text
stringlengths 11
513
|
---|
பானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள். சீனிவாசன் முகத்தில் ஆவல் துடிக்க , மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான். " அக்கா அக்கா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்திலே சாவ்டி இருக்கு பாரு.. அதுக்கு பின்புறம் நம்ம வீட்டு கதவு இருக்கக்கா ! கண்ணாலே நான் பார்த்தேன் " என்றான். " அப்படியா ! நிஜமாகவா ? எங்கே வா பாப்போம் " என்று சீனிவாசனின் கையைப் பிடித்தாள். இருவரும் கிராமச்சாவடி நோக்கி ஓடினார்கள். உண்மை தான். அதே கதவு சாத்தப்பட்டு இருந்தது. தூரத்திலிருந்தே தங்கள் நண்பனை இனம் கண்டு கொண்டார்கள் அச்சிறுவர்கள்.
|
பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை. 181 அவர்களுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல முடியாது. அங்கே முளைத்திருந்த சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் அவர்கள் காலடியில் மிதிபட்டு நொறுங்கின. அதிவேகமாய் அந்தக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். அருகில் போய் அதைத் தொட்டார்கள். தடவினார்கள். அதில் பற்றி இருந்த கரையான் மண்ணை லட்சுமி தன் பாவாடையால் தட்டித் துடைத்தாள். கதவோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டாள். அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. சீனிவாசனைக் கட்டிப் பிடித்துக்
|
கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்து சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவைப் பலமாகப் பற்றி இருந்தன. 182 மதினிமார்கள் கதை - கோணங்கி உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல் ; இவன் கேட்ட அதே குரல் ; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா. சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன
|
வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி. இவளைக் போனவர்களெல்லாம் காணவும்தான் என்ன பழசெல்லாம் பிரியத்துக்குரியவர்களையெல்லாம் ஆனார்கள். வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை ? அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் - ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற , நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை. அவர்களெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து எங்கே போய் விட்டார்கள். ஞாபகப்படுத்திக் கொள்ள
|
திரும்பவும் நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும் , நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது. கண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன
|
கூட்டத்தோடு வாசல்வரை வந்து ; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில் , மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன் , பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான். பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான்.நென்மேனி
|
மேட்டுப்பட்டிக்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும். பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும். 183 பஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு
|
மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும் , சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி
|
சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது. செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய்
|
உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல் , போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார். இவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான்
|
மூக்கோரத்தில் இருந்துகொண்டுஎம்மா.... எம்மா....... " என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட , ஓடிப் பிடிக்க , ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க , தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் செம்புகோம்.... செம்புகோம்....என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே ! பல
|
ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான். தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார். அடேய் செம்புகோம் ஏலேய்.....என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் ஓய் ஓய்....என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான். 184 பண்டார வீட்டு
|
மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். கொழுந்தன் வருகிறாரா....என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள். கிட்ட கீகாட்டுக்கறுப்பாய்கரேர்...... ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ளஅய்யோ... மயினீ வராதே...... வராதே * என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார்
|
வீட்டு சுப்பு மதினிக்கும் , பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம்....... என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன் , நிசத்துக்கே அழுதபடி ,மாட்டேம்.... மாட்டேம்..... மாட்டம் போ. " என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில்கலகலகல. * வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம். குச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும் , ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு , நொங்கு , தவுண் , பனம்பழம்
|
என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக , இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம். பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும் , சடையைப் பிடித்து இழுக்கவும் " இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே..... " என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். ஓய்..... மருமோனேஎன்ற கீகாட்டுப் பேச்சில்தாப்பனும் மோனும் பனையேறிமோளை
|
கொண்டு போயிருவியளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா. மடத்துக்கு போயிறவாஎன்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக்கெக்கெக்கே...என்று சிரிப்பு வரும் வெகுளியாய். ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும் , தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி , சம்பட்டி , கடப்பாறை , ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள் , கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள். அய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை
|
உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்குஓசிக்கஞ்சீ......சட்டிப் பானை உருட்டீ.... புது மாப்ளே...என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர் , சட்டை , மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும். தெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் புரிச்சு... புரிச்...என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார
|
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான். " மாப்ளைச் சோறு போடுங்கத்தா.... தாய்மாருகளா.....என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்துசாப்பிட வாங்க மாப்பிளே....என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள். 185 நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக்
|
கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும். செம்புகோம்.... செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் பாரேன்..... " என்று முகத்துக்கு நேராகபளீரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள். " அட போட்டீ... குட்டச்சீ என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். மயினி..... மயினி..... அழுவாத மயினீ...உம்... மென்று முகங்கோணி நிற்கும்
|
குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும் , சிரிப்பு வரும். வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது. தாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும்
|
குருவு மதினி , அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும் , அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா ாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம். இவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே
|
வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான். குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க ; அவள் சேர்ப்பதை , விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான்.
|
பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான். " இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன் என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி. சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள்.வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு 186 மாப்ளையா வாங்க.... ! என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண்
|
வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும் , ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை , குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும்.மயினி.... மயினி..... நீ வாக்கப்பட்டுப் போயிருவியா மயினீ....என்பான்.என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே.... ! என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம். கீ
|
காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும் , நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும்
|
சேர்ந்துஊம்....கொட்டினான். இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள். கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை. வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி , இவன் நெஞ்சில் விழ , கடைசி நேரத்தில் சாத்தூர்
|
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான். அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில். அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது. சூழ்ந்திருந்த காடுகளும் , பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி
|
ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் 187 கரிக்கோடுகளும் , சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள். தண்ணீரில்லாத ஆத்தில் பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர் , தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சுதிக்கு... திக்....கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும்
|
காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது. எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். " காளியாத்தா அப்படி வரங்குடுதாயே....என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும்
|
சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். ம்... ம்... ம்.... ம் ம் ம்வும்.....மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு
|
குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று. கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை
|
எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும் , தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது. தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது. தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று
|
நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஒலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா ? என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள்
|
ஏற்பட்டு , இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த 188 கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள்.என்ன வேணும்மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள். இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது. வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் ஹைய்ய்ய்....என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ்
|
பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான். எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய் , ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில்
|
வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான். " கொழுந்தனாரே.... எய்யா.... கப்பலைக் கவித்திட்டீரா..... கன்னத்தில் கை வைக்காதிரும்.. …. செல்லக் கொழுந்தனாரே.... எய்யா....என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச , அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன் , இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது. நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி - அவசர
|
அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம். 189 புலிக்கலைஞன் அசோகமித்திரன் பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து , உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு
|
க்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி , அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம் , இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது. வேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள் , எலக்ட்ரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் , லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ்
|
டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி , விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில் , வாரக் கணக்கில் , மாதக் கணக்கில். எனக்குத் தெரிந்து ஒருமுறை எங்கள் ஸ்டுடியோ ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. ஒன்றரை வருடம் வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு ,
|
காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கி , தலைமயிரை நரைக்க வைத்து , அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து , டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து , சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து , பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை வந்தபோது நிர்ப்பந்த ஓய்வு ஒரு முடிவுக்கு வந்ததில் உற்சாகக் கிளர்ச்சி கொள்ளலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சி கொண்டு , அதே நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம். அப்படிப்பட்ட
|
கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று , நாளை என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நாளில் தான் அவன் ஒரு பிற்பகல் , நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான். 190 ட்டுச் " என்னப்பா வேணும் ? " என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரௌசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம் , கதைகள் எழுதி பிரசுரம் செய்து பெயர் வாங்கி , எங்கள் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகிவிட்டிருந்தார். தங்கமான பழைய நாட்களில் எங்கள்
|
முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து , புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார். அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயிற்சி அமைத்துக் கொடுத்த உடற்பாங்கு கொண்டவர் என்பதைக் காண்பித்தது. சிறு அறை. சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று. பெரிய மேஜை பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சர்மாதான் அந்த அறைக்குச்
|
சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து , அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வந்தவன் அந்த நாற்காலியின் முதுகுப் புறத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான். " என்னப்பா வேணும் ? " என்று சர்மா கேட்டார். " சனிக்கிழமை வீட்டுக்கு வந்தேனுங்க " என்று அவன் சொன்னான். சனிக்கிழமை நான்
|
ஊரிலேயே இல்லையே ? " என்று சர்மா சொன்னார். " காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க " ஓ , நீயா ? வேலாயுதமில்லை ? " " இல்லீங்க , காதர் டகர் பாயிட் காதர் " 191 " நீ வந்திருந்தயா ? " " ஆமாங்க , வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு " " யாரு வெள்ளை ? " " வெள்ளைங்க. ஏஜண்ட் வெள்ளை. " இப்போ சர்மாவுக்கு விளங்குவது போலிருந்தது. வெள்ளை என்பவன்தான் எங்கள் ஸ்டுடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும் , பெண்களையும் சேர்த்துக் கொண்டு
|
வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு , வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான். " இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா ? " என்று சர்மா சொன்னார். " தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு சொன்னாரு. " " யாரு சொன்னாரு " " அதாங்க , வெள்ளை சாரு " சர்மா எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த ஆளைப் பார்த்தோம். குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தல் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க
|
வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள். 192 " நான் வெள்ளைகிட்டே சொல்லியனுப்பறேன் " என்று சர்மா சொன்னார். நாங்கள் சாய்ந்துகொண்டோம். பேட்டி முடிந்துவிட்டது. அவன் , “ சரிங்க , ” என்றான். பிறகு குரல் சன்னமடைந்து *
|
உடனே ஏதாவது பார்த்துக் கொடுத்தீங்கன்னாக்கூடத் தேவலாம் , சார் " என்றான். “ ஷூட்டிங் ஒண்ணும் இன்னும் ஆரம்பிக்கலையேப்பா. கிரவுட் சீனெல்லாம் கடைசியிலேதான் எடுப்பாங்க. " " அதுக்கில்லீங்க. ஏதாவது ரோல் தாங்க. " “ உனக்கு என்ன ரோல்பா தர முடியும் ? அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர் கிட்டே எல்லா விவரமும் தந்துட்டுப் போ. " நான்தான் காஸ்டிங் அசிஸ்டெண்ட். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர் , வயது , உயரம் , விலாசம் எல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு
|
பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதம் திரும்பி வந்துவிடும் , விலாசதாரர் வீடு மாற்றிப் போய்விட்டார் என்று. அப்புறம் எல்லாம் வெள்ளை தான். ஆனால் அவன் என் பக்கம் திரும்பவில்லை. அந்த மூவரில் சர்மாதான் மிக முக்கியமானவர் என்று அவன் தீர்மானமாக இருந்தான். “ நீங்க பாத்துச் சொன்னாத்தாங்க ஏதாவது நடக்கும் " என்றான். “ உனக்கு நீஞ்சத் தெரியுமா ? ” என்று சர்மா கேட்டார். ” நீச்சலா ? ” என்று அந்த ஆள் திரும்பக் கேட்டான். பிறகு “ கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க " என்றான். " கொஞ்சமெல்லாம் தெரிஞ்சாப் போறாது. ஒரு ஆளு மேலேந்து ஆத்துலே
|
பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது. " 193 “ எனக்கு டகர் பாயிட் வரும்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க. " “ அதென்ன டகர் பாட் ? ** ” டகர் பாயிட்டுங்க.. டகர் , டகர் இல்லே ? " இப்போது எல்லோரும் கவனமாக இருந்தோம். ஒருவருக்கும் புரியவில்லை. அவன் சொன்னான். “ புலிங்க , புலி.. புலி பாயிட்... " ஓ , டைகர் ஃபைட்டா. டைகர் ஃபைட் , நீ புலியோட சண்டை போடுவியா ? " “ இல்லீங்க. புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க , இல்லீங்களா ? " " புலி வேஷக்காரனா நீ ? புலி
|
வேஷமெல்லாம் சினிமாவுக்கு எதுக்கப்பா ? புலி வேஷமா ? சரி , சரி வெள்ளை வரட்டும். ஏதாவது சான்ஸ் இருந்தா கட்டாயம் சொல்லி அனுப்பறேன். " " நான் ரொம்ப நல்லா டகர் பாயிட் பண்ணுவேங்க. நிஜப் புலி மாதிரியே இருக்கும். " " நிஜப்புலிக்கு நிஜப்புலி கொண்டு வந்துடலாமே " “ இல்லீங்க நான் செய்யறது அசல் புல்லி மாதிரியே இருக்கும். இப்ப பார்க்கறீங்களா ? " " ஆஹாம் , வேண்டாம்ப்பா , வேண்டாம்ப்பா. " “ சும்மா பாருங்க , சார் ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க. " 194 " ஏன் ஒவ்வொரு மொகரத்துக்கோரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம்
|
நிறையப் போறதே. “ நம்பளது வேறு மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும். " அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித்தலை முகமூடியோடு இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான். " பேஷ் " என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே
|
பார்த்த வண்ணம் இருந்தோம். அவன் கையை உயரத் தூக்கி ஒருமுறை உடம்பைத் தளர்த்திக்கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான். " பேஷ் " என்று சர்மா மீண்டும் சொன்னார். அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக்கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது. அவன் மீண்டும் ஒருமுறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பாகத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு
|
கால்களில் அறையில் காலியாகவிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் “ ஐயோ ! " என்றேன். அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீது பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள் , புத்தகங்கள் , வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீதும்கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜைமீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொருமுறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே
|
பாய்ந்தான். நாங்கள் எல்லோரும் " ஓ ! " என்று கத்திவிட்டோம். 195 அது பழங்காலத்துக் கட்டடம். சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்கலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் , வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி , அழுக்கு , ஒட்டடை படிந்து இருந்தது. அவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி , எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக்கொண்டான். பிறகு கைகளால்
|
வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலி போல கர்ஜித்தான். “ பத்திரம்பா , பத்திரம்பா ! " என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக்கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது. அவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான். நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை
|
பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான். சர்மாவால் பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான். நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான். " நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா " என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்து கும்பிட்டான். 196 " நீ எங்கேயிருக்கே ? " என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப் பேட்டை என்று சொல்லி , ஒரு எண் , சந்தின் பெயர்
|
சொன்னான். நான் குறித்துக்கொண்டேன் ; அவன் தயங்கி , “ ஆனா எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க ” என்றான். “ ஏன் ? ” என்று சர்மா கேட்டார். “ இல்லீங்க... ” என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான். “ எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர் " என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டான். “ நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க ” என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான். " நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க.
|
அதுதான் என்ன பண்ணும் ? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. " அவன் இப்போது அழுதுகொண்டிருந்தான். சர்மாவுக்கு ஏதோ தோன்றி , “ நீ இன்னிக்குச் சாப்பிட்டாயா ? ” என்று கேட்டார். அவன் , “ இல்லீங்க ” என்றான். அவன் அன்றில்லை. எவ்வளவோ நாட்களாக சாப்பிடவில்லை என்பதுகூடக் கேட்கத் தேவையற்றதாகயிருந்தது. சர்மா அவர் ஜேபியில் கையை விட்டார். நாங்களும் உடனே எங்கள் பைகளில் துளாவினோம். சில்லரை எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்க்கும். சர்மா , " இந்தா இதைக் கொண்டு போய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு ” என்றார்.
|
அவன் , “ வேண்டாங்க ” என்றான். “ என்ன வேண்டாம் ? போய்ச் சாப்பிடுப்பா முதல்லே ” என்று சர்மா சொன்னார். 197 “ ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா ” என்று அழுதுகொண்டே அவன் சொன்னான். சர்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. " கொடுத்த பணத்தை நீ எப்படீய்யா வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுவே ? பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்கேய்யா வரும் ? ஒரு சல்லீன்னாலும் லக்ஷ்மீய்யா. உனக்கு எங்கேய்யா லக்ஷ்மீ வருவா ? போ , வாங்கிண்டு முதல்லே சாப்பிடு " என்று கத்தினார். அவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக்கொண்டான். சர்மா இதமாகச்
|
சொன்னார். " ரோல்லெல்லாம் என் கையிலே இல்லைப்பா. உனக்கு முடிஞ்சது நான் செய்யறேன். போ , முதல்லே வயத்துக்கு ஏதாவது போடு. " பிறகு என்னைப் பார்த்து , " கொஞ்சம் இவனை காண்டீனுக்கு அழைச்சுண்டு போய் சாப்பிட வை ” என்றார். நான் உடனே எழுந்தேன். அவன் , “ வேண்டாங்க. நான் போய்ச் சாப்பிடறேங்க. நான் போய்ச் சாப்பிடறேங்க ” என்றான். பிறகு மீண்டும் எங்களுக்குக் கும்பிடு போட்டுவிட்டு வெளியே போனான். நாங்கள் சிறிது நேரம் பேசாமல் இருந்தோம். சர்மா அவரையறியாமல் சிறிது உரக்கப் பேசிக்கொண்டார். “ இவனுக்கு என்ன பண்ணறது ? இங்கே இப்போ
|
எடுக்கிறதோ ராஜா ராணிக் கதை. " ஆனால் அவர் வெறுமனே இருந்துவிடவில்லை. இரு வாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷமணிந்து எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்றுவிட்டார். புலியாட்டமாகக் காண்பிக்கும்போது கதாநாயகனுக்குப் பதில் காதர்டூப்செய்யலாம். அவனுக்கு ஒரு நூறு ரூபாயாவது வாங்கித் தரலாம். நான் காதருக்குக் கடிதம் போட்டேன். நான்கு நாட்களில் வழக்கம்போல அக்கடிதம் திரும்பி வந்தது , விலாசதாரர் இல்லையென்று. 198 சர்மா வெள்ளையை அழைத்துக்கொண்டு காதரைத் தேடினார்.
|
நாங்களும் எங்கெங்கோ விசாரித்துத் தேடினோம். கதாநாயகன் எதிரிக் கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டே வந்தது. காதர் கிடைக்கவில்லை. அவன் கிடைத்திருந்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாகக் காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக்கொண்டிருந்தது. நாங்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. 199 ஒரு அறையில் இரண்டு
|
நாற்காலிகள் - ஆதவன் கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி , அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் - ஒரே கணம் - பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கைலாசம் தம்ளரை மறுபடி மேஜை மேல் வைத்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீலவானம் , ஓரிரு மேகங்கள் , மரங்களின் உச்சிகள் , அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உச்சிகள். ………
|
திடீரென்று இவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது பற்றிய தன்னுணர்வினால் அவர் பீடிக்கப்பட்டார். அகர்வால் இந்தப் பார்வையைக் கவனித்து ,என்ன , அடுத்த கதையைப் பற்றி யோசனையா ?என்றோ ,என்ஜாயிங் தி சீனரி , கைலாஷ் சாப் ?என்றோ பேசத் தொடங்கப் போகிறான் என்ற பயம்.. அவர் அவசரமாக ஒரு ஃபைலை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டார். அது அவர் ஏற்கனவே பார்த்து முடித்து , பியூன் எடுத்துச் செல்வதற்காக டிரேயில் வைத்திருந்த ஃபைல் , இருந்தாலும் அதை மறுபடி எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு , பேனாவைத் திறந்து வலது கையில் பிடித்துக்கொண்டு ,
|
சற்று முன் தான் எழுதிய நோட்டை அணுஅணுவாகச் சரிபார்த்தார். தெளிவில்லாதனவாகத் தோன்றிய -க்கள் மேலுள்ள புள்ளிகள் , t- க்களின் மேல் குறுக்காகக் கிழிக்கப்படும் கோடுகள் , ஃபுல் ஸ்டாப்புகள் , கமாக்கள் , எல்லாவற்றிலும் பேனாவை மறுபடி பிரயோகித்து ஸ்பஷ்டமாக்கினார். ஆங்காங்கே சில புதிய கமாக்களைச் சேர்த்தார். ஒரு 0 , a போல இருந்தது. அதையும் சரிபார்க்கத் தொடங்கினார். அப்போதுதான் திடுமென அகர்வாலின் குரல் ஒலித்தது. “ ரொம்ப பிசியா ? " அவர் எதிர்பார்த்திருந்த , பயந்திருந்த , தாக்குதல் ! நல்லவேலை , இப்போது மட்டும் அவர் வெளியே
|
பார்த்துக் கொண்டிருந்தால் ! ம்ம்என்றவாறு அவர் வேறு ஏதாவதுa oபோலவோ அல்லதுo aபோலவோ ,u vபோலவே ,n rபோலவோ , எழுதப்பட்டிருக்கிறதா என்றுத் தேடத்தொடங்கினார். 200 அகர்வாலின் நாற்காலி கிரீச்சென்று பின்புறம் நகரும் ஓசையும் இழுப்பறை மூடப்படும் ஓசையும் கேட்டன. ஃபைவ் மினிட்ஸில் வருகிறேன்என்று அவரிடம் சொல்லி விட்டு , அவன் அறைக்கு வெளியே சென்றான். கைலாசம் ஓர் ஆறுதல் பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். மிக இயல்பாகவும் சுதந்தரமாகவும் உணர்ந்தவராக , ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்கத் தொடங்கினார். ஒரு கிளிக்கூட்டம்
|
பறந்து சென்றது. அக்காட்சி திடீரென்று மனத்தைப் பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. கிராமத்தில் , ஆற்றங்கரை மணலில் உட்கார்ந்திருந்த மாலைகள். பக்கத்தில் நண்பன் ராஜூ. பேசாமலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்ட அன்னியோன்யம். ஆனால் இப்போது அவர் கிராமத்தில் இல்லை. தில்லியில் , மத்திய சர்க்கார் அலுவலகம் ஒன்றின் பிரம்மாண்டமானதொரு சிறை போன்ற கட்டடத்தின் ஓர் அறையில் அமர்ந்திருக்கிறார். அருகில் இருப்பது ராஜு இல்லை , அகர்வால். இவன் அவரைப் பேசாமல் புரிந்து கொள்கிறவன் இல்லை , பேசினாலும் புரிந்து கொள்கிறவன் இல்லை. மணி
|
பன்னிரண்டு பத்து. அகர்வால் இதோ வந்துவிடுவான். கைலாசம் சீக்கிரமாக அவனிடம் கூறுவதற்கேற்ற ஒரு காரணத்தை சிருஷ்டி செய்தாக வேண்டும். அவனுடன் தான் ஏன் டிபன் சாப்பிட வரமுடியாது என்பதற்கான காரணம். பேங்குக்குப் போவதாகவோ , இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டப் போவதாகவோ , கடிகார ரிப்பேர் கடைக்குப் போவதாகவோ ஆஸ்பத்திரியில் இருக்கும் ஷட்டகரைப் பார்க்கப் போவதாகவோ ( அவருக்கு அப்படி ஒரு ஷட்டகர் இல்லவே இல்லை ) இன்று கூற முடியாது. இந்தக் காரணங்களைச் சென்ற சில தினங்களில் அவர் பயன்படுத்தியாயிற்று. வயிற்று வலியாயிருக்கிறதென்று சொன்னாலோ ,
|
அவனுடைய அனுதாபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அதையும் வெறுத்தார். லைப்ரரிக்குப் போவதாகச் சொல்லலாமா ? சொல்லலாம். ஆனால் அதில் ஓர் அபாயம் இருக்கிறது. அகர்வால் தானும் வருகிறேனென்று கிளம்பி விடலாம். ஈசுவரா ! என்னைக் காப்பாற்று. 201 கைலாசம் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டிருக்க வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு மறுபடி கண்களைத் திறந்தபோது , எதிரே அவருடைய நண்பன் ராமு புன்னகையுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.ஹலோ ! நீ எப்படா வந்தே ? " என்றா ஆச்சரியத்துடன். ராமு பம்பாயில் வேலையிருந்தான். ரூமுக்குள்ளே
|
வந்ததைக் கேக்கறியா , இல்லை தில்லிக்கு வந்ததையா ?என்றான் ராமு. " ரூமுக்குள்ளே இப்பத்தான் வந்தே , தெரியும்.. ஷ்யூர் ? யூ மீன் , நீ இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சியா ? "நான் தூங்கிண்டு இருக்கலை... ' பரவாயில்லையடா , தூங்கிண்டிருந்தாலும்தான் என்ன ? தட்ஸ் யுவர் ஜாப் , இல்லையா ? அரசாங்கத்திலே இனிஷியேட்டிவ் எடுத்துக் கொள்பவன் அல்ல , எடுத்துக் கொள்ளாதவன்தான் விரும்பப்படுகிறான்... ' கைலாசம் கரகோஷம் செய்வது போலக் கேலியாகக் கை தட்டினார். அவருக்கு ராமுவைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. அறைக் கதவு திறந்தது , அகர்வால்
|
உள்ளே வந்தான். அகர்வால்ஜி ! மீட் மை ஃபிரண்ட்.. மிஸ்டர்ராமச்சந்திரன் ஆஃப் கமானீஸ்... " ராமுவும் அகர்வாலும் கைகுலுக்கிக் கொண்டார்கள். ஆஸஃப் அலி ரோடிலேயோ எங்கேயோ இருக்கிறதல்லவா , உங்கள் அலுவலகம் ?என்றான் அகர்வால். 202ஓ , நோ ! ஹீ இஸ் இன் பாம்பேஎன்ற கைலாசம் , தொடர்ந்து அவசரமாக ,அச்சா அகர்வால் , இவருக்கு ரிசர்வ் பேங்கில் இருக்கிற என்னுடைய ஒரு நண்பரைப் பார்க்கணுமாம்.... சோ இவரை அங்கே அழைத்துப் போகிறேன்... எக்ஸ்க்யூஸ் மீ ஃபார் லஞ்ச்என்றார். அகர்வாலில் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.அச்சா...என்றான்.
|
ராமுவும் கைலாசமும் வெளியே வந்தார்கள். இது என்னடாது , ரிசர்வ் பேங்க் , அது இதுன்னு ? ” என்றான் ராமு.வேடிக்கையிருக்கு , இல்லையா ?என்று கைலாசம் சிரித்தார்.என்ன பண்றது... இவன்கிட்டே மாட்டிண்டு அவஸ்தைப் படறேன் நான். சொன்னால்கூடப் புரியுமோ என்னவோ.. போரா ? ' ஆமாம்என்றார் கைலாசம். அவர் முகத்தில் குதூகலமும் நன்றியுணர்வும் ஏற்பட்டது. எவ்வளவு கரெக்டாக இவன் புரிந்து கொண்டு விட்டானென்று. ராமுவின் அண்மையினால் தனக்கு ஏற்பட்ட மனநிறைவும் மகிழ்ச்சியும் அவருக்கு இதமாக இருந்தன. அகர்வாலுடன் அதிருப்தியும் சலிப்பும் கொள்ளும்போது ,
|
ஒருவேளை தன்னை ஓர் எழுத்தாளனாக இவன் புரிந்து கொள்ளாததுதான் தன் அதிருப்திக்குக் காரணமோ , ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்வால் ஏற்படுத்தும் சலிப்பைக் கருதி அதைக் கூடிய வரை சகித்துக் கொள்ளவும் அவர் முயன்று வந்தார். தன்னை நன்னெறிப்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சியாக அதைக் கண்டார். இப்போது ராமு அவருக்குத் தன் மீதே
|
ஏற்பட்டு வந்த சந்தேகங்களை அறவே போக்கினான். ராமுவுக்கு அவர் கதைகள் எழுதுவது தெரியும். ஆனால் அவன் அவற்றை வாசிப்பது கிடையாது. அவர் கதைகளே எழுதாதவராக இருந்தாலும்கூட அவனைப் பொறுத்தவரையில் எந்த 203 வித்தியாசமும் ஏற்பட்டிருக்க முடியாது , பார்க்கப் போனால் “ கதையெழுதும் வீண் வேலையெல்லாம் எதற்கு வைத்துக் கொள்கிறாய் , அது ஒரு கால விரயம்என்கிற ரீதியில்தான் அவன் பேசுவான்.நீயெல்லாம் என்னத்தை எழுதுகிறாய் , ஹெரால்ட் ராபின்ஸ் , இர்விங் வாலஸ் இவங்களெல்லாம் எவ்வளவு ஜோராக எழுதுகிறான்கள் , அப்படியல்லவா எழுத வேண்டும்என்பான்.
|
அவருடைய எழுத்து முயற்சிகள் பற்றிய அவனுடைய இந்த அலட்சிய பாவத்துக்கு அப்பாற்பட்டும் அவர்களிடையே அரியதொரு நட்பு நிலவியது. தம் சின்னஞ்சிறு அங்க அசைவுகளையும் முகச் சுளிப்புகளையும்கூட அவர்கள் பரஸ்பரம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு இன்பமயமானதொரு அன்னியோன்யத்தில் திளைத்தார்கள். இல்லை , அவருடைய எழுத்துக்கும் இந்த நட்புக்கும் சம்பந்தமே இல்லை. கைலாசத்துக்கு ராமுவை அப்படியே இறுகத் தழுவிக் கொள்ளலாம் போலிருந்தது. எனக்கு ஒரே பசிஎன்றான் ராமு. " டிபன் சாப்பிடத்தான் போகிறோம். போன தடவை வந்திருந்தபோது ஒரு இடத்துக்குப் போனோமே
|
யூ.என்.ஐ.யா அதற்குப் பேரு ? - அங்கேயே போகலாம். இல்லை , அங்கே இப்பக் கூட்டமாக இருக்கும்என்றார் கைலாசம் , உண்மையில் அங்கே அகர்வால் வந்துவிடப் போகிறானேயென்று அவருக்குப் பயமாக இருந்தது. அந்த வட்டாரத்திலிருந்த இன்னொரு காரியாலயத்துக்குள் நுழைந்த அவர்கள் , அங்கிருந்த கேண்டீனில் போய் உட்கார்ந்தார்கள். ஆமாம் , போன தடவை நான் வந்தபோது நீ மட்டும் தானே ரூமிலே தனியா இருந்தே ?என்றான் ராமு. அதையேன் கேக்கிறே , எங்க மினிஸ்ட்ரியிலே ஆபீசர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகப் பெருகிப் போச்சு. ஸோ டெபுடி செக்ரெட்டரி ராங்குக்கு
|
உள்ளவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும்தான் தனி ரூம்னு சொல்லிட்டான். நான் ஒரு ராங்க் கீழே இருக்கிறவன் ஆனதினாலே , இந்த அகர்வாலோட ஒரு ரூமை ஷேர் பண்ணிக்கும்படி ஆயிடுத்து. ' 204அகர்வாலா ? ' ஆமாம் யு.பி.க்காரன்... ' என்ன பண்றான் ? எப்பவும் தொண தொணங்கிறானா > ' தொண தொணன்னா.. என்ன சொல்றது ? இதெல்லாம் சப்ஜெக்டிவ்தான் இல்லையா ? எனக்கு அவனுடைய கம்பெனிரசமாக இல்லை. அவ்வளவுதான். புரிகிறது. ' இவன் அவன் வேறே பாஷைக்காரன்கிறதினாலேயோ , இலக்கிய அறிவு அதிகம் படைத்தவனாயில்லாததினாலோயோ , வேறு விதமான சாப்பாடும் பழக்கங்களும்
|
உள்ளவன்கிறதினாலேயோ ஏற்படுகிற முரண்பாடு இல்லை. இன்ஃபாக்ட் , இதே யு.பி.யைச் சேர்ந்த இன்னொருத்தனுடன் நான் மிகவும் சிநேகமாக இருக்கக் கூடும்... உம்ம்...ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். இது அவாவா இயல்பைப் பொறுத்த விஷயம் , இல்லையா ? மனப்பக்குவத்தைப் பொறுத்த விஷயம்.. இரண்டு மனிதர்கள் ஒத்துப் போகிறார்கள். வேறு இரண்டு மனிதர்கள் ஒத்துப் போவதில்லை. இதை தர்க்க ரீதியாக விளக்குவது ரொம்பக் கஷ்டம்... ' ஆனாலும்கூட உன் மனம் இதைப் பற்றி மிகவும் தர்க்கம் செய்தவாறே இருக்கிறது போலிருக்கிறதே ! " ஐ ஆம் சாரி.... நான்
|
உன்னை போர் அடிக்கிறேன் , ரொம்ப. ' 205நோ நோ - ப்ளீஸ் ப்ரொஸீட் , இட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங். ' யார் மனசையும் புண்படுத்தக்கூடாது , எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்ளணும் , கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளணும் என்று நம்புகிறவன் நான்... ஆனால் அதை ஒரு மூட நம்பிக்கையாக இவன் நிரூபித்து விட்டான். இவனுடனிருக்கும்போது என்னை நான் இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. எவ்வளவு வார்த்தைகளை செலவழித்தாலும் இவன் என்னைப் புரிந்து கொள்வதில்லை. அதை விட மோசம் , புரிந்து கொண்டு விட்டதாக நினைக்கிறான். ஆனால் அவன் புரிந்து
|
கொள்ளவில்லை என்பதை நான் அதிர்ச்சியுடன் உணருகிறேன். ' அவ்வாறு நேர்வதுண்டுஎன்று ராமு அனுதாபப் புன்னகையுடன் தலையை ஆட்டினான். இவ்வளவுக்கும் அவன் என்னிடம் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறான் , தெரியுமா ? ஆனால் மதிப்பு நேசத்தின் ஆதரவாகிவிட முடிகிறதில்லை.... சில சமயங்களிலே காலை நேரத்தில் அவன் என்னைப் பார்த்து முதல் புன்னகை செய்யும்போது , குட் மார்னிங் சொல்லும்போது , அவற்றை அங்கீகரிக்கவும் எதிரொலிக்கவும் கூட எனக்குத் தயக்கமாக இருக்கும். இவன் புன்னகை செய்வதும் வணக்கம் தெரிவிப்பதும் அவன் மனத்தில் என்னைப் பற்றிக்
|
கொண்டுள்ள ஒரு தவறான உருவத்தை நோக்கி , அவற்றை அங்கீகரிப்பது இந்த மோசடிக்கு உடந்தையாயிருப்பது போல் ஆகும். எனவே அவனுடைய சிநேக பாவத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் நாள் முழுவதும் நம்முடன் ஒரே அறையில் உட்கார்ந்திருப்பவனுடன் இவ்வாறிருப்பது எப்படிச் சாத்தியமாகும் ? நானும் புன்னகை செய்கிறேன். நாங்கள் பேசத் தொடங்குகிறோம். எங்களுடைய பரஸ்பர மோசடி தொடங்குகிறது. இந்த ரீதியில் போனால் நான் விரைவில் அவன் மனத்தில் உருவாகியுள்ள அவனுடைய தோற்றப் பிரகாரமே மாறிவிடப் போகிறேனோவென்று எனக்குப் பயமாயிருக்கிறது. *
|
ராமு சிரித்தான். இது சிரிக்கும் விஷயமல்லஎன்று கைலாசம் ஒரு கணம் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்துவிட்டு , பிறகு தானும் சிரித்தார். டிபன் வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள். 206உனக்கு இந்த மாதிரியான அனுபவம் ஒன்றும் ஏற்பட்டதில்லையா ?என்றார் கைலாசம் ' ராமு தோள்களைக் குலுக்கியவாறு ,நாமெல்லாம் ரொம்பச் சாதாரணமான ஆசாமிஎன்றான்.நீ ஒரு கிரேட் ரைட்டர்... எனவே பலதரப்பட்டவர்கள் உன்பால் ஈர்க்கப்படுகிறார்கள் ' கைலாசம் ராமுவைக் குத்தப் போவது போலப் பாசாங்கு செய்தார். எனவே , எனக்கு மனித சகோதரத்துவத்தைப் பற்றிய
|
இல்யூஷன்கள் எதுவும் கிடையாது. ஸோ எனக்கு எப்போதும் ஏமாற்றம் உண்டாவதில்லைஎன்றான் ராமு தொடர்ந்து. இல்யூஷன்கள் எனக்கும்தான் இல்லை. ஆனால்..என்று கைலாசம் கூறி நிறுத்தினார். தன் மனத்தில் குமிழிட்ட உணர்வுகளுக்கு எவ்வாறு சரியாக வடிவம் கொடுப்பதென்று யோசித்தவராக , அவர் மனத்தில் அகர்வாலின் உருவம் தோன்றியது. அவன் தனக்கு நகைச்சுவையாகப்படும் ஏதாவது ஒன்றைக் கூறி சிரிப்பை யாசித்தவாறு அவர் பக்கம் பார்ப்பது. குதுப் மினார் , இந்தியா கேட் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் பாணியில் * கைலாசம் கிரேட் டாமில் ரைட்டர் என்று தன்
|
நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துதல் , ஏதாவது ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ சொல்லி அதற்குத் தமிழில் என்னவென்று கேட்பது , தமிழ்நாட்டு அரசியல் நிலை , அங்கு நடைபெறும் ஏதாவது நிகழ்ச்சி அல்லது அதிகமாக அடிபடும் பிரபலமான பெயர் பற்றி அவரை விசாரிப்பது. அவனுடைய இத்தகைய சிரத்தைப் பிரதியாகத் தானும் அவனுடைய மாநிலத்தின் அரசியல் , பிரமுகர்கள் , மொழி ஆகியவற்றில் சிரத்தை கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது , தன் குடும்ப சமாசாரங்களை அனாவசியமாக அவரிடம் சொல்வது , அவருக்கு அந்தக் காரியாலயத்தில் நெருக்கமாக இருந்த வேறு சிலர் பற்றி
|
அனாவசியக் கேள்விகளைக் கேட்பது , அபிப்ராயங்கள் சொல்வது ( ஒரு பொறாமைமிக்க மனைவி போல ).... பலவிதமான நிலைகளிலும் காட்சிகளிலும் அவர் அவனைக் கண்டார். வழக்கமான சோர்வும் குழப்பமும்தான் உண்டாயிற்று. எத்தகைய தெளிவும் ஏற்படவில்லை. உன்னிடம் என்ன சிரமமென்றால் , நீ ஒரு வழவழா கொழகொழாஎன்றான் ராமு. சர்வர் கொண்டு வந்து வைத்த காப்பியை ஒரு வாய் உறிஞ்சியவாறு ,வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நீ இருப்பதில்லை. ' வாஸ்தவம் ’ 207ஒருத்தனுடன் ஒத்துப்போக முடியவில்லையென்றால் நிர்த்தாட்சண்யமாக அவனை ஒதுக்கிவிட வேண்டியதுதான். இட்ஸ் வெரி
|
சிம்பிள். அவன் உன்னுடைய நட்புக்காக ஏங்குவதாக உனக்குத் தோன்றியது. நீ அவனுடைய முயற்சிகளுக்கு வளைந்து கொடுத்தாய் , ஓ.கே. ஆனால் சீக்கிரமே அத்தகைய ஒரு நட்பு ஏற்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் இல்லையென்று தெரிந்து போயிற்று. ஸோ , அப்படித் தெரிந்த உடனேயே அவனை அவாய்ட் பண்ண வேண்டியதுதானே , இதிலே என்ன பிரச்னைன்னு எனக்குப் புரியலை. அப்படி அவனை நான் அவாய்ட் பண்ணிண்ண்டுதான் இருக்கேன். ஆனால் இது ஒரு குற்ற உணர்ச்சியைத் தருகிறது... குற்ற உணர்ச்சி எதற்காக ? " எங்கள்என் முடிவுகள் தவறாயிருக்குமோன்னு எனக்கே என் மேலே எப்பவும் ஒரு
|
சந்தேகம். ஒரு வேளை என்னிடமிருந்த ஏதோ குறைபாடுகள் காரணமாகவும் நட்பு தோல்வியடைந்திருக்கலாமோ , அப்படியானால் அந்தக் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று ஓர் ஆர்வம்.. " ராமு , தான் சற்றுமுன் சொன்னது நிரூபணமாகி விட்டது என்பதுபோலத் தலையில் அடித்துக்கொண்டான். நான் ஓர் எழுத்தாளன் என்கிற கவர்ச்சியினாலே அவன் என்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்னு சொன்னே... ஆனால் , உண்மையில் , நான் ஒரு எழுத்தாளனாக இல்லாமல் சாதாரண மனிதனாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் ஏங்குவதாக எனக்குப் படுகிறது. ரமு ஓர் அடம்பிடிக்கும் குழந்தையைப்
|
பார்ப்பது போல அவரை ஆயாசத்துடன் பார்த்தான். நீ ஒரு தமிழனாக இல்லாமல் வடக்கத்தியானாக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குவது போலப் படவில்லையா ? " ஆமாம் , அப்படியும்தான் தோன்றுகிறதுஎன்றார் கைலாசம் ஆச்சரியத்துடன். 208நீ இந்தியில் ஏதாவது பேச முயன்றால் அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்திப்படம் ஏதாவதொன்றைப் பார்த்து அதைப் பற்றி அவனிடம் சர்ச்சை செய்தாலோ , சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்றாலோ , அவன் ஜன்ம சாபல்யமடைந்தது போலப் பரவசமடைந்து போகிறான் ' ஆமாம் , ஆமாம். * இந்திப் புத்தகங்கள் , பத்திரிகைகள்
|
எல்லாம் உனக்கு சப்ளை பண்ணவும் , உன்னுடைய இந்தி அறிவை விருத்தி செய்யத் தன்னாலான உதவிகளைச் செய்யவும் கூடத் தயாராக இருப்பானே / " கைலாசம் சந்தேகத்துடன் ராமுவை உற்றுப் பார்த்தார்.ஏண்டா , கேலி பண்றயோ ?என்றார்.கேலியோ , நிஜமோ , எனக்கு இந்த மாதிரி ஆளெல்லாம் ரொம்பப் பரிச்சயமானவர்கள் , அப்படின்னு சொல்ல வந்தேன். ' சொல்லு , சொல்லு. நான் மாசத்திலே இருபது நாள் இந்தியா முழுவதிலும் சுற்றியபடி இருக்கிறவன். எனக்கு இங்குள்ள எல்லாவிதமான டைப்பும் அத்துப்படி. ' விஷயத்துக்கு வா / * இதுவெல்லாம் ரொம்ப அடிப்படையான எலிமெண்டரி டைப்.
|
கொச்சையான மாயைகளிலே தஞ்சமடைகிற ரகம். தனக்கென்று ஒரு ஹோதாவில்லாததினாலே , ஒரு தனித்த ஐடென்டிடி இல்லாததினாலோ , எதன் மீதாவது சாய்ந்து கொள்வதன் மூலமாகத்தான் அவ தன்னை உணர முடிகிறது. நிரூபித்துக் கொள்ள முடிகிறது. பலம் வாய்ந்த , மகத்துவம் வாந்த ஏதாவது ஒன்றுடன் தன்னை ஐடென்டிஃபை பண்ணிக் கொள்வதன் மூலம் , அதன் ஒரு பகுதியாக ஆவதன் மூலம். 209யூ மீன்.. ' " ஆமாம் , நீ அவன் போன்றவர்கள் இகழ்ச்சியாகக் கருதும் ஒரு சராசரி மதராஸி இல்லை. நல்ல அறிவும் பண்பும் உடையவனாயிருக்கிறாய். கதை வேறு எழுதுகிறாய். சப்பாத்தியோ சமோசாவோ
|
சாப்பிடுவதில் உனக்கு ஆட்சேபணையில்லை. இதெல்லாம் அவனை மிகவும் பாதுகாப்பற்றவனாக உணரச் செய்திறது போலும். மதராஸிகளை ரசனையற்ற மூடர்களாக , பணிவற்ற காட்டுமிராண்டிகளாக , குறுகிய நோக்கும் அசட்டுக் கர்வமும் உள்ளவர்களாக , சண்டைக்காரர்களாக - எப்படி எல்லாமோ அவன் கற்பனை செய்து கொண்டிருக்கலாம் , உன்னைச் சந்திப்பதற்கு முன்பு. அவன் ஒரு உயர்ந்த இனத்தவனென்ற மாயையின் பகுதி இதெல்லாம். ஆலாம் இந்த மாயையைச் சிதைத்து விட்டாய். அவனைச் சிறுமைப்படுத்தும் உத்தேசம் இல்லாமலிருந்தும்கூட நீ அவனை தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்து விடுகிறாய்.
|
சரி , எப்படி யிருந்தால் என்ன ? என் மொழிதான் ஆட்சிமொழி , என் சகோதரர்களே ஆட்சி புரிபவர்கள் என்பன போன்ற எண்ணங்களில் தஞ்சமடைந்து அவன் ஆசுவாசம் பெற வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் இந்த எண்ணங்கள் அவனைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கின்றன. இவரும் என்னைப் போன்ற ஒரு யு.பி.வாலாவாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வடக்கத்தியானாக இருந்தால் தேவலையே என்று அவனுக்குத் தோன்றுகிறது... ' நீ பலே , பேஷ் , ' என்ன , நான் சொன்னது சரியில்லையா ? நூற்றுக்கு நூறு சரி. ஐ திங்க். இனிமேல் கதையெழுத வேண்டியது நானில்லை , நீதான்.போதும் , போதும். நீ
|
கதையெழுதிவிட்டுப்படுகிற அவஸ்தை போதாதா ? ' இருவரும் சிரித்தவாறே மைஜையை விட்டு எழுந்தனர். கேண்டீனுக்கு வெளியே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை இருந்தது. ஆளுக்கொரு பீடா வாங்கி வாயில் போட்டுக் கொண்டு , சற்று நேரம் சுற்றுப்புற உலகை வேடிக்கை பார்த்த அமைதி. அகர்வாலுடன் இப்படி ஒரு நிமிஷமாவது அமைதியாக உணர்ந்திருக்கிறாரா ? சதா அனாவசியச் சர்ச்சைகள் , தனக்காக அவன் அணியும் வேஷங்களை உணராதது போன்ற பாசாங்கு , அவனுக்காகத் 210 தானும் வேஷமணிய வேண்டிய பரிதாபம். அவர்களிடையே இல்லாத பொதுவான இழைகளுக்காக வீண் தேடல்... இந்த ராமு ஒரு
|
யு.பி.வாலாவாக இருந்திருக்கக் கூடாதா ? அப்போது அவர் அவன்பால் எழும் நேச உணர்வுகள் குறித்து இந்த அளவு குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. உடல் வனப்பு நன்கு தெரியும்படியாக உடையணிந்த மூன்று நடுத்தர வயதுப் பெண்மணிகள் அவர்களைக கடந்து நடந்து சென்றார்கள்.தில்லிப் பொம்மனாட்டிகள் பம்பாயிலே இருக்கிறவாளையும் தூக்கியடிச்சுடுவா போலிருக்கே வரவர ! " என்றான்ராமு. ம் , ம்என்று கைலாசம் தலையைப் பலமாக ஆட்டி ஆமோதித்தார். வாய்க்குள் வெற்றிலை எச்சில் ஊறத் தொடங்கியிருந்ததால் பேச முடியவில்லை. எதிர்ச்சாரியில் ஒருத்தி விசுக்
|
விசுக்கென்று நடந்து சென்றாள். ராமுவின் கவனம் அங்கே சென்றது. கைலாசம் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தார். ராமுவின் முதுகில் தட்டிக் கொடுத்தார். ′ ஸோ - போன விசிட்டுக்கு இப்ப இங்கே சீனரி இம்ப்ரூவ் ஆகியிருக்கா ?என்றார். டெரிஃபிக் இம்ப்ரூவ்மெண்ட் !என்று ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். புகையை ஊதினான்.ஒரு சந்தேகம்என்றான். என்ன ? ' அகர்வாலுடன் பெண்களைப் பற்றியும் பேசுவியா ? ' கைலாசம் அசந்து போனார். “ நீ நான் நினைத்ததை விடவும் ஆழமானவன்என்றார். இது சாதாரணப் பொது அறிவுஎன்றான் ராமு.பெரும்பாலும் இந்த டாபிக்கைப் பற்றி
|
ஃப்ரீயாகப் பேச முடியாத ஒரு நிர்ப்பந்தமே உறவுகளை இறுக்கமானதாகச் செய்கிறது. ஏன் , ஒரு அப்பாவுக்கும் பிள்ளைக்குமிடையே கூட... ' 211 * நாங்கள் பெண்களைப் பற்றியும் பேசாமலில்லை.கைலாசம். உதட்டைப் பிதுக்கினார். ஒரு பயனுமில்லை. " வேடிக்கைதான். ' வேடிக்கையென்ன இதிலே ? செக்ஸ் எல்லோருக்கும் பொதுவான , அடிப்படையான விஷயம். எனவே எந்த இரு மனிதர்களும் இதைப் பற்றிப் பேசுவதன் மூலம் நெருக்கமாக உணரலாம் என்று நினைக்கிறாயா ? இல்லை. அது அப்படியல்ல. நெருக்கம் முதலில் வருகிறது. இந்தப் பேச்செல்லாம் பின்பு வருகிறது. அந்த நெருக்கம் எப்படி
|
உண்டாகிறதென்பது கடவுளுக்குத்தான் ஏற்படுவதில்லை. வெளிச்சம். அது சிலருக்கிடையில் ஏற்படுகிறது. சிலருக்கிடையில் அவ்வளவுதான். ' எத்தகைய ஒரு வீழ்ச்சி ! உன் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி , சமத்துவவாதி... ! " " எல்லா மனிதர்களும் சமமானவர்களாயிருக்கலாம் , சகோதரர்களாயிருக்கலாம். ஆனால் எல்லா மனிதர்களுடனும் ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ளவோ , சேர்ந்து அமர்ந்து டிபன் சாப்பிடவோ என்னால் முடியாது " என்று கூறிய கைலாசம் , ஒரு கணம் யோசித்து ,சமத்துவத்தையும் தனி மனித உரிமைகளையும் குழப்பாதேஎன்றார். “ நீதான் குழப்புகிறாய். ' இருக்கலாம்.
|
நான் குழம்பித்தான் இருக்கிறேன். ' ✓ சரி , நீங்கள் செக்ஸைப் பற்றிப் பேச முயன்றால் என்ன ஆகிறது ? " என்னத்தைச் சொல்ல , நானாக அவனிடம் இந்த டாபிக்கை எடுத்தாலும் அவன் சந்தேகப்படுகிறான். இத்தகைய டாபிக்குகளைப் பேசத்தான் லாயக்கானவென்ற ஒரு மூன்றாம் தரப் பிரஜை உரிமையை அவனுக்கு என் உலகத்தில் வழங்குகிறானோ , என்று. அதே சமயத்தில் அவன் இதைப் பற்றிப் பேச்செடுக்கும்போது அவனுடைய ருசிகளுக்கும் அலைவரிசைக்கும் தக்கபடி என்னால் ரெஸ்பாண்ட் பண்ணவும் முடியவில்லை. நான் ஒரு பியூரிடனோ என்று அவனைச் 212 சந்தேகப்படச் செய்வதில் தான் நான்
|
வெற்றியடைகிறேன். இது கடைசியில் டேஸ்டைப் பொறுத்த விஷயம்தானோ , என்னவோ ' டேஸ்ட் , பொதுவான குடும்பச் சூழ்நிலை , கலாசாரச் சூழ்நிலை... ' ஐ நோ , ஐ நோ , இதெல்லாம் நட்புக்கு ஆதாரனமானவையென்று நம்பப்படுகின்றன. ஆனால் எனக்கு எப்போதும் நான் ஒரு வித்தியாசமானவென்ற உணர்வு இருந்தது. யார்கூட வேண்டுமானாலும் ஒத்துப்போக முடியுமென்ற கர்வம் - ஆமாம் , கர்வம் இருந்தது. கடைசியில் இப்போது நானும் எல்லோரையும் போல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் , குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவன் , என் நட்பு எல்லோரையுமே அரவணைக்கக்
|
கூடியத்ல்ல என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நான் என்னுடைய சில ஆழ்ந்த நம்பிக்கைகள் வெறும் லட்சியக் கனவுகளாக நிரூபணமாகி , ஒரு முட்டாளைப் போல உணருகிறேன். * ராமு கைலாசத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து ,இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளாதே ' என்றான். இது சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ராமு. சில மனிதர்கள் என்னதான் முயன்றாலும் ஒருவரோடொருவர் ஒத்துப்போக முடியாதென்ற உண்மையைத் திடீரென்று ஒரு ஞானோதயம் போல நான் உணர்ந்திருக்கிறேன். இது எவ்வளவு துர்ப்பாக்கியமான விஷயம் , இந்த அகர்வால் , பாவம் ,
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.