text
stringlengths 11
513
|
---|
காத்திருப்பதா.. குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சினை உலகளவுக்கு விரிந்தது. ரொம்ப நேரமாவுங்களா ? ” என்று கேட்கப் பயமாக இருந்தது அவளுக்கு. வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை அட்மிட் பண்ணி விட்டு மெதுவாக வந்தார். உட்கார்ந்தார். ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக்கொண்டு கர்ச்சீப்பைக் கயிறாகச் சுருட்டித் தேய்த்துக்கொண்டு சுறுசுறுப்பானார். “ த பார். வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்பூச்சி மாதிரி வந்தீங்கன்னா என்ன செய்யறது ? ” வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு
|
அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது. ” டாக்டர்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு வா. டாக்டர் கையெழுத்தே இல்லையே அதிலே ! " “ அதுக்கு எங்கிட்டுப் போவணும் ? " “ எங்கேருந்து வந்தே ? " “ மூனாண்டிப்பட்டிங்க ! " கிளார்க் “ ஹத் ” என்றார். சிரித்தார். “ மூனாண்டிப்பட்டி ! இங்கே கொண்டா அந்தச் சீட்டை. ” சீட்டை மறுபடி கொடுத்தாள். அவர் அதை விசிறிபோல் இப்படித் திருப்பினார். 132 " உன் புருசனுக்கு என்ன வருமானம் ? ” “ புருசன் இல்லீங்க. " “ உனக்கு என்ன வருமானம் ? அவள் புரியாமல் விழித்தாள். “ எத்தனை ரூபா மாசம் சம்பாதிப்பே ?"
|
அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும். அப்புறம் கம்பு , கேவரகு ! " “ ரூபா கிடையாதா !... சரி சரி. தொன்னூறு ரூபா போட்டு வைக்கறேன். " “ மாசங்களா ? " “ “ பயப்படாதே. சார்ஜ் பண்ணமாட்டாங்க. இந்தா , இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு இப்படியே நேராப் போய் இடது பக்கம் - பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும். 48 ஆம் நம்பர் ரூமுக்குப் போ. " வள்ளியம்மாள் அந்தச் சீட்டை இரு கரங்களிலும் வாங்கிக் கொண்டாள். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பியிருக்க , காற்றில் விடுதலை அடைந்த
|
காகிதம்போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்குப் படிக்கவராது. 48 ஆம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பிப் போய் அந்த கிளார்க்கைக் கேட்க அவளுக்கு அச்ச்சமாக இருந்தது. ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு நோயாளிகள் உட்கார்ந்துகொண்டு , பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் சாம்பார் சாதம் நகர்ந்து கொண்டிருந்தது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன. அலங்கரித்துக்கொண்டு , வெள்ளைக் கோட் அணிந்து கொண்டு , ஸ்டெதாஸ்கோப்
|
மாலையிட்டு , பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள் , காபி டம்ளர்காரர்கள் , நர்ஸ்கள் எல்லோரும் எல்லாத் திசையிலும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்குத் தெரியவில்லை. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு ஆள் அவள் சீட்டுப் போலப் பல பழுப்புச் சீட்டுக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தான். அவன் கையில் தன் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கிக் கொண்டான். வெளியே பெஞ்சில்
|
எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்தப் பெண் அங்கே தனியாக இருக்கிறாள். சீட்டுக்களைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டுக்கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான். பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்தச் சீட்டைப் பார்த்து , " இங்க கொண்டு வந்தியா ! இந்தா , ” சீட்டைத் திருப்பிக் கொடுத்து , “ நேராய்ப் போ , " என்றான். வள்ளியம்மாள் , “ அய்யா , இடம் தெரியலிங்களே " என்றாள். அவன் சற்று யோசித்து எதிரே சென்ற ஒருவனைத் தடுத்து நிறுத்தி , “ அமல்ராஜ் , இந்த
|
133 அம்மாளுக்கு நாற்பத்தி எட்டாம் நம்பரைக் காட்டுய்யா. இந்த ஆள் பின்னாடியே போ. இவர் அங்கேதான் போறார் " என்றான். அவள் அமல்ராஜின் பின்னே ஓடவேண்டியிருந்தது. அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு கூட்டம் கூடியிருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கிக்கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும் , அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது. அரைமணி கழித்து அவள் அழைக்கப்பட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப்
|
பார்த்தான். திருப்பிப் பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்..பி. டிபார்ட்மெண்டிலிருந்து வரியா ? " இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. “ அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக் காலையிலே சரியா ஏழரை மணிக்கு வந்துடு. என்ன ? " " “ “ எங்கிட்டு வரதுங்க ? " " இங்கேயே வா , நேரா வா , என்ன ? " அந்த அறையைவிட்டு வெளியே வந்ததும் வள்ளியம்மாளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தனியாக விட்டு வந்துவிட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரிதாயிற்று. அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை.
|
ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. ஒரே ஆசாமி திரும்பத் திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. ஒரு வார்டில் கையைக் காலைத் தூக்கி , கிட்டி வைத்துக் கட்டி , பல பேர் படுத்திருந்தார்கள். ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுதுகொண்டிருந்தன. மிஷின்களும் , நோயாளிகளும் , டாக்டர்களுமாக அவளுக்குத் திரும்பவும் வழி புரியவில்லை. " அம்மா " என்று ஒரு பெண் டாக்டரைக் கூப்பிட்டு தான் புறப்பட்ட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். “ நிறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம்
|
கேட்டாங்க. பணம் கொடுக்க வேண்டாம்ன்னு சொன்னாங்க. எம் புள்ளையை அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா ! " அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டு கதவு பூட்டியிருந்தது. அப்போது அவளுக்குப் பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்றுகொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக ஒதுங்கி நின்று அழச் சொன்னான். அந்த இடத்தில் அழுவது அந்த இடத்து அஸெப்டிக் மணம்போல் எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும். 134 “ பாப்பாத்தி ! பாப்பாத்தி ! உன்னை எங்கிட்டுப் பார்ப்பேன் ? எங்கிட்டுப் போவேன் ! " என்று
|
பேசிக்கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதன் கேட்டைத் திறந்து வெளியே மட்டும் செல்லவிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு. வெளியே வந்துவிட்டாள். அங்கிருந்துதான் தொலைதூரம் நடந்து மற்றொரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபக்ம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான் ! ஆனால் வாயில்தான் மூடப்பட்டிருந்தது.
|
உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரெச்சரில் கண்மூடிப் படுத்திருப்பது தெரிந்தது. " அதோ ! அய்யா , கொஞ்சம் கதவைத் திறவுங்க. எம்மவ அங்கே இருக்கு " “ சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ். " அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான் , அவன் கேட்டது அவளுக்குப் புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக்கொண்டு யாருக்கோ அவன் வழி விட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள். பெரிய
|
டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடித்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டுவிட்டு வார்டுக்குச் சென்றார். அவருக்குக் காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது. B.M.J. யில் சமீபத்தில் புதிய சில மருந்துகளைப் பற்றி அவர் படித்திருந்தார். “ இன்னிக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே மெனின்ஜைடிஸ் கேஸ் , பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா ? " " “ இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர் ? " “ “ என்னது ? அட்மிட் ஆகலையா ? நான் ஸ்பெஸிஃபிக்காகச் சொன்னேனே ! தனசேகரன் , உங்களுக்கு ஞாபகம் இல்லை ? " “
|
இருக்கிறது டாக்டர். " " பால் ! கொஞ்சம் விசாரிச்சுட்டு வாங்க. அது எப்படி மிஸ் ஆகும் ? ” ” பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளார்க்குகளிடம் விசாரித்தார். “ எங்கேய்யா ! அட்மிட் அட்மிட்னு நீங்க பாட்டுக்கு எழுதிப் புடறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது ! " 135 “ ஸ்வாமி ! சீஃப் கேக்கறார் ? " “ அவருக்குத் தெரிஞ்சவங்களா ? " " “ இருக்கலாம். எனக்கு என்ன தெரியும் ? ” " பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ப பக்கம் வரலை. வேற யாராவது வந்திருந்தாக்கூட எல்லாரையும் நாளைக்குக் காலை 7.3 க்கு வரச்
|
சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட் காலியாகும். எமர்ஜன்ஸின்னா முன்னாலேயே சொல்லணுமில்ல. பெரியவருக்கு அதிலே இண்ட்ரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை ! உறவுக்காரங்களா ? ' வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை 7-30 வரை தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக்கொண்டு மார்பின் மேல் சாய்த்துக்கொண்டு , தலை தோளில் சாய , கைகால்கள் தொங்க
|
, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள்ரிக்ஷாவில் ஏறிக்கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள். “ what nonsense ! நாளைக்குக் காலை ஏழரை மணியா ? அதுக்குள்ள அந்தப் பெண் செத்துப்போய்டும்யா ! டாக்டர் தனசேகர் , நீங்க ஓ.பியிலே போய்ப் பாருங்க. அங்கேதான் இருக்கும் ! இந்த ரெச்சட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிபார்மெண்ட் வார்டிலே பெட் இருக்குது. கொடுக்கச் சொல்லுங்க. க்விக் ! " “ “ டாக்டர் , அது ரிஸர்வ் பண்ணி வெச்சிருக்கு ! " “ I don't care , I want that girl admitted now. Right now
|
! " பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்ததில்லை. பயந்த டாக்டர் தனசேகரன் , பால் , மிராண்டா என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளைத் தேடி ஓ.பி. டிபார்மெண்ட்டுக்கு ஓடினார்கள். வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப்பட்டிக்கே போய்விடலாம். வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம். அந்த டாக்டர்தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாகப் போய்விடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம். " சைக்கிள் ரிக்ஷா பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள் , பாப்பாத்திக்குச்
|
சரியாய்ப் போனால் வைதீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டாள். 136 ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால் டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர் வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும்வெரி நைஸ்,வெரி நைஸ்என்றார்கள். மற்றொரு கல்யாணராம'னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள் , கதாசிரியர்கள் , பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள். சகட்டுமேனிக்கு சினிமா
|
பார்த்தார்கள் , குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள் , குறுந்தாடி வைத்த புதிய தலைமுறை டைரக்டர்கள் , புதுக் கவிஞர்கள் , அரசாஙக் அதிகாரிகள் , கதம்பமான கும்பல். சிகரெட் பிடிக்கும் பெண்கள் , சத்யஜித்ரேயைத் தொடர அவர் பொலான்ஸ்கியைக் கட்டிகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார். பட்டுப்புடவை அணிந்த ஒரு சுந்தரி குத்துவிளக்கு ஏற்றினாள். எல்லோரும் சினிமா எத்தகைய சாதனம் , மனித சமுதாயத்தை எப்படி மாற்றக்கூடிய வல்லமை படைத்தது என்பது பற்றி இங்கிலீஷில் பேசினார்கள்.சினிமாவும் சமூக மாறுதலும்என்று புஸ்தகம் அச்சடித்து ஒல்லியான
|
அதை இருபது ரூபாய்க்கு விற்றார்கள். உதட்டு நுனியில் ஆங்கிலம் பேசினார்கள். சினிமா விழா ! நம் கதை இவர்களைப் பற்றி அல்ல. ஒரு சாதாரண பங்களூர் குடிமகனைப் பற்றியது. பெயர் நாராயணன். தொழில் யஷ்வந்த்புரத்து பிஸ்கட் ஃபாக்டரியில் பாக்கிங்க் செக்ஷனில். ஃபிலிம் விழாவுக்காக தேதி அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலையில் சென்று வரிசையில் நின்று தலா 11 ரூபாய்க்கு ஏழு டிக்கட் அடங்கிய புத்தகம் ஒன்றை அடித்துப்பிடித்து வாங்கி வந்துவிட்டான். கூட்டத்தைத் தடுக்க போலீஸ் மெலிதான லட்டியடித்ததில் முட்டியில் வலி. இருந்தாலும் முழுசாக வெளியே
|
வந்துவிட்டான். டிக்கட் கிட்டிவிட்டது. ஏழு படத்தில ஒரு படமாவது நன்றாக இருக்காதா.. ? நாராயணின் அகராதியில் இந்தநன்றாக ” என்பதை விளக்க வேண்டும். நன்றாக என்றால் சென்சார் செய்யப்படாத.. குறைந்த பட்சம் ஒரு கற்பழிப்புக் காட்சியாவது இருக்கக்கூடிய படம். நாராயணனின் குறிக்கோள் நவீன சினிமாவின் மைல் கல்களை தரிசித்துவிட்டு விமர்சனம் செய்வதல்ல. அதற்கெல்லாம் பண்டிதர்கள் இருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாவது ஏதாவது ஒரு சமயம் உடையில்லாமல் ஓரிரண்டு ஃப்ரேமாவது வரவேண்டும். அப்போதுதான் கொடுத்த காசு ஜீரணம். நாராயணின்
|
ஆசைகள் நாசூக்கானவை. அவன் தின வாழ்க்கையும் மன வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. தின வாழ்க்கையில் அவன் ஒரு பொறுப்புள்ள மகன். பொறுப்புள்ள அண்ணன். பக்தியுள்ள பிரஜை. பனஸ்வாடி ஆஞ்ச நேயா , ராஜாஜிநகர் ராமன் எல்லாரையும் தினசரி அல்லது அடிக்கடி தரிசிக்கின்றவன். எவ்வித ஆஸ்திக சங்கத்துக்கும் பணம் தருவான். எந்தக் கோயில் எந்த மூலைக் குங்குமமும் அவன் நெற்றியில் இடம் பெறும். நாராயணனுக்குத் திருமணம் ஆவதற்கு சமீபத்தில் சந்தர்ப்பம் இல்லை. 137 ஐந்து தங்கைகள் , அனைவரும் வளர்ந்து கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள். ஒருத்திக்காவது
|
ஆக வேண்டாமா ? பெண்களைப் பற்றி இயற்கையாகவே நாராயணன் கூச்சப்படுவான். பஸ் நிலையத்திலோ , ஃபாக்டரியிலோ அவர்களை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனை பலரும் புத்தன் , ஞானி என்று அழைப்பார்கள். அவன் மன வாழ்க்கை வேறு தரத்தது. அதில் அபார அழகு கன்னியர்கள் உலவி அவனையே எப்போதும் விரும்பினர். இன்றைய தமிழ் , இந்தி சினிமாவின் அத்தனை கதாநாயகியரும் நாராயணனுடன் ஒரு தடவையாவது பக்கத்தில் அமர்ந்து தடவிக்கொடுத்திருக்கிறார்கள். எத்தனை அழகு என்று வியந்திருக்கிறார்கள். நாராயணனுக்கு கிருஷ்னஅ என்றொரு சிநேகிதன். அவன் அடிக்கடி நாராயணனிடம்
|
கலர்கலராக சில போட்டோக்கள் காண்பிப்பான். ஐரோப்பா தேசத்து நங்கைகள் வெட்கத்தை அறைக்கு வெளியில் கழற்றி வைத்துவிட்டு தத்தம் அந்தரங்களைப் பற்றி சந்தேகத்துக்கு எவ்வித சந்தர்ப்பமும் தராமல் இதோ பார் , இதைப் பார் என்று நாராயணனைப் பார்த்துச் சிரிக்கும் படங்கள். படங்களை விட அந்தப் புத்தகங்களில் வரும் விளம்பரங்கள் , சாதனங்கள் நாராயணனை ரொம்ப வருத்தின. இதெல்லாம் நம் நாட்டில் கிடைத்தால் என்னவா ! என் போன்ற தனியனுக்கு இந்த சாதனங்கள் சிறப்பானவை. பயமோ கவலையோ இன்றி எவ்வளவு திருப்தியும் சந்துஷ்டியும் அளிக்கும். என்னதான் அழகாக
|
அச்சிடப் பெற்றிருந்தாலும் சலனமற்ற இரு பரிமாணப் படங்களைவிட சினிமாச் சலனம் சிறந்ததல்லவா ? நங்கைமார் நகர்வதைத் தரிசிக்கலாம். கேட்கலாம். கிருஷ்ணப்பா சொன்னான் , " அத்தனையும் சென்சார் செய்யாத படம் வாத்தியாரே ! நான் எதிர்த்தாப்பலே தியேட்டருக்கு வாங்கியிருக்கேன். தினம் தினம் படத்தைவிட்டு வெளியே வந்ததும் எப்படி இருந்தது சொல்லு. நானும் சொல்றேன். " நாராயணன் பார்த்த முதல் படம் ரஷ்யப்படம். சைபீரியாவின் பனிப்படலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்து எண்ணெய் கண்டுபிடித்து.. படம் பூரா ஆண்கள் , கிழவர்கள்.
|
பாதிப்படத்துக்கு மேல் பனிப்படலம். வெளியே வந்தால் போதும் என்று இரண்டு மணி நேரத்தை இரண்டு யுகமாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான். கிருஷ்ணப்பா எதிர் தியேட்டரில் பார்த்த ஃபிலிமோத்சவப் படத்தில் ஐந்து நிமிடம் விடாப்பிடியாக ஒரு கற்பழிப்பு காட்டப்பட்டதாம். கானடா தேசத்து படம். வர்ணித்தான். ” பார்க்கிறவங்களுக்கே சுந்த் ஆயிடுச்சி வாத்தியாரே ! " நாராயணன் இன்னும் ஒரு நாள் இந்த தியேட்டரில் பார்ப்பது.. அப்புறம் எதிர் தியேட்டரில் மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தான். நாராயணன் பார்த்த இரண்டாவது படம் டிராகுலா பற்றியது. படம்
|
முழுவதும் நீல நிறத்தில் இருந்தது. நீள நகங்களை வைத்துக்கொண்டு ராத்திரி 12 மணிக்கு கல்லறையிலிருந்து புறப்பட்ட டிராகுலா அந்த அழகான பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவதற்குக் கிளம்பியபோது நாராயணன் சிலிர்த்துக் கொண்டான். ஆகா , இதோ ! ரத்தம் உறிஞ்சுவதற்கு முன்பு , இதோ ஒரு கற்பழிப்பு , சிறந்த கற்பழிப்பு , அப்படியே அவள் கவுனைக் கீறிக் குதறிக் கிழித்து , உள்ளுடைகளையும் உதறிப்போட்டு , 138 மெதுவாக அங்கம் அங்கமாக அந்த நகங்களால் வருடி , அப்புறம்தான் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போகிறது என்று எதிர்பார்த்து ஏறக்குறைய நாற்காலியில்
|
சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான். அந்தப் பாழாப்போன பெண் , டிராகுலா அருகில் வந்ததும் தன் கழுத்தில் சங்கிலியில் தொங்கும் சிலுவையைக் காண்பித்துவிட வந்தவன் வந்த காரியத்தைப் பூர்த்தி செய்யாமல் , ஏன் ஆரம்பிக்கக்கூட இல்லாமல் , பயந்து ஓடிப்போய் விடுகிறான். சட் ! என்ன கதை இது ! நிச்சயம் இந்த தியேட்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சினிமாப்படங்கள் அத்தனையும் அடாஸ் தீர்மானித்து வெளியே வர , கிருஷ்ணப்பாவைச் சந்திக்கப் பயந்து , வேகமாக பஸ்ஸ்டாண்டை நோக்கி ஓட , கிருஷ்ணப்பா பிடித்துவிட்டான். என்று “ என்னாப் படம் வாத்தியாரே !
|
டாப்பு ! அப்பன் தன் பொண்ன காணாம்னுட்டு தேடிக்கிட்டு போறான். அவ , எங்க அகப்படறாத் தெரியுமா ? செக்ஸ் படங்கள் எடுக்கறவங்ககிட்ட நடிச்சிட்டு இருக்கா ! எல்லாத்தையும் காட்டிடறான் ! கொட்டகையிலே சப்தமே இல்லை.. பின் டிராப் சைலன்ஸ். " “ கிருஷ்ணா , நாளைக்கு டிக்கட் மாத்திக்கிடலாம். நீ என் தியேட்டர்லேயும் நான் உன் தியேட்டர்லேயும் பாக்கிறேன் ! " “ “ நாளைக்கு மட்டும் கேட்காதே வாத்தியாரே ! நாளைக்கு என்ன படம் தெரியுமா ? லவ் மெஷின் , பிரஞ்சுப் படம். நான் போயே யாகணும் ! " “ பிளாக்கில கிடைக்குமா ? " “ “ பார்க்கிறேன் ! துட்டு
|
ஜாஸ்தியாகும். ஏன் உன் படம் என்ன ஆச்சு. ” “ சே , பேசாதே ! மரம் செடி கொடியைக் காட்டியே எல்லா ரீலையும் ஓட்டறான். நீ எப்படியாவது எனக்கு பிளாக்கில ஒரு டிக்கட் வாங்கிடு. என்ன விலையா இருந்தாலும் பரவாயில்லை ! " 85 ரூபாய்க்கு ஒரு டிக்கட் மிகுந்த சிரமத்துடன் கிடைத்ததாக வாங்கி வந்தான். கிருஷ்ணா , “ உன் டிக்கட்டைக் கொடு " என்றான். “ இதை வித்து பார்க்க முடியுமான்னு சோதிச்சுட்டு அப்புறம் வர்றேன். நீ தியேட்டர் போயிரு ” என்றான். “ படத்தின் பெயர் லவ் மெஷின் இல்லையாமே. ” “ ஏதோ ஒரு மெஷின். கிராக்கிங் மெஷினோ என்னவோ ! ஆனா படு
|
ஹாட் ! கியாரண்டி மால். " நாராயணன் பார்த்த அந்த மெஷின் படம் செக்கஸ்லோவேகியா படம். நிஜமாகவே ஒரு புராதன சினிமா எந்திரத்தைப் பற்றியது. நடிகர்கள்கப்ராஸ் , கப்ராஸ்என்று வேற்று மொழியில் பேசிக்கொண்டிருக்க , படத்தின் அடியில் ஆங்கில எழுத்துக்கள் நடுங்கின. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நாராயணனின் இங்கிலீஷ் அவ்வளவு வேகமாகப் படிக்க வரவில்லை. 139 இரண்டு வார்த்தை படிப்பதற்குள் படக் படக் என்று மாறியது. படத்தில் மிக அழகான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ஏராளமாக கவுன் அணிந்து வந்தார்கள். கதாநாயகன் அண்ணனா ,
|
அப்பனா , காதலனா , என்று தீர்மானிக்க முடியவில்லை. கவுன் போட்டிருந்த பெண்கள் சாஸ்திரத்துக்கூட அந்த கவுன்களைக் கழற்றவில்லை. இண்டர்வெல் வரை ஒரு பட்டன் ? ம்ஹூம் ! படுக்கையில் அவர்கள் படுத்ததுமே காமிரா நகர்ந்துபோய் தெரு , மண் , மட்டை என்ற புறக்காட்சிகளில் வியாபித்தது. ஒரே ஒரு இடத்தில் சினிமாவுக்குள் சினிமாவாக பாரிஸ் நகரத்தின் எஃபில் டவர்முன் ஒரு பெண் தன் பாவாடையைக் கழற்றுவதாக ஒரு காட்சி வந்தது. அதாவது வரப் பார்த்தது. அதற்குள் காமிரா அவசரமாக அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகபாவங்களைக் தலைப்பட்டது.
|
வெளியே நின்றுகொண்டிருந்தான். காட்டத் வந்தான். கிருஷ்ணப்பா “ “ என்ன ? பார்த்தியா ? படம் எப்படி ? “ நீ பாக்கலை ? "” நான் என் டிக்கட்டை விற்கலாம்னு போனேன் ! யோசிச்சேன். இன்னிக்கு இங்கதான் பார்க்கலாமேன்னு உன் டிக்கட்ல உள்ளே நுழைஞ்சேன். கிடக்கட்டும் உன் படம் எப்படி ? " “ “ நாசமாய்ப் போச்சு. ஒரு எழவும் இல்லை. படம் முழுக்க குதிரை வண்டி கட்டிகிட் ஒரு ஆள் பயாஸ்கோப் வைச்சுக்கிட்டு ஊர் ஊராப் போறான் ! " நாராயணன் கிருஷ்ணப்பாவை சற்று தயக்கத்துடன் கேட்டான். “ உன் படம் எப்படி ? " “ செமைப்படம் வாத்தியாரே. " நாராயணன்
|
மவுனமானான். “ வேஸ்ட் ஆறதேன்னு உட்கார்ந்தேன். படுகிளாஸ். ஒரு முத்தம் கொடுக்கிறான் பாரு , அப்படியே அவளைச் சாப்பிடறான். ஆரஞ்சுப்பழம் உரிக்கிற மாதிரி உடுப்புகளை ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா உருவி... " “ கிருஷ்ணா அப்புறம் பேசலாம். எனக்கு அர்ஜண்டா வேலை இருக்குது ! வர்றேன் " என்று விரைந்தான் நாராயணன். அவனுக்கு அழுகை வந்தது. கிருஷ்ணப்பா போன்ற எப்போதும் அதிர்ஷ்டக்காரர்களிடம் ஆத்திரம் வந்தது. “ நாளைக்கு எங்கே படம் பார்க்கிறே சொல்லு... " என்று தூரத்தில் கிருஷ்ணப்பா கேட்டான். நாராயணன் பதில் சொல்லாமல் நடந்தான். ரப்பர் டயர்வைத்த
|
வண்டியில் பெட்ரமாக்ஸ் அமைத்து எண்ணெய் கொதிக்க மிளகாய் பஜ்ஜி தத்தளிக்க பலபேர் தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கண்ணாடிப்பெட்டிக்குள் பொம்மை நங்கைகளின் அத்தனை சேலைகளையும் உருவித் தீர்க்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது. மெல்ல நடந்தான். இருட்டு ரேடியோக் கடையைக் கடந்தான். “ டாக் ஆஃப் தி டவுன்என்கிற ரெஸ்டாரண்ட் வாசலில் ஒரு கூர்க்கா நிற்க , ஒன்றிரண்டு பேர் அங்கே விளம்பரத்துக்காக வைத்திருந்த போட்டோக்களை 140 வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று இரண்டு காட்சிகள் , லிஸ்ஸி , லவினா , மோனிக்கா , டிம்பிள்.. நான்கு
|
அபூர்வ பெண்களின் நடனங்கள். மேற்படி நங்கைகள் இடுப்பில் மார்பில் சில சென்டி மீட்டர்களை மறைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வாசல் இருட்டாக இருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டு “ பதக்என்று துப்பிவிட்டு ஒருத்தன் உள்ளே செல்ல. கதவு திறக்கப்பட்டபோது பெரிசாக சங்கீதம் கேட்டு அடங்கியது. உள்ளே செல்ல எத்தனை ரூபாய் ஆகும் என்று யாரைக் கேட்பது என்று தயங்கினான். அந்த கூர்க்காவைப் பார்த்த மாதிரி இருந்தது. வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்லி விடுவானோ ? நடந்தான். சற்று தூரம் சென்றதும்தான் தன்னை ஒருவன் பின்தொடர்வதை
|
உணர்ந்தான். முதலில் அவன் பேசுவது புரியவில்லை. பின்பு தெரிந்தது. “ ஆந்திரா , டமில்நாடு , குஜராத் , மலையாளி கேர்ள்ஸ் சார் ! பக்கத்திலேதான் லாட்ஜ். நடந்தே போயிறலாம். " நாராயணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்து “ எவ்வளவு ” என்றான். அவன் சொன்ன தொகை நாராயணனிடமிருந்தது. ” பிராமின்ஸ் வேணும்னா பிராமின்ஸ் , கிறிஸ்டியன்ஸ் , முஸ்லீம் ? வாங்க சார் !நாராயணன் யோசித்தான். “ நிஜம் ஸார் நிஜம் ; நிஜமான பெண்கள் ! " நாராயணன் “ வேண்டாம்ப்பா ” என்று விருட்டென்று நடந்து சென்றான். 141 சித்தி - மா. அரங்கநாதன் அங்கே மைதானங்கள் குறைவு.
|
அவன் குடிக்கொண்டிருந்த அந்த இடம் காவல் துறைக்கு சொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த காவல்காரர் ஒருவர் இடையே அவனது ஓட்டத்தை தடை செய்தார். “ தம்பி - இங்கே ஓட அனுமதி வாங்க வேண்டும் " என்று கூறி “ ஆனாலும் நீ நன்றாக ஓடுகிறாய். முன்னுக்கு வருவாய் " என்றும் சொல்லி சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தார். அந்த நாட்டில் விளையாட்டிற்கு அத்தனை மதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் வீரர்களைப் பற்றி தொலைக்காட்சி செய்திகள் மூலமாக மக்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். கஷ்டம் நிறைந்த வாழ்க்கையை
|
எந்தவித உணர்வுமில்லாது இயல்பாகவே அவர்கள் ஏற்று நடத்திக் கொண்டிருந்தபடியால் விளையாட்டுகள் அங்கு எடுபடவில்லை. காலங்காலமாக அவர்களுக்கு தெரிந்த விளையாட்டிலேயே ஈடுபட்டு திருப்திப்பட்டுக் கொண்டனர். " ஒலிம்பிக் " போட்டிகளைப் பற்றி கேள்வியோடு சரி. அந்த மண் உலகிலே ஒரு விசேடமான மண் போலும். அங்கே தான் அவன் ஓடிக்கொண்டிருந்தான். " நீ என்ன படிக்கிறாய் ? " காவல்காரர் கேட்டார். அவன் அதற்குச் சொன்ன பதிலை காதில் வாங்கிக்கொள்ளாமலே தொடர்ந்து கூறினார். " நீ இப்படி ஓடுவதற்கு முன்னே சில அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - நானும்
|
ஒரு காலத்தில் ஓடினேன். அதை தொடரவில்லை. என் அந்தகால வயதுத் திறனைவிட நீ அதிகமாக இப்போது பெற்றிருக்கிறாய் ஒன்று செய்யலாம் கேட்பாயா... " அவன் தலையசைத்தான். நான் தரும் முகவரிக்குப் போ. அந்த பெரியவரோடு பேசு. உனக்கு நல்லது கிடைக்கும். அவன் மெதுவாக நன்றி சொன்னான். அன்றைக்கு அவன் முடிவெட்டிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணம் செலவாகி விட நேரும். அது ஆபத்து - மீண்டும் பணம் கிடைப்பது அரிது. இந்நிலையில் அந்தக் காவலரின் யோசனைக்கு அவன் பதிலும் நன்றியும் திருப்திகரமாக சொல்லியிருக்க முடியாது. ஆனாலும் அவர் ஒரு
|
முகவரியைக் கொடுத்து உற்சாகப்படுத்தி அவனை அனுப்பிவைத்தார். தன்னைச் செம்மைப்படுத்தி கொண்டு அவன் மறுநாள் இரண்டு மைல் தூரத்திலிருந்த அந்த வீட்டிற்கு சென்றான். பெரிய மாளிகை போன்ற வீடு வீட்டின் முழு பார்வையும் விழ , தெருவிலிருந்து காம்பவுண்ட் சுவரைத் தாண்டி மரங்களடர்ந்த பாதை வழி நடக்க வேண்டும். அந்தப் பாதையில் அவன்கால் வைத்த போது - அதன் அழகான நீட்சியில் - அந்த கால்கள் ஓடுவதற்குத் தயாராயின. மாசு மறுவற்ற அந்தப் பாதை வீட்டை சுற்றிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தான். வீட்டின் முகவாயிலில் நாற்காலியில் செடிகள் சூழ்ந்த
|
இடத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். பெரியவர் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வருபவனுடைய நடை அவருக்கு எதையோ ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். தூரத்தில் வந்து கொண்டிருந்தவனை ஆவலுடன் 142 பக்கத்தில் காண விழைந்தார். " ஏன் இத்தனை நாள் - முன்பே ஏன் வரவில்லை " என்று கேட்கவும் எண்ணினார். அவர்களது சம்பாஷணை இயல்பாக எளிதாகவிருந்தது. ” நமது நாடு பாழ்பட்டுவிட்ட நாடு. இதை இளைஞர்கள் தாம் காக்க வேண்டும் - இல்லையா " என்று இரைந்து கேட்டார். நடப்பதற்கு முன்பே ஓட ஆரம்பித்து விட வேண்டுமென்று கூறி சிரிப்பு மூட்டப் பார்த்தார்.
|
பெரியவருக்கு வயது அறுபதிருக்கும். விளையாட்டு விஷயங்களிலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்டவர். அவைகளைத் தவிர உலகிலுள்ள எல்லாக் காரியங்களையும் இயந்திரங்களைக்கொண்டு நிகழ்த்திவிடலாம் என்று நம்புகிறவர். அந்த நாட்டின் எல்லா செய்தித் தாள்களிலும் வந்த படம் இவருடையதாகவேயிருக்கும். சீடர்கள் அதிகமிருந்திருக்க முடியாது. இருந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறையில் சேர்ந்திருப்பார்கள். " நான் எனது நாட்டிற்காக என் விளையாட்டுக் கலையை அர்ப்பணித்தவன் " அவர் கண்கள் ஜொலித்தன. உண்மையில் அந்த கண்களில் அவர் சொன்னது தெரிந்தது. அவர் பொய்
|
சொல்பவராகத் தெரியவில்லை. பல மாதங்கள் அவரிடம் தனது விளையாட்டுக்கலையின் பயிற்சிகளைப் பெற்றான் அவன். காலையிலெழுந்து சூரியன் உதிக்கும் முன்னர் நெடுஞ்சாலைகளில் ஓடினான் , தனது தம்பியைத்தோளில் ஏறச் சொல்லி அவனைத் தூக்கிக்கொண்டு மைல் கணக்கில் ஓடி பயிற்சி பெற்றான். அவனது சாப்பாட்டிற்கு பெரியவர் ஏற்பாடு செய்திருந்தார். பிரியமான கொழுப்புச் சத்துப் பொருட்களை பெரும்பாலும் தள்ளி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அவ்வுணவுகலை நேரந்தவறாது உண்டான். பிற நாட்டு வீரர்கள் - போட்டிகள் பற்றி அவ்வீட்டிலேயே திரைப்படங்கள் காட்டப்பெற்றன.
|
அவன் அந்த நாட்டின் சிறந்த ஓட்டப் பந்தய வீரனாக ஆக்கப்பட்டான். ஒரு தடவை மல்யுத்தப் போட்டிகளின் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கையில் பெரியவர் அந்த இரு நாடுகளைப் பற்றி விளக்கினார். அவன் கண்டு கேட்டறியாத சங்கதிகள் - நாடு - மக்கள் இனங்கள் - இவைகளின் உணர்வு பூர்வமான விளக்கம் - ஏறக்குறைய ஒரு சொற்பொழிவு. அவன் மீண்டும் அந்த வீடியோ காட்சிகளில் ஆழ்ந்தான். போட்டியினிடையே காட்டப் பெறும் மக்களின் ஆரவாரம் அவனுக்கு புதிதல்ல. இருப்பினும் வேற்று நாட்டுக்காரன் குத்து வாங்கி மூக்கு நிறைய இரத்தம் விடுகையில் பார்த்தவர்களின் சப்தம்
|
- இடையே ஒரு பார்வையாளன் முடித்து விட்ட தனது சிகரெட் துண்டை ஆக்ரோஷத்துடன் கீழே நசுக்கி துவம்சம் செய்தல் - இவ்வகைக் காட்சிகளைக் கண்டு முடிக்கையில் அவன் தனக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப்பதான உணர்ந்தான். அது பயம் என்று பின்னர் தெரிந்து கொண்டான். அன்றிரவு தொலைக்காட்சியில் " இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் " என அவன் அறிமுகப்படுத்தப்பட்டான். அவனது படம் நன்றாக இருந்ததாக பலர் சொன்னார்கள். அவ்வாறு சொன்னது பொய்யென்று அவனுக்கு தோன்றிற்று. ஆனால் நெடுஞ்சாலைகளில் அவனது அதிகாலை ஓட்டம் தொடர்ந்தது. மைதானங்களில் ஓடுவதை விட
|
இதைச் சிறந்ததாகக் கருதினான். அடிவானத்தைப் பார்த்தவாறு , இரு பக்கங்களிலும் மரங்கள் தன்னைக் கடந்து செல்ல , கால்கள் மாறி மாறித் தரையைத் தொட்டு ஓடுகையில் இதுவரை ஆபாசம் என்று அவன் கருதிக்கொண்டிருந்தவை யாவும் தன்னைவிட்டு அகல சுத்த சுயம்புவாக எங்கோ சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். வானமும் தரையும் சுற்றுப்புற சீவராசிகளும் தானும் வெவ்வேறல்ல என்று தெளிந்த வகையில் அவன் ஓட்டமிருந்தது. 143 அன்று அவன் ஓடிய ஓட்டம் பொழுது நன்கு விடிந்துவிட்டதாலும் புறநகர்ச் சாலைகளில் நடமாட்டம் ஏற்பட்டதாலும் இருபத்திரண்டு மைல்களுக்குள்
|
நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. சிலசமயம் பெரியவர் மாளிகையின் கேட்டைத் திறந்து , அங்கிருந்து தொடங்கிய நடைபாதையிலும் ஓட்டம் தொடரும். நெடுஞ்சாலையில் ஓட முடியாதபோது அந்த வீட்டைச் சுற்றி ஓடுவான். சில மணி நேரங் கழித்து யோசனையோடு பெரியவர் வெளிவந்து அவனை நிறுத்தும்போது தான் முடியும். ஓட்ட அளவை நாளறிக்கையில் குறித்துக்கொண்டே அவர் பலவித கணக்குகளைப் போட்டுப் பார்ப்பதை அவன் காண்பான். தான் ஓடிய ஓட்டம் எவ்வளவு என்று கூட கணக்கு மூலம் கண்டறிய முடியாதவனிடம் அவர் விளக்கிச் சொல்வார். இத்தனை தூரம் தொடர வேண்டியதில்லை என்றும் உலக
|
ரிக்கார்டை அவன் நெடுஞ்சாலைகளிலேயே முறியடித்துவிட்டான் என்றும் சொல்லி மகிழ்வார். அவனுக்கு கீழ் நாடுகளில் பயிலும் யோகாசனம் பற்றியும் சொல்லித் தரவேண்டியதவசியம் என எண்ணினார். " யோகா " என்ற பெயரில் ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் அந்த நாட்டில் பிரபலமடைய தொடங்கியிருந்தன. " ஒரு மராத்தன் தேறிவிட்டான் " என்றும் " இந்த நாடு தலை நிமிரும் " என்றும் ஆணித்தரமாக பத்திரிக்கை நிருபர்களிடம் கூறினார். அவன் இருபத்தேழு மைல்கள் ஒடி தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் அடிபட்டபோது நாடுகள் அவனைக் கவனிக்கத் தொடங்கிவிட்டன. அடுத்த ஒலிம்பிக்
|
வீரனென பேசப்படுபவர்களில் ஒருவனானான். அவனது விவரங்கள் பேசப்பட்டன. அவன் பெயர் பலவாறு உச்சரிக்கப்பட்டது.கார்போ என்று சோவியத்தில் அவன் பெயரை தவறாகச்சொன்னார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவன்கிரிப்ஸ் '. கிழக்கே அவனைகிருஷ்என்று சொல்லியிருப்பார்கள். தென்புலத்தில்கருப்பன்என்று இருந்திருக்கக்கூடும். உலக அன்றுதான் அவனது பெயர் அதிகார பூர்வமாக வெளிவரவேண்டும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவனாக. விளையாட்டரங்கு ஒன்றில் பத்திரிக்கையாளர் பேட்டி நடந்தது. கையில் ஒரு சுருட்டுடன் பெரியவர் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்தார். அவர்
|
புகைபிடிப்பது அபூர்வம். பேட்டி பின்வருமாறு இருந்தது. " நீங்கள் போட்டியிடும் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி தானே " " எனக்கு ஓடுவதில் ரொம்பவும் மகிழ்ச்சி " " நமது நாட்டிற்கு பெருமை தேடித்தருவீர்கள் அல்லவா " " ஓடுவது ரொம்பவும் நன்றாகவிருக்கிறது " " போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து ? " " ஓடுபவர்கள் எல்லோருமே மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எல்லாரையும் நினைத்தால் நான் சமாதானமடைகிறேன். " " நமது நாடு விளையாட்டில் முன்னேறுமா " அவன் பேசாதிருந்தான். பெரியவர் தலைகுனிந்திருந்தார். கேள்வி
|
திரும்பவும் கேட்கப்பட்டது. 144 " எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பதுதான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். எனக்கு வேறெதுவும் தெரியாது , " பெரியவர் கையிலிருந்த சுருட்டு காலடியில் கிடந்தது. முகம் பல மேடு பள்ளங்களாக மாற காலால் சுருட்டை நசுக்கி தள்ளினார். பின்பு மெதுவாக கைகளை தளர விட்டு எழுந்து நின்றார். அப்போது பேட்டி முடிந்துவிட்டது. சிறிய நிலவுடன் இரவு முன்னேறுகின்ற நேரம். அந்தக் கட்டடத்தின் வெளியே வண்டியருகே நின்றுகொண்டிருந்த அவர் பக்கம்
|
வந்து நின்றான் அவன். சிறிது நேரம் வெட்ட வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தார் பெரியவர். பின்னர் தோள்களை குலுக்கிக் கொண்டே காரின் கதவை திறந்தார். அவன் வெகுதூரத்திற்கப்பாலிருந்த குன்றுகளைப் பார்த்தவாறே அவரிடம் கெஞ்சலுடன் கூறினான். " அந்த அருமையான நிலவில் ஓட முடிந்தால் எப்படி இருக்கும் என்கிறீர்கள் ? காலையில் அந்தக் குன்றுவரை சௌகர்யமாக ஒட்டம் முடிந்தது. " பெரியவர் காரின் உள்ளே நுழைந்து உட்கார்ந்து கதவை சாத்திக் கொண்டார். தலையை மட்டும் வெளியே நீட்டி " நன்றாக இருக்கும் வேண்டுமானால் நீ இப்பவே ஓடு. அந்த குன்றின்
|
உச்சிக்கே போய் அங்கிருந்து கீழே குதித்து செத்துத் தொலை " என்று கூறிவிட்டு காரை ஓட்டிச் சென்று விட்டார். 145 குருபீடம் - ஜெயகாந்தன் அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள். அவன் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொண்டார்கள். அவன்
|
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டவனென்றும் சிலர் சொன்னார்கள். ஆனால் , இப்போது அவன் நோயாளியோ பைத்தியக்காரனோ அல்ல என்று அவனைப் பார்த்த எல்லாரும் புரிந்து கொண்டார்கள். உண்மையும் அதுதான். சோம்பலும் , சுயமரியாதை இல்லாமையும் , இந்தக் கோலம் அசிங்கமென்று உணர முடியாத அளவுக்கு அவனிடம் ஊறி உறைந்துபோன தாமசத்தின் மதமதப்பினாலும் அவன் இவ்வாறு திரிகிறான். பசிக்கிறதோ இல்லையோ தன் கையில் கிடைத்ததையும் பிறர் கையில் இருப்பதையும் தின்ன வேண்டுமென்ற வேட்கை அவன் கண்ணில் அலைந்தது. ஒரு குழந்தை சாப்பிடுவதைக்கூட ஒரு நாய்
|
மாதிரி அவன் நின்று பார்த்தான். அவர்களும் அவனை நாயை விரட்டுவது மாதிரி விரட்டினார்கள். அவ்விதம் அவர்கள் விரட்டி அவன் விலகிவரும்போது அவன் தனது பார்வையால் பிறர் சாப்பிடும் பொருளை எச்சில் படுத்திவிட்டு வந்தான். அவன் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருந்தான். அவன் கடைவாயிலும் பல்லிலும் அவன் தின்றவை சிக்கிக் காய்ந்திருந்தது. யாராவது பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் அவன் கையேந்தினான். அவர்கள் புகைத்து எறிகிற வரைக்கும் காத்திருந்து , அதன் பிறகு அவற்றைப் பொறுக்கி அவர்களை அவமரியாதை செய்கிற மாதிரியான
|
சந்தோ.த்துடன் அவன் புகைத்தான். சந்தைக்கு வந்திருக்கிற நாட்டுப்புறப் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதும் , குனிந்து நிமிர்கையில் ஆடை விலகும்போதும் , இவன் காமாதூரம் கொண்டு வெட்கமில்லாமல் வர்களை வெறித்துப் பார்த்து ரசித்தான். அவனுக்கு உடம்பில் நல்ல வலுவும் ஆரோக்கியமும் இருந்தது. எனினும் எப்போதும் ஒரு நோயாளியைப்போல் பாசாங்கு செய்வது அவனுக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. அவனுக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும். கடுமையாக உழைக்காததாலும் , கவலைகள் ஏதும் இல்லாததாலும் அவன் உடம்புவாகே ஒரு பொலிகாளை மாதிரி
|
இருந்தது. இளமையும் உடல் வலுவும் ஆரோக்கியமும் இயற்கையால் அவனுக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தும் அவன் தன்னைத்தானே சபித்துக் கொண்டது மாதிரி சேற்றில் மேய்கிற பன்றியாய்த் திரிந்தான். சந்தைத் திடலுக்கும் ரயிலடிக்கும் நடுவேயுள்ள குளக்கரையை அடுத்த சத்திரத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கே குளிக்கிற பெண்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆனால் , ஒரு நாளாவது தானும் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. மற்ற நேரங்களில் அவன் அந்தத் திண்ணையில் அசிங்கமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். சில
|
சமயங்களில் பகல் நேரத்தில் கூட உறங்குவது மாதிரி பாவனையில் வேண்டுமென்றே ஆடைகளை விலக்கிப் போட்டுக்கொண்டு தெருவில் போவோர் வருவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ரகசியமாக மனத்திற்குள் மகிழ்ச்சி அடைவான். இரண்டு தினங்களுக்கு முன்பு லேசாக மழை பெய்து கொண்டிருந்த இரவில் ஒரு பிச்சைக்காரி இந்தச் சத்திரத்துத் திண்ணையில் வந்து படுக்க , அவளுக்கு ஏதேதோ ஆசை காட்டிக் கடைசியில் அவளை வலியச்சென்று சல்லாபித்தான். அதன் பிறகு இவனைப் பழிவாங்கிவிட்ட 146 மகிழ்ச்சியில் தனது குறைபட்டுப்போன விரல்களைக் காட்டித் தான் ஒரு நோயாளி என்று அவள்
|
சிரித்தாள். அதற்காக அருவருப்புக் கொள்கிற உணர்ச்சிகூட இல்லாமல் அவன் மழுங்கிப் போயிருந்தான். எனவே , இவள் இவனுக்குப் பயந்துகொண்டு இரண்டு நாட்களாக இந்தப் பக்கமே திரும்பவில்லை. இவன் அவளைத் தேடிக்கொண்டு நேற்று இரவெல்லாம் சினிமாக் கொட்டகை அருகேயும் , சந்தைப்பேட்டையிலும் , ஊரின் தெருக்களிலும் கார்த்திகை மாதத்து நாய் மாதிரி அலைந்தான். மனித உருக்கொண்டு அவனிடம் உறைந்துபோன தாமசத் தன்மையினால் , சோம்பலைச் சுகமென்று சுமந்து கொள்கிற புத்தியின் மந்தத்தினால் அருவருக்கத்தக்க ஒரு புலை நாய் மாதிரி அவன் அங்கு அலைந்து
|
கொண்டிருந்தான். வயிற்றுப்பசி , உடற்பசி என்கிற விகாரங்களிலும் உபாதைகளிலும் சிக்குண்டு அலைகின்ற நேரம் தவிர , பிற பொழுதுகளில் அந்தச் சத்திரத்துத் திண்ணையில் அவன் தூங்கிக்கொண்டே இருப்பான். காலை நேரம் ; விடியற்காலை நேரம் அல்ல. சந்தைக்குப் போகிற ஜனங்களும் , ரயிலேறிப் பக்கத்து ஊரில் படிப்பதற்காகப் போகும் பள்ளிக்கூடச் சிறுவர்களும் நிறைந்து அந்தத் தெருவே சுறுசுறுப்பாக இயங்குகின்ற சுரீர் என்று வெயில் அடிக்கிற நேரத்தில் , அழுக்கும் கந்தலுமான இடுப்பு வேட்டியை அவிழ்த்துத் தலையில் இருந்து கால்வரை போர்த்திக் கொண்டு ,
|
அந்தப் போர்வைக்குள் கருப்பிண்டம் மாதிரி முழங்கால்களை மடக்கிக் கொண்டு , கைகளிரண்டையும் காலிடையே இடுக்கியவாறு வாயிலிருந்து எச்சில் ஒழுக , ஈ மொய்ப்பது கூடத் தெரியாமல் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். தெருவிலே ஏற்படுகிற சந்தடியும் இரைச்சலும் ஏதோ ஒரு சமயத்தில் அவன் தூக்கத்தைக் கலைத்தது. எனினும் அவன் விழித்துக் கொள்ள விரும்பாததனால் தூங்கிக் கொண்டிருந்தான். இதுதான் சோம்பல். உறக்கம் உடலுக்குத் தேவை. ஆனால் , இந்தத் தேவையற்ற நிர்ப்பந்தத் தூக்கம்தான் சோம்பலாகும். இந்த மதமதப்பைச் சுகமென்று சகிக்கிற அறிவுதான் தாமசமாகும்.
|
விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து - அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை
|
விலகுவதற்கு எவ்வளவு குறைவான , மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ , அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான். அவன் எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான். மறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம்
|
சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. 147 அவன் ஒரு கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டே இன்னொரு கையால் , தலைமாட்டில் சேகரித்து வைத்திருந்த துண்டு பீடிகளில் ஒன்றை எடுத்தான். பீடியைப் பற்ற வைத்து அவன் புகையை ஊதிய போது அவனது அரைக் கண் பார்வையில் மிக அருகாமையில் யாரோ நின்றிருக்கிற மாதிரி முகம் மட்டும் தெரிந்தது. புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்த்தான். எதிரே ஒருவன் கைகளை
|
கூப்பி , உடல் முழுவதும் குறுகி , இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ , சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்துகொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான். இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான் - பைத்தியமோ ? " என்று நினைத்து உள்சிரிப்புடன் - என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே ? இது கோயிலு இல்லே - சத்திரம்.
|
என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா ? நான் பிச்சைக்காரன்... " என்றான் திண்ணையிலிருந்தவன். " ஓ !.. கோயிலென்று எதுவுமே இல்லை... எல்லாம் சத்திரங்களே ! சாமியார்கள் என்று யாருமில்லை. எல்லாரும் பிச்சைக்காரர்களே ! " என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன். " 1 சரி சரி ! இவன் சரியான பைத்தியம்தான் என்று நினைத்துக் கொண்டான் " 1 திண்ணையிலிருந்தவன். தெருவில் நின்றவன் இவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிற பவ்யத்துடன்
|
சுவாமி என்றழைத்தான். இவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. வந்த சிரிப்பில் பெரும் பகுதியை அடக்கிக் கொண்டுபுன்முறுவல் காட்டினான். என்னைத் தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் ; தங்களுக்குப் பணிவிடை புரியவும் , தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும். திண்ணையிலிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. " சரி , இப்போ எனக்கு ஒரு டீ வாங்கியாந்து குடு " என்றான். அந்தக் கட்டளையில் அவன் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று புரிந்து கொண்ட மகிழ்ச்சியுடன் இடுப்புத் துண்டிலிருந்த சில்லரையை
|
அவிழ்த்துக் கொண்டு ஓடினான் வந்தவன். அவன் கையிலிருந்த காசைப் பார்வையால் அளந்த குரு, ஓடுகின்ற அவனைக் கைதட்டிக் கூப்பிட்டு " அப்படியே பீடியும் வாங்கியா " என்று குரல் கொடுத்தான். அவன் டீக்கடைக்குச் சென்று பார்வைக்கு மறைந்ததும் இவன் வந்து சீடனாக வாய்த்த அதிர்ஷ்டத்தை எண்ணிப் பெருங்குரலில் சிரித்தான் குரு. சரியான பயல் கிடைத்திருக்கிறான். இவன் மயக்கம் தெளியாதபடி பார்த்துக்கணும். திண்ணெயெ விட்டு எறங்காமல் சொகமா இங்கேயே இருக்கலாம். பிச்சைக்கு இனிமே நாம்ப அலைய வேணாம். அதான் சிஷ்யன் இருக்கானே... கொண்டான்னா கொண்டுவரான்.
|
முடிஞ்சா சம்பாரிச்சுக் குடுப்பான்... இல்லாட்டி பிச்சை எடுத்துக்கினு வரான்.. என்னா அதிர்ஷ்டம் வந்து நமக்கு அடிச்சிருக்கு... " என்று மகிழ்ந்திருந்தான் குரு. 148 சற்று நேரத்தில் சீடன் டீயும் பீடியும் வாங்கி வந்து நிவேதனம் மாதிரி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு குருவின் எதிரே நின்றான். குரு அவனைப் பார்த்து பொய்யாகச் சிரித்தான். அவன் கையிலிருந்த டீயையும் பீடியையும் தனக்குச் சொந்தமான ஒன்று - இதனை யாசிக்கத் தேவையில்லை - என்ற உரிமை உணர்ச்சியோடு முதன் முறையாய்ப் பார்த்தான். அதனை வாங்கிக் கொள்வதில் அவன் அவசரம்
|
காட்டாமல் இருந்தான். தான் சீடனை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொள்வதற்காக அவன் பீடிகையாகச் சொன்னான் : " என்னை நீ கண்டுபிடிச்சுட்டே. நீ உண்மையான சிஷ்யன்தான். என்னை நீ இன்னிக்குத்தான் கண்டுபிடிச்சே. ஆனால் , நான் உன்னை ரொம்ப நாளாப் பார்த்துக்கினே இருக்கேன். நான் உன்னைக் கொஞ்சம் கேள்விங்கள்ளாம் கேப்பேன். அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லணும். அது க்கோசரம் எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதே. எனக்கு எல்லாம் தெரியும் ! தெரிஞ்சாலும் சிலதெல்லாம் கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும். " இந்த வார்த்தைகளைக்
|
கேட்டு இரண்டு கையிலும் டீயையும் பீடியையும் ஏந்தி இருந்த சீடன் அவனைக் கரங்கூப்பி வணங்க முடியாமல் பார்வையாலும் முகபாவத்தாலும் தன் பணிவைக் காட்டினான். நீ யாரு ? எந்த ஊரு ? பேரு என்ன ? நீ எங்கே வந்தே ? நான்தான் குருன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ?.-- டீ ஆறிப் போச்சில்லே ? குடு " என்று டீயை வாங்கிக் குடித்துக் கொண்டே சீடன் சொல்கிற பதிலை மெத்தனமாகத் தலையை ஆட்டியவாறே கேட்டான். குருவே... நான் ஒரு அனாதை. அதோ இருக்கிறதே முருகன் கோயில் , அங்கே ஒரு மடப்பள்ளி இருக்குது. அங்கே தண்ணி எறைச்சுக் கொண்டு வர்ற வேலை. மடப்பள்ளியிலே
|
இருக்கிற ஐயிரு மூணு வேளையும் சாப்பாடு போட்டுச் செலவுக்கு நாலணா தினம் குடுக்கிறாரு. எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியலே.. துன்பத்துக்கெல்லாம் பற்று தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒரு விதப் பற்றும் இல்லே... ஆனாலும் நான் துன்பப்படறேன்... என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே... நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி ,இந்தச் சத்திரந்தான் குருபீடம் , அங்கே வான்னு எனக்குக் கட்டளை இட்டீங்க குருவே ! நீங்க
|
இதெல்லாம் கேட்கிறதனாலே சொல்றேன். தாங்கள் அறியாததா விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது.... " " ம்... ம்.... " என்று மீசையை நெருடிக்கொண்டே அவன் கூறுவதைக் கேட்ட குரு , காலியான தம்ளரை அவனிடம் நீட்டினான். ? சீடன் டீக்கடையில் காலித் தம்ளரைக் கொடுக்கப் போனான். கடவுள் இந்தப் பயலை நன்றாகச் சோதிக்கிறார் என்று நினைத்து அவனுக்காக அனுதாபப்பட்டுச் சிரித்தான் குரு. " ம்.. அதனால் நமக்கென்ன ? நமக்கு ஒரு சிஷ்யன் கிடைத்திருக்கிறான் என்று திருப்திப்பட்டுக்
|
கொண்டான். சீடன் வந்தபிறகு அவன் பெயரைக் கேட்டான் குரு. அவன் பதில் சொல்வதற்குள் தனக்குத் தெரிந்த பல பெயர்களைக் கற்பனை செய்த குரு திடீரெனச் சிரித்தான். இவன் கூறுமுன் இவனது பெயரைத்தான் சொல்ல முடிந்தால் இந்த நாடகத்தில் அது எவ்வளவு அற்புதமான 149 " 1 லீலையாக அமையும் என்று நினைத்தே அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பினால் சீடன் பதில் சொல்லச் சற்றுத் தயங்கி நின்றான். அப்போது குருசொன்னான் : " பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா ? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில் ! " என்று ஏதோ
|
தத்துவ விசாரம் செய்கிற மாதிரிப் பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான். " சரி , உன் பேரு என்னான்னு நீ சொல்ல வேண்டாம். நான் குரு. நீ சிஷ்யன்... எனக்குப் பேரு குரு ; உனக்குப் பேரு ச.யன். நீதான் என்னை · குருவே குருவேன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டே.... நானும் உன்னை சிஷ்யா சிஷ்யான்னு கூப்பிடறேன்... என்னா ? சரிதானா ?... " என்று பேசிக்கொண்டே இருந்தான் குரு. " எல்லாமே ஒரு பெயர்தானா ?என்று அந்தப் பேச்சிலும் எதையோ புரிந்துகொண்ட சீடனின் விழிகள் பளபளத்தன. " நான் என்ன இப்படியெல்லாம் பேசுகிறேன்... "
|
என்று குரு தன்னையே எண்ணித் திடீரென வியந்தான். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். மத்தியானமும் இரவும் அந்தச் சீடன் மடப்பள்ளியிலிருந்து தனக்குக் கிடைக்கிற புளியோதிரை , சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் பயபக்தியுடனும் அன்போடும் கொண்டுவந்து இந்தக் குருவுக்குப் படைத்தான். அவ்வளவு ருசியும் மணமும் புனிதமும் அன்பும் உபசரணையும் உடைய அமிர்தத்தை இவன் ஜென்மத்தில் ருசி பார்த்ததில்லை. ஆவல் மிகுதியால் தனது நடிப்பைக்கூட மறந்து அவற்றை அள்ளி அள்ளி இவன் உண்பதை அன்பு கனியப் பார்த்துக் கொண்டிருந்தான் சீடன். குருவுக்கு எதனாலோ
|
கண்கள் கலங்கின. சீடன் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். மறுநாள் காலை அதே மாதிரி திண்ணைக்குக் கீழே வந்து காத்து நின்றிருந்தான் சீடன். அவனுக்கு டீயும் பீடியும் வாங்கி வந்தான். குருவை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் அவனது ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தான். அவனைக் குளிக்க வைத்து அழைத்து வந்தான். உச்சியில் வெயில் வருகிற வரை குருவுக்குப் பசி எடுக்கும்வரை - அவர்கள் ஆற்றில் நீந்திக் குளித்தார்கள். " குளிக்கிறது சொகமாகத்தான் இருக்கு. ஆனா , குளிச்சி என்னா பிரயோசனம்... குளிக்க குளிக்க அளுக்கு சேந்துக்கிட்டுத்தானே இருக்கு
|
?... அது அப்படித்தான். பசிக்குது... திங்கறோம்... அப்புறமும் பசிக்கத்தானே செய்யிது... குளிக்க குளிக்க அளுக்காகும். அளுக்கு ஆக ஆகக் குளிக்கணும். பசிக்கப் பசிக்கத் திங்கணும்.... திங்கத் திங்கப் பசிக்கும்... என்ன வேடிக்கை ! " என்று சொல்லிவிட்டு குரு சிரித்தான். சிரித்துக் கொண்டே இருக்கும் போது " என்ன இது , நான் இப்படியெல்லாம் பேசுகறேன் " என்று எண்ணிப் பயந்துபோய்ச் சட்டென நிறுத்திக் கொண்டான். சீடன் கை கட்டிக்கொண்டு இவன் சொல்வதைக் கேட்டான். *** EF 150 அன்றும் அதற்கு மறுதினமும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இதே மாதிரி
|
காலையில் டீயும் பீடியும் வாங்கித் தந்து , குளிப்பாட்டி , மத்தியானம் உணவு படைத்து , அவனைத் தனிமையில் விடாமலும் , அவன் தெருவில் அலையாமலும் இந்தச் சீடன் எப்போதும் அவன் கூடவே இருந்தான். அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் சத்திரத்துத் திண்ணையில் ஓய்வுக்காகத் தங்கி இளைப்பாறும்போது வேடிக்கை பார்த்தார்கள். சிலர் குருவை அடையாளம் கண்டு கொண்டு இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்போதே நினைத்ததாகவும் ,
|
அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி , அழுக்கு சுமந்து , எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும் , அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள். அதில் சிலர் , இப்படியெல்லாம் தெரியாமல் இந்தச் சித்த புருஷனை ஏசி விரட்டியடித்ததற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாவும் , கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள். இந்த ஒரு சீடனைத் தவிர
|
குருவுக்குப் பக்தர்கள் நாள்தோறும் பெருக ஆரம்பித்தார்கள். சந்தைக்கு வருகிற வியாபாரிகளும் மற்றவர்களும் இவனை வேடிக்கை பார்த்து நின்றுவிட்டு இவனுக்கு டீயும் , பீடியும் , பழங்களும் வாங்கித் தந்தார்கள். இவன் அவற்றைச் சாப்பிடுகிற அழகையும் , தோலை வீசி எறிகிற லாவகத்தையும் , பீடி குடிக்கிற ஒய்யாரத்தையும் , விழி திறந்து பார்க்கிற கோலத்தையும் , விழி மூடிப் பாராமலிருக்கிற பாவத்தையும் , அவர்கள் புகழ்ந்தும் வியந்தும் பேசினார்கள். குருவுக்கு முதலில் இது வசதியாகவும் , சந்தோ.மாகவும் , பின்னர் ஒன்றும் புரியாமலும் புதிராகவும்
|
இருந்து , கொஞ்ச நாட்களில் எல்லாம் புரியவும் புதிர்கள் விடுபடவும் தொடங்கின. ஒரு நாள் இரவு குருவுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் எது எது பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தான். அதாவது , அந்தச் சிஷ்யனோடு பேசுகிற மாதிரித் தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான். அவன் நட்சத்திரங்களைப் பற்றியும் , தான் இந்த உலகத்தில் வருவதற்கு முன்னால் இருந்த காலத்தைப் பற்றியும் , மரணத்தைப் பற்றியும் , தனக்குப் பின்னால் உள்ள காலங்களைப் பற்றியும் எந்த முடிவிலும் மனம் நிற்க முடியாத வி.யங்களைப் பற்றியெல்லாம் யோசித்தான். அவன் தூங்காமலே கனவு மாதிரி
|
ஏதோ ஒன்று கண்டான். அதில் தன் குரலோ , சீடனின் குரலோ அல்லது சந்தையில் திரிகிற இவனை வணங்கிச் செல்கிற யாருடைய குரலோ மிகவும் தெளிவாகப் பேசியதைக் கேட்டான். " உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே , அவன்தான் உண்மையிலே குரு... சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்... அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான். எந்தப் பீடத்திலே இருந்தால் என்ன ? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா ? அங்கே
|
சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு... " " பறவைகள் பாடிச் சிறகடித்துப் பறந்து சந்தைத் திடலின் மரச் செறிவில் குதூகலிக்கிற காலைப்பொழுது புலர்கிற நேரத்தில் அதே மாதிரியான குதூகலத்துடன் கண் விழித்தெழுந்த குரு. 151 சீடனை வணங்குவதற்காகக் காத்திருந்தான். மானசீகமாய் வணங்கினான். அவன் வந்தவுடன் சாஷ்டாங்கமாய் அவன் பாதங்களில் தான் விழப்போவதை எண்ணி மெய்சிலிர்த்தான். ஆனால் , அந்தச் சிஷ்யன் வரவே இல்லை. இந்தக் குரு அந்த மடப்பள்ளிக்கு தன்னை ரசவாதம் செய்து மாற்றிவிட்ட சீடனைத் தேடி ஓடினான். மடப்பள்ளியில் உள்ளவர்கள் இவனை வணங்கி
|
வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள். குருவுக்கு அப்போது சீடனின் பெயர் தெரியாத குழப்பத்தால் என்னவென்று கேட்பது என்று புரியாமல் " என் சிஷ்யன் எங்கே ? " என்று விசாரித்தான். அவர்கள் விழித்தார்கள். குரு அடையாளம் சொன்னான். கடைசியில் அவர்கள் ரொம்ப அலட்சியமாக " அவன் நேற்றே எங்கோ போய்விட்டானே " என்றார்கள். " அவன்தான் நமக்கெல்லாம் குரு ! " என்றான் குரு. " அப்படியா ! " என்று அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அதுபற்றி அவனது வேதாந்தமான விளக்கத்தை , அவர்கள் எதிர்பார்த்து நின்றனர். ஆனால் , இவன் ஒன்றும் பேசவில்லை. அதன் பிறகு ,
|
ஒன்றுமே பேசவில்லை. எழுந்து நடந்தான். சந்தைத் திடலிலும் ஊரின் தெருக்களிலும் சீடனாகி வந்த அந்த குருவைத் தேடித் திரிந்தான் இவன். சீடனைக் காணோம். இவன் சிரித்தான். தேடுவதை விட்டு விட்டான். இப்போதெல்லாம் சந்தைத் திடலில் அழுக்கும் கந்தையும் உடுத்தி ஒவ்வொருவரிலும் எதையோ தேடுவது மாதிரியான கூர்த்த பார்வையுடன் இவன் திரிந்து கொண்டிருக்கிறான். இவனை யாரும் விரட்டுவதில்லை. குழந்தைகள் இவனைப் பார்த்துச் சிரித்து விளையாடுகின்றன. பெண்களும் ஆண்களும் இவனை வணங்கி இவனுக்கு எதையாவது வாங்கித் தந்து அன்புடன் உபசரிக்கிறார்கள். அந்தச்
|
சீடனிடம் என்ன கற்றானோ அதனை இவன் எல்லாரிடத்தும் எல்லாவற்றிலும் காண்கிற மாதிரி நிறைவோடு சிரித்துச் சிரித்துத் திரிந்து கொண்டிருக்கிறான். 152 முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன் கிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது. சின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகுதியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே
|
அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்து விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும் , கைத்தடியின் டக் டக் ” கென்ற சப்தம் ஒலிக்க , கல் வீட்டிற்குள் , தோட்டத்து வாசல் வழியே பிரவேசிப்பார் பெரிய கோனார். தம்பியின் குடும்பத்தோடு அவருக்குள்ள உறவு அவ்வளவே. சின்னக் கோனாரைப்போல் சொத்துக்கள் என்ற விலங்குகளோ , சொந்தங்களினால் விளைந்த குடும்பம் என்ற சுமையோ இல்லாத பெரியவரை , அந்தக் குடும்பமே அதிகம் மதித்து மரியாதை காட்டுவதற்குக் காரணம் , குடும்பத் தலைவராய் விளங்கும் சின்னக்
|
கோனார் அண்ணன் என்ற உறவுக்காக , அந்தக் குடும்பத்தின் தலைமைப் பதவியைகௌரவப் பதவியாய்ப் பெரியவருக்குத் தந்து எல்லாக் காரியத்துக்கும் அவர் அங்கீகாரம் பெறப் பணிந்து நிற்பதுதான். முப்பது வருங்களுக்கு முன் மனைவி இறந்த அன்றே சொந்தம் என்ற சுமை பெரியவரின் தோளிலிருந்து இறங்கி விட்டது. அவள் விட்டுச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் சபாபதியைத் தனக்கொரு சுமை என்று கருதாமலும் சுமக்காமலும் இருந்து விட்டார் பெரியவர். அதற்குக் காரணம் , நாலோடு ஐந்தாக இருக்கட்டுமே என்ற நினைப்பில் தனதுபுத்திரச் சுமையோடு சபாபதியையும் சின்னக் கோனார்
|
ஏற்றுக் கொண்டதுதான் ! ஆனால் சபாபதி , தன் பொறுப்பைத் தான் சுமக்கும் வயது தனக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட வயதில் பெரியவரின் எஞ்சி நின்ற சொத்துக்கள் என்ற விலங்குகளையும் அவன் கழற்றி விட்டான். யாரையும் மதியாத அவன் போக்கும் , இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அவன் செய்ய முயன்ற வியாபாரங்களினால் விளைந்த நஷ்டமும் , கை நிறையப் பணமிருக்கிறது என்று அகம்பாவத்தில் ஆடிய ஆட்டங்களும் பெரியவரைப் பாப்பராக்கின. பிறகு ஒருநாள் - தனது ஏக புதல்வன் பட்டாளத்துக்கு ஓடிப்போனான் என்ற செய்தி கேட்டுப் பெரிய கோனார் தனது குடிசையில் ஓர்
|
இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார். தன் பிள்ளையின் செயலாலும் , அவன் பிரிவாலும் மனமுடைந்த பெரிய கோனார் பண்டரிபுரம் போகும் கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டு ஊர் ஊராய்த் திரிந்து யாசகம் புரிந்து , இறுதியில் யாருமற்ற அனாதையாய் பக்தர்களின் உறவோடு பகவானை அடைந்து விடுவது என்ற முடிவோடு தேசாந்திரம் புறப்பட்டுக் கிராமத்தின் எல்லையைக் கடக்கும்போது பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்த சின்னக் கோனார் தலையில் வைத்திருந்த பெரிய பலாப்பழத்தை அப்படியே போட்டுவிட்டு , அவிழ்ந்த குடுமியைக்கூட முடியாமல் ஓடிவந்து
|
பரதேசிக் கூட்டத்தின் நடுவே இருந்த அண்ணனின் கால்களில் சா.டாங்கமாய் வீழ்ந்து கதறினார். அவரது பொன் காப்பிட்ட கரங்கள் அண்ணனின் புழுதி படிந்த பாதங்களை நகர விடாமல் இறுகப் பற்றி இருந்தன. " அண்ணே... நான் உனக்கு என்ன தப்பிதம் பண்ணினேன் ? நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா... " என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி , மனிதனுக்குவந்து வாய்த்ததும் வயிற்றில் பிறந்ததும்மட்டும்தான் சொந்தம் என்பதில்லை என்று ஊராருக்கே உணர்த்தியது. 153 " என்னவோ அழியணும்னு இருந்த சொத்து அவன் மூலமா அழிந்து போச்சு... அந்த
|
வருத்தத்திலே அவன் போயிட்டான்... அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம் ?... நான் தானே என் மவனா வளர்த்தேன் , அவனை !... வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான் , அவனுக்கு... நான் தானே உன் பிள்ளை... நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க ?... என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும் ? என் சொத்து உன் சொத்து இல்லியா ?... என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா ?... " என்றெல்லாம் ஊரைக் கூட்டி நியாயம் கேட்டார் சின்னக் கோனார். அன்று வேறு வழியின்றி விரக்தியுடன் மனசு மரத்துப் போனப்புறம் எங்கே இருந்தால்
|
என்னஎன்று திரும்பி வந்து வீட்டுக்குப் பின்னால் முந்திரித் தோட்டத்தின் நடுவேயுள்ள குடிசைக்கு ஜாகை மாற்றிக்கொண்டு ,கிருஷ்ணா கோவிந்தாஎன்று இருபது வருஷமாய் வாழ்ந்து வரும் பெரிய கோனாருக்கு , பதினைந்து வருஷங்களுக்கு முன்பாகவே வாழ்க்கையின் மீது பற்றும் பாசமும் ஏகமாய் மிகுந்து வர ஆரம்பித்து விட்டது. ஆமாம் ; சபாபதி மனம் மாறி அப்பனைப் பார்க்க பட்டாளத்திலிருந்து ஒருமுறை திரும்பி வந்திருந்தான்... பிறகு அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண் பார்வை மங்கிப் போன பெரிய கோனார் மகனைத் தடவிப் பார்த்து உச்சி மோந்து
|
கண்ணீர் உகுத்தார். அப்போது தகப்பனின் கையை அன்புடன் பற்றிக் கொண்டு ஆதரவான குரலில் சொன்னான் சபாபதி : " நீ ஒண்ணும் பயப்படாதே நைனா... இப்பத்தான் சண்டையெல்லாம் தீந்து போயிட்டதே... எனக்கு உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராது. " " அது சரிதான்டா தம்பி... ஒனக்குக் கண்ணாலம் கட்டி வைச்சுப் பார்க்கணும்னு இருந்தேன்... " என்று தன் ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறினார் கிழவர். அதற்குச் சபாபதி சிரித்தவாறு பதிலளித்தான். " அதுக்கென்னா , கட்டிக்கிட்டாப் போச்சு... அங்கேயேகோட்டர்.தராங்க... குடும்பத்தோட போயிருக்கலாம்... பொண்ணு பார்த்து
|
வெச்சிருக்கியா ? " " அட போடா.... பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி ? உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே !... " என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு குஷியில் பேசினார். " இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனுஷன் ! " என்று நினைத்த சின்னக் கோனார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார். அந்த வரு.மே தஞ்சாவூரில் பெண் பார்த்து , சபாபதிக்குக் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு சபாபதி வருஷத்திற்கு ஒருமுறை தன் மனைவியுடன் வந்து கிழவரைக் கண்டு
|
செல்வது வழக்கமாகி விட்டது. இந்தப் பத்து வருஷமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன ; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல ; நான்கு வருஷங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி , பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும் , முகம் தெரியாத அவர் பேரன்... அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும்
|
அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வரும் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர். " பாபு "... என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை 154 நோக்கி வாகாகி நிமிரும் ; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்... கொஞ்சும் மழலையுடன் , குலுங்கும் சிரிப்புடன் , குளிர்ந்த ஸ்பரிசத்துடன் தெரியும்... அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்.... எத்தனையோ முறை தன்னை மறந்த
|
லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு " பாபூ... " என்று துள்ளி நிமிர்ந்து விடுவார்... பிறகு அது உண்மையல்ல ; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உணர்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும் , இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார். தனிமையில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர... அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்... இந்த லயத்தில்தான் கழிகின்றன. அது சரி , அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே ? அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி ? தன்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.