் அரசமரத் துறைக்கு ஸ்நானம் செய்யச்சென்றான். அங்கே , அவள் குளித்துவிட்டுப் புடவை துவைத்துக் கொண்டு இருந்தாள். அவள் இடம்விட்டுச் சென்றபின் , ஸ்நானம் செய்ய எண்ணி அரசமரத்தடியில் நின்றிருந்தான். அவளுக்குப்பின் சிறு அலைகள் மிதக்கும் குளத்தின் ஜலப் பரப்பு எதிர்க்கரையின் ஓரத்தில் நரைத்த நான்கைந்து நாரைகள் , ஜலத்தில் தம் சாயலைக் கண்டு குனிந்து நின்றிருந்தன. வானவெளிச்சம் , ஜலப் பரப்பின் மேல் படர்ந்து தவித்துக் கொண்டிருந்தது. எதிர்க்கரையில் நின்ற சிறு சிறு மரங்கள் , இக்கரையில்
நிற்கும் இவளை எட்டித் தொடும் ஆர்வத்தோடு கட்டை விரல்களில் நின்று குனிந்தனவே போன்று சாய்ந்து இருந்தன. மெல்லெனக் காற்று வீசியது. குளத்தில் பூத்திருந்த அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின. அவன் மனதின் கனம் கொஞ்சம் குறைந்தது. அவன் தலைக்கு மேலே , சிறிது பின்னால் ஒரு மீன் கொத்திக் குருவி சிறகடித்துக் குனிந்து நோக்கி நின்றது. திடீரென்று ஜலத்தில் விழுந்து , ஒரு மீனைக் கொத்திப் பறந்தது ; பக்கத்து மரக்கிளையில் உட்கார்ந்தது. குளத்து மேட்டில் , ஒரு குடியானவப் பெண் சாணம் தட்டிக் கொண்டிருந்தாள். அதை , துவைத்துக் கொண்டிருந்த இவள்
பார்த்தாள். " எனக்காகத்தான் அதோ தட்டிக் கொண்டிருப்பது - நன்குலர்ந்த பின் , அடுக்கடுக்காக என்று அவள் பார்த்ததாக எண்ணிய இவன் நெஞ்சு உலர்ந்தது. - " அவன் அவ்வூர் வந்தபின் , அவள் பாடிக் கேட்டதில்லை. அவள் பாடியே மூன்று வருஷத்திற்கு மேலிருக்கும். அவள் ஒருதரம் நோய்வாய்ப்பாட்டுக் கிடந்தபோது , அவள் இருதயம் பலவீனப்பட்டு இருப்பதாகச் சொல்லிப் பரிசோதனை செய்த டாக்டர் அவள் பாடுவது கூடாதென்றார். அது முதல் , அவள் சங்கீதம் அவளுள்ளே உறைந்து கிடந்தது. அவளுக்கு வீணையிலும் பயிற்சி உண்டு. ஒரு தரம் , அவள் வீணைவாசிக்க அவன் கேட்டான்.
அதன் பிறகு அவளுடைய சங்கீதத்தைப் பற்றியும் , பிரபஞ்சத்தைப் பற்றியும்அவன் " அபிப்பிராயமும் உறுதியாகிவிட்டது " அவள்தான் சங்கீதம் ; பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது " என்று எண்ணலானான். காகத்தின் கரைதலும் , குருவிகளின் ஆரவாரமும் , மரத்திடைக் காற்றின் ஓலமும் காதுக்கு வெறுப்பாகி 80 விட்டன. அவளுடைய சங்கீதம் வெளிவிளக்கம் கொள்ளாததனால் இயற்கையே ஒருவகையில் குறைவுபட்டது போலவும் , வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான். அவன் அவ்வூர் வந்து வெகுநாட்கள் சென்றவின் ஒரு ஆடி வெள்ளிக்கிழமையன்று , அவள்
வீணை வாசிக்கக் கேட்டான். அவள் வீட்டின் உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பிரகாசமான ஒரு விளக்கு ஏற்றி மாட்டப்பட்டிருந்தது. திறந்த வாயிற்படியின் வழியாக , இருண்ட வீதியின் நடுவே குறுக்காக முற்றத்து வெளிச்சம் படர்ந்து தெரிந்தது. உள்ளே , அவள் தம்பி படித்துக் கொண்டிருந்தான். கூடத்திலிருந்து வீணை மீட்டும் நாதம் கேட்டது. அவள் வாசிக்க ஆரம்பித்தாள். இவன் , எதிர்வீட்டுத் திண்ணையில் ஒருபுறமாக இருள் மறைவில் நின்று கேட்டான். சுமார் ஒன்றரை மணி நேரம் வாசித்தாள். அவ்வளவு நேரமும் ஒரே வினாடி போலக் கழிந்துவிட்டது.
உலகமே குமுறி சங்கீத மயமானதாக நினைத்தான். அவள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே நடுவில் இவன் மனதில் பளீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. அதை உதற முடியாத ஓர் உண்மையென உணர்ந்தான். அவள் பாட்டின் பாணியும் அதைப் பலப்படுத்தியது. இவன் மனத்தில் ஒருவகைப் பயம் தோன்ற ஆரம்பித்து , உடல் குலுங்கியது. அவள் முடிக்கும் முன்பே தன் இதயம் பிளந்துவிடுமென நினைத்தான். அவள் வாசிப்பதை நிறுத்திவிட மாட்டாளா என்று துடித்துக் கொண்டே கேட்டு நின்றான். " ஆம் , அவள் பாடுவது கூடாது ; டாக்டர் சொல்லியது உண்மையானால் முடிவு நிச்சயம். ஆனால் , அவள்
முடிவு... பாட்டினாலா அவள் முடிவு ? அவர் நினைக்கும் காரணத்தினாலன்று " மனோவேகத்தின் பலனாகப் பிறந்த ஒரு உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஒரு அற்புதத் தத்துவமாக மாறியது. அதன் பின்பு , மனக் களங்கமின்றியும் கூடுமானவரையில் தன் சாயையின் சம்பந்தமற்றதுமான ஒருபுற உணர்வைக் கொண்டும் மேலே சிந்தனைகளை எழுப்புவான். அப்படியும் தான் முன் உணர்ந்ததையே மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டான் - " இயற்கை " ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டது என்ற எண்ணம் - பிரபஞ்ச கானமும் , வசீகரமும் திரண்டு அவளாக உருக்கொண்டதனால்தான் அந்தக் குறைவு என்ற நிச்சயம் ,
உறுதிப்பட்டது. நிலவு பூப்பது விரசமாகத் தோன்றியது அவனுக்கு. அந்தியில் ஆந்தைகள் பொந்துவாயில் அலறுவது வெலித்தியாகக் கேட்டது. உலக சப்தங்களே பாழ்பட்டு ஒலித்தன. தன் உன்மத்த மிகுதியில் சுருதி கலைந்த வீணையில் தேர்ச்சி பெற்ற ஒருவன் வாசிக்கும் கானங்கள்தான் இந்தச் சப்தங்கள். சுருதி ஓடி அவளிடம் ஒளிந்து கொண்டு " இயற்கை " அன்னை அளிக்கக்கூடிய , அளிக்க வேண்டிய இன்பம் பாதிக்குமேல் ( சப்த ரூபத்திலும் , காட்சி ரூபத்திலும் ) அவளிடம் அடங்கி மறைந்து போய்விட்டது. மேலே யோசிக்கும் போது , “ இழந்ததைப் பெற இயற்கைச் சக்தி ” முயலுவதையும்
, தனியாகப் பிரிந்து அவளாக உருக்கொண்ட பிரபஞ்சகானமும் , வசீகரமும் வெளியே பரந்துபட முயலுவதையும் யாரால் எவ்வளவு நாள் , எப்படித் தடுக்க முடியும் ? அவள் முடிவு பாட்டினால் " என்ற எண்ணம் வலுவாக எழுந்து நின்றது. அடிக்கடி அவன் மனது அதனால் மிகுந்த துக்கமடையும். சில மாதங்கள் சென்றன. அவனுக்கோ அவன் யோசனைகள்தான் ; கணநேரம் நீண்டு , நெங்காலமாயிற்றென்ற எண்ணந்தான்... 81 அன்று அவன் கலியாணத்தின் , மூன்றாம் நாள் , அன்று மாலை நலுங்கு நடந்து கொண்டிருந்தது... சமீப காலத்தில் அவன் வருத்தம் அதிகமாயிற்று. தன்னுள் வருத்தமே தனிப்பட்டு
அழுதுகொண்டு இரவில் இருள் வழியே உருவற்று ஊளையிட்டோடியது என்று எண்ணினான் ஒரோர் சமயம். அவள் கலியாணத்தின் முதல்நாள் இரவு அவனால் உறக்கங் கொள்ள முடியவில்லை. உலகில் அவச்சத்தம் இருளோடு கூடி மிதந்தது. இரவின் ஒளியற்ற ஆபாசத் தோற்றம்... அவன் நெடுநேரம் திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். அவள் வீட்டின் முன் அறை ஜன்னல் மூடி இருந்தது. பொருந்தாத கதவுகளின் இடைவழியே , உள் வெளிச்சத்தின் சாய்வு ஒளிரேகை தெருவிலும் , இவன் திண்ணைச் சுவரிலும் படிந்திருந்தது. இவன் உள்ளத்தையும் அது சிறிது தடவி மனஆறுதலை அளித்தது. ஒருவகை
இன்பம் கண்டான். யாரோ குறுக்காக எதிர்வீட்டின் உள்ளே நடப்பதால் அவ்வொளி ரேகை நடுநடுவே மறைந்து தெரிந்து கொண்டிருந்தது. அது இவனுக்கு வெகுபுதுமையாகத் தோன்றியது. அதையே , குறித்து நோக்குவான். " ஆம்... அவள் , நிதானமற்று , உள்ளே உலாவுகிறாள்... அடைபட்டது , வெளியே போக ஆயத்தம் கொள்ளுகிறது... ! " மேலே அவனால் யோசிக்க முடியவில்லை. அவன் மனம் துக்கம் அடைந்தது. ஆகாயத்தில் , இருட்பாய் விரிப்பின் நடுநடுவே வெளிச்சப்புள்ளி வர்ணந் தீட்டிக் கொண்டது போன்று எண்ணிலா நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது , மடியாது ,
ஐயமுற்று வினாவி நிற்பவை போன்று தோன்றின இவனுக்கு. " அவளால் , பிரபஞ்ச ஜோதியே , அழகே , குன்றிவிட்டதுதான் உண்மை ". அப்போது துக்க ஓலத்தில் வாடைக் காற்று வீச ஆரம்பித்தது. எட்டிபோகும் நரியின் ஊளை , ஒரே இடத்தில் பதிந்து பரவும் பறைச்சேரி நாய்க் குறைப்பு போன்ற மிகக் கோரமான , சப்தங்கள்தான் இருள் வெளியில் மிதந்தன. அவளிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கூவும் பிரலாபிப்புப் போன்றுதான் அந்தச் சப்தங்கள் அவன் காதில் விழுந்தன. தூரத்தில் கிழக்கு அடிவானத்திலிருந்து , புகைந்து மேலோங்கும் முகில் கூட்டம்.
நன்றாக மழை அடித்து நின்றது. தெருவில் , உறிஞ்சியது போக மீதி மழை ஜலம் வாய்க்காலாக ஓடியது. மிகுந்தது சிறு சறு ஜலத்திட்டுகளாக நின்றது. ஒருதரம் , அவள் ஜன்னலைத் திறந்து மூடினாள். ஒளித்திட்டுக்களாய்த் தோய்ந்து ஜொலித்தது தெரு முழுவதும். சிறு தூரம் விழுவது நின்றபாடில்லை. ஒரு பூனை தெரு நடுவே , குறுக்காக ஓடியபோது , வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்தது.... கல்யாணம் மூன்றாம்நாள் , நலுங்கு நடந்துகொண்டிருந்தது. கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை எதிரில் வெற்றிலைத் தாம்பாளத்தைக் கையில் ஏந்தி அவர் அதை
ஏற்றுக்கொள்வதை எதிர்பார்த்து அவள் நின்றிருந்தாள். அவள் பாட வேண்டுமென்பது அவர் எண்ணம்போலும் , சுற்றி இருந்த , மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இவளைப் பார்த்து " பாடு பாடு " என்றார்கள். இவளோ முடியாதென்று சொல்வது போன்று மௌனமாக நின்றிருந்தாள். இவள் பாடக்கூடாதென்று எண்ணியே , அவனும் எட்டிய தூணடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் எல்லோரும் , இவள் மனது நோக ஏதேதோ பேசினர். அவள் மனது வெறுப்படைந்தது. ஒருவகை அலக்ஷயம் அவள் கண்களில் தெரிந்தது. எட்டித் தூணில் சாய்ந்திருந்த அவனை ஒருதரம் பார்த்தாள். இவள்
பார்வை , தவறாது , குறி கொண்டு அவனைத் தாக்கியது. அப்போது உச்சிமேட்டிலிருந்து , ஒரு காகம் விகாரமாகக் கரைந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான் இவன். பின்னும் ஒருதரம் இவனை விழித்துப் பார்த்தாள். மதுக்குடித்த தேனீக்களைப் போன்று குறுகுறுவென்றிருந்தன அவன் விழிகள். அவள் உடம்பு ஒரு தரம் மயிர்சிலிர்த்தது. 82 திடீரென்று " நான் பாடுகிறேன் - கேட்க வேண்டுமா ? சரி என்றாள் அவள். இவன் மனதோவெனில் , நிம்மதியற்று வெடிக்கும் துக்கத்தில் ஆழ்ந்தது. அவள் விளக்கம் கொண்டு விரிவுபட எண்ணிவிட்டாள் போலும் ! அவள் பாட
ஆரம்பித்தாள். ஆரம்பித்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக மெய்மறந்தாள். சாஸ்திர வரையறுப்பை அறிந்தும் கட்டுப்பாட்டின் எல்லையை உணர்ந்தும் , உடைத்துக் கொண்டு பிரவாகம் போன்று அவள் கானம் வெளிப்பட்டது. அங்கிருந்த யாவரும் மெய்மறந்தனர். தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகி விட்டான். அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள் , காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும் , மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும் , மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி இழுப்பதாயும்
இருந்தன. மேலே , இன்னும் மேலே , போய்க் கொண்டிருந்தன... அவள் ஒரு மணி நேரம் பாடினாள். அவளுள் அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ளலாயிற்று. வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைந்து கொண்டிருந்தது.... இவன் மனப்புத்தகம் , பிரிந்து உணர்ச்சி மிகுதியில் படிக்கப்பட்டது. " காலம் " விறைத்து நின்றுவிட்டது... அந்தியின் மங்கல் வெளிச்சம் மறையுமுன் மஞ்சள் கண்டது. இவன் முகம் ஒளிகொண்டு சவக்களை பெற்றிருந்தது. கடைசிக் காகக் கூட்டத்தின் ஒருமித்த கரைதல் கூச்சல் கேட்டது. முற்றத்துக் கொட்டகையின் மீது குருவிகள்
உட்கார்ந்துகொண்டு ஆரவாரித்தன. இவன் திடீரென்று , வாய்திறந்து " ஐயோ... அதோ... சங்கீதம் , இனிமை , இன்பம் எல்லாம் திறந்த வெளியில் , நிறைகிறதே... " என்று கத்தினான் , அதே சமயம் , அவளும் கீழே சாய்ந்தாள். " இயற்கை அன்னை " தன் குறையை , நிவர்த்தித்துக் கொண்டாள். இழந்ததை , அணைத்துச் சேர்த்துக் கொண்டாள்... ஆகாயவீதி , அழகு பட்டது. மேக மலை மறைப்பினின்றும் விடுபட்ட பிறைச்சந்திரன் சோபை மிகுந்து பிரகாசித்தது. வெளியே , அவ்வூர் குறுகிய விதியே ஒரு களை கொண்டது. குளக்கரை , அரசமரத்திலிருந்து , நேர்கிழக்கே , பார்த்தால் , வளைந்த
வானம் பூமியில் புதைபடும் வரையில் , கண்வெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே , ஒரு அடர்ந்த மாந்தோப்பு. காலை நேரம் வந்தது. மூலைமுடுக்குகளிலும் , தோப்பின் இடைவெளிகளிலும் , தாமதமாக உலாவி நின்ற மங்கலை ஊர்ந்து துரத்த ஒளிவந்து பரவியது. பல பல மூலைகளிலிருந்து , பக்ஷ ¢ க் குரல்கள் கேட்டுப் பதிலளித்துக் கொண்டிருந்தன. இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில் , நெருப்பிடப்பட்டதே போன்று கிழக்கு புகைந்து , சிவந்து , தணல்கண்டது... காலைச் சூரியன் உதித்தான். சிறிது சென்று , வானவெளியை உற்றுநோக்க இயலாதபடி ஒளி மயமாயிற்று. உலகப்
பேரிரைச்சல் , ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது. மனத்தில் ஒரு திருப்தி - சாந்தி , அவன் , வீடு அடைந்தான். 83 மாலையில் , மேற்கே நோக்கும் போது மரங்களின் இடைவெளி வழியாக பரந்த வயல் வரப்புக்கள் நேர்க்கோடு போல் மறைந்து கொண்டிருந்தன. அவை விரிந்து விரிந்து சென்று அடிவானில் கலக்கும். தூரத்து வரப்புக்களில் வளர்ந்து நின்ற நெட்டைப் பனைமரங்களின் தலைகள் வானை முட்டி மறைவது போன்று தோன்றும். " வாழ்க்கை... ? ஒரு உன்னத மனவெழுச்சி.. ” அவன் பார்த்து நின்றான். குளத்துமேட்டு வறட்டிகள் உலர்ந்து அடுக்கப்பட்டு இருந்தன. 84 காட்டில் ஒரு மான்
- அம்பை அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா - நரி , முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம் , நடு , முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம் , இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள் , கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை , தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும் , உத்வேகங்களும்
கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வரைவாள் வார்த்தைகளில். இரவு நேரமா , அந்த பழைய வீட்டுக்கூடமா , கூடப்படுத்த சித்தி மாமா குழந்தைகளின் நெருக்கமா என்னவென்று தெரியவில்லை. அந்த கதைகள் வண்டின் ரீங்காரமாய் மனதில் ஒரு மூலையில் ஒலியுடன் சுழன்றவாறிருக்கின்றன. தங்கம் அத்தை அந்த பழைய தூண்களும் நடுக்கூடமும் உள்ள வீட்டில் பல பிம்பங்களில் தெரிகிறாள். பெரிய மரக்கதவின் மேல் சாய்ந்தவாறு. அகல் விளக்கை புடவை தலைப்பால்
மறைத்தபடி ஏந்தி வந்து புறையில் வைத்தபடி. தன் கணவன் ஏகாம்பரத்துக்குச் சோறிட்டவாறு. கிணற்றுச் சுவரில் ஒரு காலை வைத்து கயிற்றை இழுத்துக் கொண்டு. செடிகளுக்கு உரமிட்டவாறு. தங்கம் அத்தை அழகுக் கறுப்பு. நீவி விட்டாற்போல் ஒரு சுருக்கமும் இல்லாத முகம். , முடியில் நிறைய வெள்ளி. அத்தை வீட்டில் காலால் அழுத்தி இயக்கும் அந்தக் கால ஹார்மோனியம் உண்டு. அத்தைதான் வாசிப்பாள். தேவாரப்பாடல்களிலிருந்து வதனமே சந்திரபிம்பமோ , வண்ணான் வந்தானே வரை மெல்லப்பாடியவாறு வாசிப்பாள். கறுப்பு அலகுகள் போல நீள விரல்கள் ஹார்மோனியக்கட்டைகளின்
மேல் கறுத்தப்பட்டாம்பூச்சிகள் மாதிரிப் பறக்கும். தங்கம் அத்தையைச்சுற்றி ஒரு மர்ம ஓடு இருந்தது. மற்றவர்கள் அவளைப்பார்க்கும் கனிவிலும் , அவளைத் தடவித் தருவதிலும் , ஈரம் கசியும் கண்களிலும் அனுதாபம் இருந்தது. ஏகாம்பர மாமாவுக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அத்தையை அவர் பூ மாதிரி அணுகுவார். அவர் அத்தையை டா போட்டு விளித்து யாரும் கேட்டதில்லை. தங்கம்மா என்று கூப்பிடுவார். அப்படியும் அத்தை ஒரு புகைத்திரைக்குப்பின் தூர நிற்பவள் போல் தென்பட்டாள். முத்து மாமாவின் பெண் வள்ளிதான் இந்த மர்மத்தை உடைத்தாள். அவள்
கண்டுபிடித்தது புரிந்தும் புரியாமலும் இருந்தது. வள்ளியின் அம்மாவின் கூற்றுப்படி அத்தை பூக்கவே இல்லையாம். அப்படான்னா ?என்று எங்களில் பலர் கேட்டோம். 85 வள்ளி தாவணி போட்டவள்.அப்படான்னா அவங்க பெரியவளே ஆகலைஎன்றாள். முடியெல்லாம் நெறய வெளுத்திருக்கே ? ' அது வேற ' அதன்பின் அத்தையின் உடம்பை உற்றுக் கவனித்தோம்.பூக்காதஉடம்பு எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தோம். அவள் உடம்பு எவ்வகையில் பூரணமடையவில்லை என்று தெரியவில்லை. ஈரத்துணியுடன் அத்தை குளித்துவிட்டு வரும்போது அவள் எல்லோரையும் போலத்தான் தெரிந்தாள். முடிச்சிட்ட சிவப்பு
ரவிக்கையும் , பச்சைப் புடவையும் , முடிந்த தலையுமாய் அவள் நிற்கும்போது அவள் தோற்றம் வித்தியாசமாய்த் தெரியவில்லை. பறவையின் உடைந்த சிறகு போல , அது வெளிப்படையாக தெரியாத பொக்கையா என்று புரியவில்லை. ஒரு மாலை பட்டுபோன பெரிய மரத்தைத் தோட்டத்தில் வெட்டினார்கள். கோடாலியின் கடைசி வெட்டில் அது சரசரவென்று இலைகளின் ஒலியோடு மளுக்கென்று சாய்ந்தது. குறுக்கே வெட்டியபோது உள்ளே வெறும் ஓட்டை. வள்ளி இடுப்பில் இடித்து ,அதுதான் பொக்கைஎன்றாள். பிளவுபட்டு , தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்திக்கொண்டு , உள்ளே ஒன்றுமில்லாமல் வான் நோக்கிக்