text
stringlengths 11
513
|
---|
குழந்தை என்று பந்தம் பிறக்கவும் , சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட , அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா , என்ன ?... வானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு , ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து , நையப் புடைத்தெடுத்து , மடியில் கிடத்தி , மார்பில் அணைத்து , முத்தம் கொடுத்து , முலைப்பால் அளித்து. ……… ஆம் , கடவுளைக் குழந்தையாகவும் , குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக்
|
கொண்ட வைஷ்ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார் !... அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே... எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான் ! போன வருஷம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான்.என்னப் பேச்சுப் பேசுகிறான் ? "... ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே ! அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான்.ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்புஎன்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர , என்ன பாஷையாக இருந்தால் என்ன ? -என்ற
|
குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார். பாபுவைப் போல் சுத்தமாய் உடை உடுத்தி , காலில் ஷூ அணிந்து , ஒரு பக்கம் அமைதியாய் உட்கார்ந்திருக்க இங்கே இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா ? ஊஹூம் , தெரியவே தெரியாதாம். கிழவர் அப்படித்தான் சொல்லுவார். தன் குடிசைக்கு மட்டும் அவனைத் தனியே அழைத்து வருவார். பின்னால் வரும் மற்ற குழந்தைகளைப்போ போஎன்று விரட்டிவிட்டு , பாபுவை நாற்காலியில் உட்காரவைத்து , அவன் காலடியில் அமர்ந்து , வாதுமை , கல்கண்டு , முந்திரிப் பருப்பு போன்றவற்றை ஒரு டப்பியில் அவனுக்காகச்
|
சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தந்து , பாஷை தெரியாத அவனிடம் பேசி , அவன் பேசுவதையும் ரசிப்பார் கிழவர். அவன் அவரைத் ” தாதா என்றுதான் அழைப்பான். அவரும் அவனுக்குத்தாத்தய்யா ” என்று அவர்கள் வழக்கப்படி உச்சரிக்கப் பலமுறை சொல்லித்தந்தார். அவன் அதை மறுத்து " நை... நை... தாதா " என்று அவருக்குக் கற்றுத் தந்தான். அப்போது அங்கே வந்த அவன் தாய் மீனா கிழவரிடம் விளக்கினாள் : " அவனுக்குத் தமிழே பேச வரமாட்டேங்குது மாம... இன்னும் இரண்டு வயசு போனா கத்துக்குவான். அங்கே யாரும் தமிழிலே பேசறவங்க இல்லை... அங்கே பக்கத்து
|
வீட்டிலே ஒரு சர்தார் தாதா இருக்காரு... நாளு பூரா அவருகிட்டதான் இருப்பான். உங்ககிட்ட வரமாட்டேங்கிறானே... அவருக்கிட்ட மேலே ஏறி அவரு தாடியைப் புடிச்சி இழுப்பான். 155 அவரைத்தான் தாதா தாதான்னு கூப்பிட்டுப் பழகிப்போயிட்டான்... அவருக்கும் பாபுவைப் பார்க்காம இருக்க முடியாது. ஊருக்குப் புறப்படும்போது ,சீக்கிரம் வந்துடுங்கீன்னு ஒரு பத்து தடவைக்கு மேலே சொல்லிட்டாரு , அந்த சர்தார் தாத்தா " என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது , கிழவருக்குத் தனக்குச் சொந்தமான பேரக் குழந்தையை எவனோ வைத்துக்கொண்டு , நாளெல்லாம் கொஞ்சி
|
விளையாடி , தன்னையும் விட அதிக நெருக்கமாகி , அவன் பாஷையைக் கற்றுக் கொடுத்து , தன்னால் தன் பேரனுடன் பேசமுடியாமல் ஆக்கிவிட்ட அந்த முகமறியா சர்தார் கிழவன் மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார்... அந்தப் பெருமூச்சில் வருஷத்தில் பதினோரு மாதம் பாபுவோடு கொஞ்சுவதற்கு சர்தார் கிழவனுக்கு வழி இருந்த போதிலும் , வருஷத்திற்கொருமுறை ஒரு மாதம் அவனோடு கழிக்கத் தனக்கு வாய்ப்பிருக்கிறதே , இதுவே போதும் என்ற திருப்தி உணர்வும் இருந்தது. ஒவ்வொரு தடவை பாபு வந்து செல்லும்போதும் , அவனுக்கு ஒரு வயது கூடுகிறது
|
என்ற மகிழ்ச்சியும் , தனக்கு ஒரு வயது கழிந்து போகிறது என்ற வருத்தமும் கிழவருக்கு நெஞ்சை அடைக்கும். ` அடுத்த தடவை அவன் வரும்போது நான் இருக்கிறேனோ செத்துப் போகிறேனோஎன்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கும். இந்தத் தடவை மீனாவுக்குப் பேறு காலம். சபாபதி மனைவியைப் பிரசவத்திற்காக அவள் தாய்வீடான தஞ்சாவூருக்கு நேரே அழைத்துப் போய்விட்டான் என்று கடிதம் வந்தபோது கிழவர் தவியாய்த் தவித்தார்..பல்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த வழியாகத் தானே அவர்கள் போயிருக்க வேண்டும். முன்கூட்டியே ஒரு கடிதம் போட்டிருந்தால் , மூன்று மைலுக்கு
|
அப்பாலிருக்கும் ரயிலடிக்குப் போய் , தன் பேரனை ரயிலில் பார்த்து வந்திருப்பார் அல்லவா கிழவர் ! அந்த வருத்தத்தைத் தெரிவித்துச் சபாபதிக்குக் கடிதம் கூட எழுதச் சொன்னார் , சின்னக் கோனார் மூலம். அவரும் எழுதினார். மனைவியை அழைத்துக் கொண்டு திரும்பி வருகையில் வழக்கம்போல் கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் தங்கிச் செல்வதாகச் சமாதானம் கூறிப் பதில் எழுதியிருந்தான் சபாபதி.பாபு வருவான் , பாபு வருவான்என்று வீட்டுக் குழந்தைகளும் , பெரிய கோனாரும் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தனர். கோனார் வீட்டுக்கு எதிரில் ஒரு ராந்தல் கம்பம்
|
உண்டு. ராந்தல் கம்பம் என்றால் , சீமை எண்ணையைக் குடித்த போதையில் சிவந்த கண்களுடன் இரவெல்லாம் தெருவைக் காவல் புரியும் அசல் பட்டிக்காட்டு ராந்தல் கம்பம்தான். சிக்கனம் கருதியோ , நிலாவை ரசிக்க எண்ணியோ , அந்த ராந்தல் கம்பம் நிலாக் காலங்களில் உபயோகப்படுத்தப் படாமல் வெற்றுடலாய் நிற்கும். இந்த ஓய்வு நாட்களில்தான் தெருக் குழந்தைகள் நிலாவைக் கருதி அங்கே விளையாட வருவார்கள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் ராந்தல் கம்பமும்தாச்சியாகக் கலந்து கொள்ளும். அறுபது வருஷம்ங்களுக்கு முன் பெரிய கோனாரும் , அவருக்குப்பின்
|
சின்னக் கோனாரும் , இந்த ராந்தல் கம்பத்தைச் சுற்றி விளையாடியிருக்கிறார்கள். அதன் பிறகு முப்பது வருஷம்ங்களில் , அவர்களின் பிள்ளைகள் , இப்போது பன்னிரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள சின்னக் கோனாரின் பேரக் குழந்தைகள் பதினோரு பேர் ராந்தல் கம்பத்தைச் சுற்றி ஓடி வருகின்றனர். ஒரே ஆரவாரம் ; சிரிப்பு ; கூச்சல். அப்போது தான் திண்ணையில் படுக்கை விரித்தார் சின்னக் கோனார். 156 எதிர் வீட்டுக் கூரைகளின் மீது லேசான பனிமூட்டமும் நிலா வெளிச்சமும் குழம்பிக் கொண்டிருக்கிறது. பின் பனிக் காலமானதால் பனிப் படலமிருந்தபோதிலும்
|
, குளிரின் கொடுமை இன்னும் ஆரம்பமாகவில்லை. தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் காண்கிறது. தெருவில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் , சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டு அவரருகே திண்ணையின் மேல் வந்து ஏறினான் ஓர் ஏழு வயதுச் சிறுவன். " ஆர்ரா அவன் ? அடடே தம்பையாவா ?.. ஏன்டா கண்ணு , நீ போயி விளையாடலியா ? " " ம்ஹூம்... நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா ! " " கதை இருக்கட்டும்... பெரிய தாத்தா தோட்டத்துக்குப் போயிட்டாரா , பாரு... " என்று சொல்லிக் கொண்டே , தலை மாட்டிலிருந்து சுருட்டையும்
|
நெருப்புப் பெட்டியையும் எடுத்தார் சின்னக் கோனார். " அவுரு எப்பவோ போயிட்டாரே " என்று திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன் குடுமித் தலையை நீட்டி புழக்கடை வாசல் வழியே நிலா வெளிச்சத்தில் தெரியும் தோட்டத்துக் குடிசையைப் பார்த்தான் தம்பையா. தம்பையா சின்னக் கோனாரின் செத்துப் போன ஒரே மகள் , அவர் வசம் ஒப்புவித்து விட்டுப்போன , சோகமும் ஆறுதலும் கலந்த அவள் நினைவு ! தாயில்லாக் குழந்தை என்பதனால் , குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும்
|
கொண்டு விளங்கினான். ஆனால் , பெரிய கோனாருக்கோ , சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகளில் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்தி ! பெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார். " தாத்தா... உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமா ? " " பயமில்லேடா... மரியாதை !? " ம்... அவருக்குத்தான் கண்ணு தெரியலியே... நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு?' " அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன ?... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே
|
சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி , நீ போய் விளையாடு ! " " ம். £ ம் ………. நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும். " " நாளக்கி என்ன , விளையாட நாள் பாத்திருக்கே ? " 157 " நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அவங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன் ! " என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா. " அடடே , உனக்கு விசயமே தெரியாதா ?... அந்த இந்திக்காரப் பயலும் , அவ அப்பனும் நம்பளையெல்லாம் ஏமாத்திப் பிட்டானுவ... அவுங்க வரல... அதான் பெரிய தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம்... " என்று சின்னக் கோனார்
|
சொன்னதை நம்ப மறுத்து , தம்பையா குறுக்கிட்டுக் கத்தினான். " ஐயா... பொய்யி , பொய்யி... நீ சும்மானாச்சுக்கும் சொல்ற... நாளைக்கு அவுங்க வருவாங்க ! " " " பொய்யி இல்லேடா , நெசம்தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே... திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து... அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்... அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்... " " கடுதாசி எங்கே ? காட்டு " என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும்
|
அவநம்பிக்கையும் இழைந்தன. " கடுதாசி பெரியவர்கிட்டே இருக்கு ! " " நான் போயி பார்க்கப் போறேன் " என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா. " இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே ? விடிஞ்சி பாத்துக்கலாம் ” என்று தடுத்தார் சின்னவர். " அதுதான் நெலா வெளிச்சமிருக்குதே " என்று பதில் சொல்லிவிட்டு , தோட்டத்துக் குடிசையை நோக்கி ஓட்டமாய் ஓடினான் தம்பையா. தம்பையா பெரிய கோனாரைத் தேடித் தோட்டத்துக் குடிசையருகே வந்த போது , குடிசையின் முன் , சருகுகளை எரித்துத் தீயில் குளிர் காய்ந்தவாறு நெருப்பில் சுட்ட
|
முந்திரிக் கொட்டைகளைச் சிறிய இரும்புலக்கையால் தட்டிக் கொண்டிருந்தார் கிழவர். கிழவரின் எதிரில் வந்து இடுப்பில் கையூன்றிக் கொண்டு தன்னை அவர் கவனிக்கிறாரா என்று பார்ப்பவன் போல் மௌனமாய் நின்றான் தம்பையா. கிழவர் முகம் நிமிர்த்தித் தம்பையாவுக்கு நேரே விழி திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த அலுமினியப் பிரேமில் பதித்திருந்த தடித்த கண்ணாடியினூடே அவரது கண்களும் , இமை ரோமங்களும் மிகப் பெரியதாய்த் தெரிந்தன தம்பையாவுக்கு அந்தக் கண்ணாடியின் பலனே அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணாடியும் இல்லாவிட்டால் ,
|
இருளில் எரியும் நெருப்பையோ , வெளிச்சத்தில் நிழலுருவாய்த் தெரியும் உருவங்களையோ கூட அவரால் காணா இயலாது போய்விடும். அவர் பார்வை எதிரில் நிற்கும் தம்பையாவை ஊடுருவி , அவனுக்குப் பின்னால் எதையோ கவனிப்பது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவன் பின்னால் வானத்தில் வட்டமில்லாத , பிறையுமில்லாத நசுங்கிப் போன முன் நிலவின் மூளித்தோற்றம் தெரிந்தது. அந்த ஒளியை பிண்ணனி போலக் கொண்டு , நிழலுருவாய்த் தெரியும் தம்பையாவின் உருவில் எங்கோ 158 தூரத்தில் இருக்கும் பாபுவைத்தான் கண்டார் கிழவர். அவரது இமைகள் படபடத்து
|
மூடித் திறந்தன. மீண்டும் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவர் வியந்தார். " குருடரான பக்த சேதா தம்பூரை மீட்டிக் கொண்டு பாடும்போது அவரது இசையில் கட்டுண்ட பரந்தாமன் பாலகிரு.ணன் வடிவமாய் அவர் அறியாமல் அவரெதிரே அமர்ந்து கேட்பானாமே , அந்த மாய லீலைக் கதை அவர் நினைவுக்கு வர , கிழவரின் உதடுகளில் மந்த.மான ஒரு புன்னகை தவழ்ந்தது. ” பாபூ ! " " பாபு இல்லே தாத்தா , நான் தான் தம்பையா. " " தம்பையாவா ?... நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே ? " " பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா ?... நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே ?...
|
சின்னத் தாத்தா சொல்றாரு , அவன் வரமாட்டானாம்... ” என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா. பாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசே. வாஞ்சை பிறந்தது. " ஆமாண்டா பயலே , அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்... அதனாலே வரல்லே... " என்று கூறியதும் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மௌனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார். " பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே ? " " - என்று வதங்கிய
|
குரலில் கேட்டான் தம்பையா. முகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர் : " அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா ?... டேசன்லே போயி பார்த்துட்டு வரப் போறேனே... அதுக்காகத்தான் இது. அந்தப் பாபுப் பயலுக்கு முந்திரிப் பருப்புன்னா உசிரு... ரயிலு நம்ப ஊருக்கு விடிய காலையிலே வருது... அதனாலேதான் இப்பவே சுடறேன்... உக்காரு. நீயும் உரி... " என்று சுட்டு மேலோடு தீய்ந்த முந்திரிக் கொட்டைகளைத் தம்பையாவின் முன் தள்ளினார் கிழவர். தம்பையாவும் அவர் எதிரே உட்கார்ந்து முந்திரிக் கொட்டைகளைத்
|
தட்டி உரிக்க ஆரம்பித்தான். திடீரென்று கிழவர் என்ன நினைத்தாரோ , தம்பையாவின் கையைப் பிடித்தார். அவன் கைகள் உரித்துக் கொண்டுதான் இருந்தன் என்று நிச்சயமானதும் சொன்னார் : " நீ நல்ல பையனாச்சே... கொட்டை கொஞ்சமாத்தான் இருக்கு. நீ திங்காதே... நாம்பதான் இங்கே நெறையத் திங்கறோமே. பாபுவுக்குத்தான் அந்த ஊரிலே இது கெடைக்கவே கெடைக்காது. நீதான் நல்லவனாச்சே. இந்தக் கண்ணுசாமிதான் திருட்டுப் பய... உரிக்கிறேன்னு வந்து திருடித் திம்பான்... " என்று தம்பையாவை தாஜா செய்வதற்காக , சின்னக் கோனாரின் பேரன்களில் ஒருவனைத் திட்டினார். "
|
எனக்கு வேண்டாம் , தாத்தா. கண்ணுசாமி என்னைப் பாக்க வெச்சி நெறையத் தின்னான். அதனாலேதான் அவனுக்கு வயித்து வலி வந்து வயிறே சரியாயில்லே... சாயங்காலம் கூட பாட்டி அவனுக்குக் கஷாயம் குடுத்திச்சே... " என்று சொல்லிக் கொண்டே இருந்தவன் , உரித்து வைத்த பருப்புகள் வெள்ளை வெளேரென்று விக்கினம் இல்லாமல் முழுசாகவும் பெரிசாகவும் இருப்பதைக் கண்டு திடீரென்று கேட்டான். 159 " ஏந்தாத்தா ! இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா ? எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே ? " " ஆமா.... நிறைய வெச்சிருந்தேன்...
|
கண்ணுசாமி வந்து நான் இல்லாத சமயத்திலே திருடிக்கிட்டுப் போயிட்டான்... " என்று சொல்லும்போதே , தான் ரொம்ப அல்பத்தனமாய்த் தம்பையாவும் திருடுவானோ என்று சந்தேகப்பட்டதற்காக வருத்தமுற்ற கிழவர் குழைவுடன் சொன்னார் : " பரவாயில்லே , நீ ரெண்டு எடுத்துக்கடா... பாபுவுக்குத் தான் இவ்வளவு இருக்கே. அப்பிடியே உள்ளே போயி மாடத்திலே ஒரு டப்பா இருக்கு. அதெக் கொண்ணாந்து இந்தப் பருப்பையெல்லாம் அதுக்குள்ளே அள்ளிப்போடு " என்றார். தம்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவர் அதைத் தின்னக்கூடாது என்று எச்சரித்து விட்டு , இப்பொழுது
|
தின்னச் சொல்லி வற்புறுத்துவது ஏன் என்று ஒரு வினாடி யோசித்தான். யோசித்துக் கொண்டே உள்ளே போனான். அந்த டப்பாவைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளி வைத்தான். பிறகு கையிலொரு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான். " ஏந்தாத்தா என்னைத் திங்கச் சொல்றே ? இல்லாட்டி பாபுவுக்கு... நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே ? " என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. கிழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார். இவ்வளவு அறிவும் நல்ல குணமும்
|
அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும் , செத்துப்போன அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும் , இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும் , தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின. எதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப்
|
பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க , " உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே... பாவம் , அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே... நீ நல்லா படிக்கிறியா ?... நல்லா படிச்சிக் கெட்டிக்காரனா ஆகணும் " என்று தொடர்பில்லாத வாக்கியங்களைச் சிந்தினார். அவர் கழுத்தை நெருடியவாறு வாயிலிருந்த முந்திரிப் பருப்பைக் கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு " தாத்தா , தாத்தா... " என்று கொஞ்சுகின்ற குரலில் அழைத்தான் தம்பையா. " என்னடா
|
வேணும் ? " " நானும் உன்கூட டேசனுக்கு வர்ரேன் தாத்தா... பாபுவைப் பாக்கறத்துக்கு... " என்று கெஞ்சினான். 160 " விடியக் காலம்பர வண்டிக்கு நான் இருட்டோட எந்திரிச்சுப் போவேனே... நீ எந்திருப்பியா ? இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்... உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது ?... " என்று தயங்கினார் கிழவர். " நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும் ? ராந்தல் வௌக்கே கொளுத்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்... நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு... ” என்று மாற்று யோசனை
|
கூறினான் தம்பையா. " ஆ ! கெட்டிக்காரன் தான்டா நீ... சரி , அப்ப நேரத்தோட போய்ப் படு ! விடிய காலையிலே வந்து எழுப்பறேன். " " நான் இங்கேதான் படுத்துக்குவேன். " " அங்கே தேடுவாங்களே. " " சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்... " " சரி... கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேருந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்துக்க... " என்று கிழவர் சொன்னதும் முக்காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின் , கயிற்றுக் கட்டிலில் ஏறிப்
|
படுத்துக் கொண்டான் தம்பையா. கிழவர் இரும்புரலில்டொக் டொக்'கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார். நடுச் சாமம் கழிந்து , முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து , " ஏந் தாத்தா , நாழியாயிடுச்சா ? என்று கண்களைக் கசக்கிக் கொண்டான். " இப்பவே பொறப்பட்டாத்தான் நேரம் சரியா இருக்கும். வெளியிலே தொட்டிலே தண்ணி வெச்சிருக்கேன். போயி மொகத்தைக் கழுவிக்க... " என்றதும் தம்பையா குடிசைக் கதவைத்
|
திறந்து கொண்டு வெளியே வந்தான். " அப்பா... ! " என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது... " தாத்தா... ஒரே பனி... குளிருது " என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா. தாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிருஷ்ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்ணைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். " பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது... பச்சைத் தண்ணியிலே
|
குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா ? மொதல்லே அப்பிடித்தான் நடுங்கும். அப்புறம் சொகமா இருக்கும். தொட்டியிலேதான் தண்ணி நிறைய இருக்கே. ரெண்டு சொம்பு மேலுக்கும் ஊத்திக் குளிச்சுடு... தலையிலே ஊத்திக்காதே. உன் குடுமி காய நேரமாகும்... சீக்கிரம் நாழியாவுது " என்று அவசரப்படுத்தவே , தம்பையா சட்டையையும் நிஜாரையும் அவிழ்த்தெறிந்துவிட்டு , ஒரே பாய்ச்சலாய்த் தொட்டியருகே ஓடினான். 161 சற்று நேரத்திற்கெல்லாம் தபதபவென தண்ணீர் இரைகின்ற சப்தத்தோடு , அடிவயிற்றில் மூண்ட கிளுகிளுப்புணர்வாலும் குளிராலும்
|
தம்பையா போடும் கூக்குரலைக் கேட்டுக் கிழவர் வாய்க்குள் சிரித்துக் கொண்டார். ராந்தல் விளக்கையும் கொளுத்தி வைத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு டப்பாவுடன் தம்பையா குளித்து முடித்து வரும்வரை காத்திருந்தார் கிழவர். " நான் ரெடி தாத்தா , போகலாமா ? " என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு , ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும் , இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு , குடிசைக் கதவைச் சாத்தும்போது , என்னவோ
|
நினைத்து , " தம்பையா , இதெக் கொஞ்சம் புடி... வர்றேன் " என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து , " இது ஒரு ரூபா தானே ? " என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து " ஆமாம் " என்றான். பிறகு , " பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது ? " என்று சொல்லிக் கொண்டே அந்த ரூபாயைப் பாபுவுக்காக இடுப்பில் செருகிக் கொண்டார். மெயின் ரோடுக்கும் கிராமத்துக்கும் நடுவேயுள்ள ஒற்றையடிப் பாதையின் வழியே அவர்கள் நடந்தனர். அவர்கள் இருவரும் ஒற்றையடிப் பாதையில் ஒரு
|
மைல் நடந்தபின் பிரதான சாலையான கப்பிக்கல் ரஸ்தாவில் ஏறியபோது , பனி மூட்டத்தின் கனத்தை அவர்கள் உணர முடிந்தது. எதிரே சாலையே தெரியாமல் வழியடைத்ததுபோல் இருந்தது. தரையெல்லாம் பனி ஈரம். மரங்களோ காடுகளோ இல்லாததாலும் , சாலை உயர்ந்து இருப்பதாலும் ஊதல் காற்று வீசுவதாலும் குளிர் அதிக்மாயிற்று. கிழவர் தன் தோள்மீது கிடந்த துண்டை எடுத்து நான்காய் மடித்துத் தம்பையாவின் தலையில் போர்த்தி , முகவாய்க்குக் கீழே துண்டின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து கட்டி விட்டார். " தனது பேரனைப் பார்க்க இந்தக் குளிரில் தான் போவதுதான்
|
சரி. இவனும் ஏன் இத்தனை சிரமத்துடன் தன்னோடு வருகிறான் " என்று நினைத்தார் கிழவர். அதை அவர் அவனிடம் கேட்டபோது அவன் உண்மையை ஒளிக்காமல் கூறினான். " எனக்கும் பாபுவைத்தான் பார்க்கணும்.... ஆனா , நான் ரெயிலைப் பார்த்ததே இல்லே தாத்தா... அதுக்காகத்தான் வர்ரேன். அதோட கண்ணு தெரியாத நீ இருட்டிலே கஷ்டப்படுவியே , உனக்கும் தொணையா இருக்கலாம்னுதான் வர்ரேன்... " தம்பையா பேசும் ஒவ்வொரு சமயமும் கிழவருக்கு அவன்மீது உண்டான அன்பின் பிடிப்பு வலுவுற்றது... அந்த நெடிய சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்த பின் , ரயில் வருவதற்கு ஒரு மணி
|
நேரத்திற்கு முன்பாகவே , இருள் விலகுவதற்குள்ளாக , அவர்கள் இருவரும் அந்தச் சிறிய ரயில்வே டே.னை வந்தடைந்தனர். அவர்கள் வந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜீவன் இல்லை.ஹோவென்ற தனிமையும் , பனி கவிந்த விடியற்காலை இருளும் , இதுவரை பார்த்திராத அந்தப் பிரதேசமும் தம்பையாவுக்கு மனத்துள் ஒரு திகிலைக் கிளப்பிற்று. அவன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் கிடந்த ஒரு பெஞ்சின் மீது முழங்கால்களைக் 162 கட்டிக்கொண்டு அமர்ந்தனர். கிழவர் குளிருக்கு இதமாய் இடுப்பு வேட்டியை அவிழ்த்து உடல்
|
முழுவதும் போர்த்திக் கொண்டார். சட்டையில்லாத உடம்பு எவ்வளவு நேரம் குளிரைத் தாங்கும் ? வெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான். திடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே , " அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா , அங்கே போகலாம் " என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக , அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர். இப்போது பனியைத் தவிர , இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும்
|
மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் " வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும் ? " என்று கேட்டார். " இன்னா , ஒரு நிமிசம் , இல்லாட்டி ஒன்னரை நிமிசம் ” என்று பதிலளித்தான் போர்ட்டர். ".ஹூம்... இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான் " என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வருஷம்ம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. " சீசீ ! இதுக்குப் போயி பொறாமைப் படலாமா ?... பாவம் , அந்த சர்தார் கிழவன். நம்மை மாதிரி எந்த ஊரிலே தன் பேரனை விட்டுட்டு வந்து நம்ப பாபுவைக்
|
கொஞ்சி திருப்திப் படறானோ " என்று முதல் முறையாகச் சிந்தித்துப் பார்த்தார் பெரிய கோனார். அப்போது பனிப் படலத்தை ஊடுருவிக் கொண்டு தூரத்திலிருந்து ஒளிக் கதிர்கள் கிழவரின் கண்களில் வீசின. " டே... தம்பையா ! வண்டி வந்துட்டுது... நீ அந்தக் கடைசியிலே போயி நில்லு. வண்டி வந்தவுடனே ஒவ்வொரு பொட்டியா பார்த்துக்கிட்டே ஓடியா... நா இங்கேருந்து இஞ்சின் வரைக்கும் ஓடிப் பார்க்கிறேன். அங்கேயே அவுங்க இருந்தா என்னைக் கூப்பிடு... " என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே , பேரிரைச்சலோடு ரயில் வந்து நின்றது. கிழவர் " பாபூ... பாபூ... "
|
வென்று ஒவ்வொரு பெட்டியருகிலும் நின்று கூவியவாறு இஞ்சின்வரை ஓடினார். தம்பையா இன்னொரு கோடியில் " சவாதி மாமாவ்... மீனா மாமீ... பாபு " என்று கூவிக் கொண்டே ஓடிவந்தான். எல்லாப் பெட்டிகளின் ஜன்னல் கதவுகளும் குளிருக்காக அடைக்கப் பட்டிருந்தன... " பாபூ... பாபூ " என்ற தவிப்புக் குரலுடன் கிழவர் இஞ்சின்வரை ஓடி வந்து விட்டார். அவருடைய பாபுவை அவர் காணவில்லை. அவன் எந்தப் பெட்டியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறானோ ? இந்தப் பனியிலும் குளிரிலும் , பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு , ஒரு குருட்டுக் கிழவன் தனக்காக
|
வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமா ? வண்டி புறப்படுவதற்காக முதல்மணி அடித்து விட்டது. ஒரு நிமிஷம் தனது குருட்டு விழிகளால் தன் பாபுவைக் காணவும் , ஒரு வை அந்தப் பிஞ்சு விரல்களை ஸ்பரிசித்து இன்பமடையவும் , இந்தத் தடவை தனக்குக் கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்த மாத்திரத்தில் , அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் , கிழவரின் கண்கள் கலங்கின. ரயில் முழுவதும் கத்திப் பார்த்துவிட்டு ஓடிவந்த தம்பையா , ரயிலைப் பார்த்த மகிழ்ச்சியையும் துறந்து , கிழவரின் கையைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாய் நின்றான். கிழவர் வானத்தைப்
|
பார்த்தவாறு " பாபூ " வென்று சற்று உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுக் கூவிவிட்டார். 163 அப்போது இஞ்சினுக்குப் பக்கத்திலிருந்து ஓர் இரண்டாம் வகுப்புப் பெட்டியின் திறந்த ஜன்னலிலிருந்து ஓர் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்துப் பெரிய கோனாரைத் " தாதா " வென்று அழைத்தது. அந்தப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி இருந்ததால் , கிழவர் ஆனந்தம் மேலிட்டவராய்க் கீழே இறங்கி ஓடி வந்து , அந்தக் குழந்தையிடம் முந்திரிப் பருப்பு டப்பியை நீட்டினார். " நை இ.னா , நை " என்று குழந்தை அதைப் பெற மறுத்துக் கைகளை ஆட்டினான். கிழவரோடு ஓடி
|
வந்த தம்பையா , பெட்டி மிகவும் உயரத்தில் இருந்தபடியால் , குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் " பாபு பாபு ” என்று அழைத்து எம்பி எம்பிக் குதித்தான். கிழவர் டப்பியைத் திறந்து " உனக்குப் பிடிக்குமே முந்திரிப் பருப்பு " என்று திறந்து காட்டினார். குழந்தை முந்திரிப் பருப்பைக் கண்டதும் டப்பியில் கைவிட்டு அள்ளினான். " எல்லாம் உனக்குத்தான் " என்று டப்பியை அவனிடம் கொடுத்தார் கிழவர். அப்பொழுது , வண்டிக்குள்ளிருந்து முக்காடிட்ட.தூல சரீரமான ஒரு வடநாட்டுப் பெண்ணின் முகம் " கோன். " என்றவாறு வெளிப்பட்டது. கிழவனையும்
|
குழந்தையையும் பார்த்தபோது யாரோ கிழவன் தன் குழந்தைக்கு அன்புடன் தந்திருக்கிறான் என்ற நன்றி உணர்வில் அவள் புன்முறுவல் பூத்தாள். இரண்டாவது மணியும் ஒலித்தது. இஞ்சின் கூவென்று கூவிப் புறப்பட ஆயத்தப் படுகையில் அந்த வடநாட்டுத் தாய் தன் குழந்தையிடம் சொன்னாள் : " தாதாகோ நம.தேகரோ பேட்டா. " குழந்தை கிழவரைப் பார்த்து " நம.தே தாதா. ¢ " என்று வணங்கினான். கிழவரும் பாசத்தால் , பிரிவுணர்வால் நடுங்கும் கைகளைக் குவித்து அவனுக்குப் புரியும்படி " நமஸ்தே பாபு " என்று வணங்கினார். அப்போது வண்டி நகர்ந்தது. வண்டி நகர்ந்தபோது தான் ,
|
அவருக்குத் திடீரென்று நினைவு வர இடுப்பிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவசர அவசரமாய் எடுத்துக் கொண்டோடி , குழந்தையிடம் நீட்டினார்.... அதைக் கண்ட அந்த வடநாட்டுப் பெண்மணிக்கு எங்கோ தூரத்தில் பிரிந்திருக்கும் தன் கிழத்தந்தையின் நினைவு வந்ததோ ?.... அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி ஹிந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு , கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது. " சபாபதி தூங்கறானா மீனா ? எழுந்ததும் சொல்லு " என்று கிழவர் கூறியது அவர்கள்
|
காதில் விழுந்திருக்காது. வண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர் , கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு , ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். " அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ , செத்துப் போயிடறேனோ ” என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையாதும்மினான். " இதென்ன , அபசகுனம் மாதிரித் தும்முகிறானே " என்று கிழவர் அவனைப் பார்த்தபோது , தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்... தம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல்
|
பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை !... 164 ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன் அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது ! “ வைத்தியன் ” என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ , அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப் போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது
|
சாத்தியமில்லை.உருளைசின்னமுடைய உமையொரு பாகன் பிள்ளையும் , பூசணிக்காய்சின்னம் பெற்ற பூதலிங்கம் பிள்ளையும் உள்ளூர்க்காரர்கள். எனவே கள்ளவோட்டுப் போட அதுவும் எல்லோருக்கும் தெரிந்த அவனைக் கொண்டு - யாரும் துணியவில்லை. தேர்தல் சந்தடிகளில் ஊரே அல்லோலகல்லோலப் படும் வேளையில் தான் ஒரு புறவெட்டாகிப் போனதில் வைத்தியனுக்கு வருத்தம் உண்டு. இது வரையில்லாமல் , தன் ஜனநாயக் உரிமை புறக்கணிக்கப்படுவதில் ஒரு எரிச்சல். மன மிகுந்த ஒரு வாக்கு இப்படி அர்த்தமற்று வீணாவதில் இரண்டு கட்சிக்காரர்களுக்கும் ஏமாற்றம்தான். அவன் பெயர் என்ன
|
என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால் , அவன் வயதுடையவர்கள் யாரும் உயிரோடு இல்லை. இப்போது ராஜாங்கம் நடத்தும் தானமானக்காரர்களுக்குப் பிறந்த முடி எடுத்தவனே வைத்தியன்தான். எனவே அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விளையாட்டுத்தனமான ஆர்வத்தோடு , அவனிடமே கேட்கலாமென்றாலும் , “ அதெல்லாம் இப்ப என்னத்துக்கு போத்தி... ? என் பேரிலே எடவாடா முடிக்கப் போறியோ ? " என்பதுதான் இதுவரை பதிலாக வந்திருக்கிறது. தன்னுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்ட நிலையில் , அந்த உண்மைப் பெயரில்
|
வாக்காளர் பட்டியலில் ஓட் இருக்க வேண்டுமே என்பது அவனுக்குத் தோன்றாமல் போயிற்று ! அவ்வூர் வாக்காளர் பட்டியலில் இன்னாரென்று தெரியாத இரண்டு பெயர்கள் இருந்தன. பட்டியலைக் குடைந்துகொண்டிருந்தபூசணிக்காய்ஆதரவளனான மாணிக்கம் அது யாரென்று தெரியாமல் விழித்தான். வைத்தியனின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போயிற்று. முதல் பெயர் புகையிலையா பிள்ளை. அது அவனாக இருக்க முடியாது. இன்னொன்று அணஞ்ச பெருமாள். வைத்தியனின் பெயர் இதுவாக இருக்கலாமோ என்ற ஊகத்தில் மாணிக்கம் வயதைப் பார்த்தான். எண்பத்திரண்டு. ஒரு துள்ளுத் துள்ளினான். கோச்ச
|
நல்லூர்என்று வழக்கமாகவும் ,கோச்சடையநல்லூர் என்று இலக்கண சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில் , உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும். நூறு வீடுகளில் மக்கள் வழி , 165 மருமக்கள் வழி , சைவர்கள் ( இந்த வைப்புமுறை மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல் , உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தெண்டனிட்டுச் சொல்லிக் கொள்கிறேன் ).கிராமம்என்றும்பிராமணக்குடிஎன்றும் அழைக்கப்படுகிறஎவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லோரும்ஐயர்கள்என்ற நினைப்பே வேளாளர்களிடம்
|
ஏகபோகமாக இருப்பதால் , அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல் , அவர்கள்ஒற்றுமை'யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு போல -நாடார் , தேவர் , வண்ணார் , நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு. இவை நீங்கலாக , தான் இந்துவா கிறிஸ்துவனா இல்லை இரண்டுமா அல்லது இரண்டும் இல்லையா என்று நிச்சயமாக அறிந்து கொள்ளாத மக்களும் அங்கே உண்டு. கும்பிடுகிற சாமியை வைத்துக் கணக்கிடலாமென்றால் - சுடலைமாடன் , ஈனாப் பேச்சி , இசக்கி அம்மன் , தேரடி மாடன் , புலை மாடன் , முத்துப் பட்டன்
|
, கழு மாடன் , வண்டி மறிச்சான் , முண்டன் , முத்தாரம்மன் , சூலைப் பிடாரி , சந்தனமாரி , முப்பிடாரி என்ற பட்டியல் நீண்டு போகும். அந்த ஊர் வாக்காளர் பட்டியலை விட இது பெரிது. மேற்சொன்னவர் அனைவரும் இந்து கடவுளன்களும் கடவுளச்சிகளும்தான் என்று பல அவதார மகிமைகளை எடுத்துக் காட்டி நீங்கள் நிறுவுவீர்களேயானால் , அந்த மக்களும் இந்துக்கள்தான்.ஏ'யானதுபி'க்குச் சமம்.பி'ஆனதுசி'க்குச் சமம். எனவேஏ சிஎன்ற கணித விதியை இஞ்கே கையாண்டால் , இவர்கள் இன்னின்ன கடவுளன் அல்லது கடவுளச்சியை வழிபடுகிறார்கள் ; அந்தக் கடவுளன்களும்
|
கடவுளச்சிகளும் இந்துக்கள் : எனவே இவர்களும் இந்துக்கள் என்று வல்லந்தமாக நிரூபித்து விடலாம். இந்தச் சள்ளையெல்லாம் எதற்கு என்றுதான் பல சாதிகளும் பல தெய்வங்களும் பலதரப்பட்ட மொழி , பண்பாடு ஆகியவையும் உடைய இந்தக் கூட்டத்தைஇந்தியா என்றும் , இந்து என்றும் ஆங்கிலேயன் பெயர் வைத்திருக்க வேண்டும் ! இந்த நாட்டில் இத்தனை சதவீதம் இந்துக்கள் என்று பண்டார சந்நிதிகளும் , ஜகத்குருக்களும் புள்ளி விபரம் தந்து பீற்றிக்கொள்வதெல்லாம் இந்தக் கணிசமான மக்களையும் உள்ளடக்கித்தான். இப்படி “ ராம ராஜ்யயோக்கியதைகள் பல கோச்சநல்லூருக்கு
|
இருந்தாலும் ஊராட்சித் தலைவர் தேர்தல் என்றால் சும்மாவா ? பொறி பறக்கும் போட்டி. இதில் ஆசுவாசப்படுத்தும் சங்கதி என்னவென்றால் , போட்டியிடும் இருவரும் வேளாளர்கள். குறிப்பாக ஒரே வகுப்பைச் சேர்ந்த வேளாளர்கள். அதிலும் குறிப்பாக மைத்துனர்கள். எனவே காரசாரமான போட்டி இருந்தாலும் , வகுப்புக் கலவரங்களாவது இல்லாமல் இருந்தது. ஊரு முழுவதும் ஏதாவது ஒரு சைடு எடுத்தாக வேண்டிய நிலை. இந்த நூறு வீடுகளைத் தவிரவும் பச்சைப்பாசி படர்ந்த தெப்பக்குளமும் அதன் கரையில் செயலிழந்த சாத்தாங்கோயிலும் சில சில்லறைப் பீடங்களும் ஒரு பாழடைந்த
|
மண்டபமும் இரவு ஏழு மணிக்குமேல் அதனுள் இயங்கும் சட்ட விரோதமானதண்ணீர்ப் பந்த'லும் 166 சுக்குக்காப்பிக் கடையும் வெற்றிலைபாக்கு முதல்டாம் டாம் " டானிக் ஈறாக விற்கும் பலசரக்குக் கடையும் ஏழெட்டுத் தென்னந்தோப்புகளும் இருபது களங்களும் சுற்றிலும் நஞ்சை நிலங்களும் அங்கே உண்டு. மனிதனைத் தவிர , பிற தாவர சங்கமச் சொத்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லாது போனது கூட ஒரு சௌகரியம்தான். இல்லையென்றால் , இந்த இரண்டு பேரை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் அவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும். இருக்கின்ற வாக்குகளில் ,
|
யாருக்கு எத்தனை கிடைக்கும் என்ற ஊகமும் கணக்கும் எங்கு பார்த்தாலும் நீக்கமற இருந்தது.பூசணிக்காய்வேட்பாளரின் தங்கைக்கு இந்த ஊரில் ஒரு ஓட்டு இருப்பதால் , ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நாங்குநேரியில் இருந்து அவள் வந்தாயிற்று. இதை அறிந்த “ உருளைவேட்பாளர் சும்மா இருப்பாரா ? புளியங்குடியில் வேலை பார்த்த அவர் தம்பிக்கு தந்தியே போயிற்று. மனைவியை அழைத்து வர வேண்டாம் ; தனியாக வந்தால் போதும் என்று அவனுக்குக் கட்டளை. அவள் பூசணிக்காயின் தங்கை. ( வசதி கருதி இங்கு தொட்டு சின்னம் வேட்பாளரைக் குறிக்கிறது. ) என்னதான் கணவன்
|
கார்வார் செய்தாலும் பாசம் காரணமாக அவள் பூசணிக்காய்க்குப் போட்டு விட்டால் ? இங்கு ஒரு ஒட்டுக்கூடி அங்கும் ஒரு ஓட்டுக் கூடினால் என்ன பயன் ? அதைவிட இரண்டு பேரும் வராமலேயே இருந்து விடலாமே ! கூட்டிக் கழித்து , வகுத்துப் பார்க்கையில் யாரு வென்றாலும் பத்து வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடியும் என்று நோக்கர்கள் கணித்தனர். தேர்தல் வேலைக்காக இரண்டு பேரும் திறந்திருந்த செயலகங்கள் எப்போதும் நிரம்பி வழிந்தன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க வெற்றிலை , பீடி , சுக்குக்காப்பி , வடை , சீட்டுக்கட்டுகள் செலவு ஜீயாமெட்ரிக்
|
புரகிரஷனில் வளர்ந்தது. நாளை காலை தேர்தல் என்ற நிலையில் இந்த வேகம் காய்ச்சலாகி , ஜன்னி கண்டு விடலாம் என்ற அச்சத்தைத் தந்துகொண்டிருந்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தி பெறப் போகும் விநாடியில்தான் மாணிக்கம் பூசணிக்காய் செயலகத்திலிருந்து குபீரென்று கிளம்பினான். இப்போதே வெற்றி கிடைத்துவிட்டதைப் போன்ற ஒளி முகத்தில் துலங்க தான் கண்டுபிடித்த அணஞ்ச பெருமாள் வைத்தியனேதான் என்ற வரலாற்றுப் பேருண்மையை யாருக்கும் தெரியாமல் , ஐயம் திரிபு நீங்க நிரூபித்து விடவேண்டும் என்ற துடிப்பு. இந்த நேரத்தில் வைத்தியன் எங்கே இருப்பான்
|
என்று அவனுக்குத் தெரியும். சாத்தான் கோயிலை நோக்கி மாணிக்கம் நடக்க ஆரம்பிக்கும் போதேசதக்'கென்று சிந்தனை எதனையோ மிதித்தது. நேர் வழியாகப் போனால் , இந்த நேரத்தில் இவன் இவ்வழியாகப் போவானேன் என்று எதிரிப் பாசறையைச் சேர்ந்தவர்கள் நினைக்க மாட்டார்களா ? அதுவும் நாளை தேர்தலாக இருக்கும்போது , சந்தேகம் வலுக்கத்தானே செய்யும் ? அதுவும்உருளைஒற்றர்கள் கண்ணில் பட்டுவிட்டால் , துப்புத் துலக்கவோ , பின் தொடரவோ ஆரம்பித்தால் குடிமோசம் வந்து 167 சேருமே ! தன்மூளையைக் கசக்கி , இந்தப் பாடுபட்டுக் கண்டுபிடித்த வாக்காளரை , மாற்றுக்
|
கட்சிக்காரனும் கரைக்க ஆரம்பித்தால் ? சமயத்தில் தனக்குத் தோன்றிய புத்திசாலித்தனமான யோசனையை மெச்சிக்கொண்டே , சாத்தான் கோயிலுக்கு சுற்று வழியாக நடந்தான் மாணிக்கம். பள்ளிக்கூடம் வழியாகத் தென்னங்குழிமடை வந்து பத்தினுள் இறங்கி , வரப்பில் நடந்து , வழிநடைத் தொண்டில் ஏறி , கோயிலின் பின்பக்கம் வந்தான். வைத்தியன் தனியாக இருக்க வேண்டுமே என்ற கவலை இலேசாக முளைகட்ட ஆரம்பித்தது. கோயில் முகப்புக்கு வந்தான். பனிமாதம் ஆகையால் அங்கே ஒரு குருவியைக் காணோம். ஈசானமூலையில் , சுவரை அணைத்துக்கொண்டு ஒரு கந்தல் மூட்டை போலச் சுருண்டு
|
படுத்திருப்பது வைத்தியனாகவே இருக்க வேண்டும். கண் மங்கி கை நடுங்க ஆரம்பித்து , காதுகளின் ஓரத்தில் தன்னறியாமல் கத்திக் கீறல்கள் விழ ஆரம்பித்ததும் தொழில் கை விட்டுப் போனபிறகு , நிரந்தரமாக அந்த மூலை வைத்தியனின் இடமாகி விட்டிருந்தது. மணி ஒன்பதைத் தாண்டி விட்டதால் அவன் உறங்கி இருக்கவும் கூடும். ஆனால் சற்று நேரத்திற்கொரு முறை , நானும் இருக்கிறேன் என்ற காட்டிக் கொண்டிருக்கும் இருமல். மூலையை நெருங்கி நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்தான் மாணிக்கம். ஆள் நடமாட்டம் இல்லை. நாளை தேர்தல் என்ற மும்முரத்தில் ஊர் பரபரத்துக்
|
கொண்டிருக்கும்போது , இந்த ஒதுங்கிய மூலைக்கு யார் வரப்போகிறார்கள் ? வைத்தியனைப் பார்த்து சன்னமாகக் குரல் கொடுத்தான். " வைத்தியா.. ஏவைத்தியா.... ! " பதில் இல்லை. காதோடு அடைத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதால் கேட்டிருக்காது. அந்த மனித மூட்டையின் தோளைத் தொட்டு உலுக்கினான். அலறாமலும் புடைக்காமலும் எழுந்து உட்கார்ந்த அவன் , நிதானமாக மாணிக்கத்தைப் பார்த்து திருதிருவென்று விழித்தான். “ ஏம் போத்தி... ? வீட்டிலே யாராவது.... " 168 அவன் என்ன கேட்கிறான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. மற்ற சமயமாக இருந்தால் , இந்தக்
|
கேள்விக்குப் பதில் வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்று அந்த ஓட்டின் கனம் என்ன என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அமைதியாகச் சொன்னான். “ அதெல்லாம் ஒண்ணும் இல்ல... உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்... " வைத்தியனுக்கு நெஞ்சில் திகில் செல்லரித்தது. இந்த அர்த்த ராத்திரியில் தன்னை எழுப்பி ஒன்று கேட்க வேண்டுமானால்.... * உன் பேரு அணஞ்சபெருமாளா ? ” வைத்தியன் முகத்தில் ஒருவித பிரமிப்பு. “ அட... இதென்ன விண்ணாணம்... ? இதுக்குத்தானா இந்தச் சாமத்திலே வந்து சங்கைப் புடிக்கேரு... " " பேரு அதானா சொல்லு... ? " “ உமக்கு யாரு
|
சொல்லீட்டா... ? நானே அயத்துப் போனதுல்லா.. இப்ப என்ன வந்திட்டு அதுக்கு.. ? " " யார்கிட்டேயும் மூச்சுக்காட்டாதே. உன் பேரு வோட்டர் லிஸ்டிலே இருக்கு.. நாளைக்குக் காலம்பற நான் வந்து உன்னைக் காரிலே கூட்டிட்டுப் போறேன்.. காப்பி சாப்பாடு எல்லாம் உண்டு.... உருளைக்காரப் பயக்கோ வந்து கோட்டா இல்லேண்ணு சொல்லீரு..ஆமா... ! " தானும் ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் முடிசூடா மன்னர்களில் ஒருவன் என்ற எண்ணம் -தனக்கும் ஓட்டுரிமை இருக்கிறது என்ற நினைப்பு வைத்தியனுக்கு புதிய தெம்பைத் தந்தது. அந்த உணர்வு காரணமாகச்
|
சூம்பிய அவன் தோள்கள் சற்றுப் பூரித்தன. " நான் ஏம் போத்தி சொல்லுகேன் ? அண்ணைக்கு அந்த உருளைக்கார ஆளுக சொன்னாளே.. இதுவரை நீ சேத்தவன் ஓட்டையும் ஊரைவிட்டு ஓடினவன் ஓட்டையும் போட்டே... சரி... ஆனா எவனும் சொன்னாண்ணு இந்தத் தடவை அங்கே வந்தே... பொறகு தெரியும் சேதி.... நேரே போலீசிலே புடிச்சுக் குடுத்திருவோம். அப்படீண்ணூல்லா சொன்னா... நானும் அதாலா கம்முண்ணு இருக்கேன். 169 மச்சினனும் மச்சினனும் இண்ணைக்கு அடிச்சுக்கிடுவாங்க... நாளைக்கு நானும் நீயும் சோடி , கடைக்குப் போலாம் வாடிண்ணூ கழுத்தைக் கெட்டிக்கிட்டு அழுவாங்க...
|
நமக்கு என்னத்துக்கு இந்தப் பொல்லாப்புண்ணுதாலா சலம்பாமல் கிடக்கேன். இப்பம் நம்ம பேரும் லிஸ்டிலே இருக்கா ? தெரியாமப் போச்சே இதுநாள் வரை.. " " இது இப்பம்கூட யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ... நான்தான் கண்டுபிடிச்சேன் ! முன்னாலேயே ஒம் பேரு இருந்திருக்கும்.. ஆனா என்னைப் போல யாரு அக்குசாப் பாக்கா.. ? அதுகிடக்கட்டும். உனக்குப் புது வேட்டியும் துவர்த்தும் வாங்கி வச்சிரச் சொல்லுகேன். நீ காலம்பற என்கூட வந்து இட்டிலி திண்ணு போட்டு , புதுத்துணியும் உடுத்திக்கிட்டு ஒட்டுப் போட்டிரணும். எல்லாம் நான் சொல்லித்தாறேன்... ஆனா
|
எவன்கிட்டேயும் அனக்கம் காட்டிராதே... என்னா.. ? " “ இனி நான் சொல்லுவேனா.. நீங்க இம்புட்டு சொன்னதுக்கப்புறமு... " வைத்தியன் தந்த உறுதியில் மனம் மகிழ்ந்து தன் சாதனையை நினைத்து மார்பு விம்ம , பூசணிக்காய் வீட்டை நோக்கி நடந்தான் மாணிக்கம். அங்கே ஒரு அரசவையின் பொலிவு போன்ற சுற்றுச் சூழல்கள். மங்களாவில் நடுநாயகமாகப் பூசணிக்காய் கொலு வீற்றிருந்தார். அந்த வீட்டிலுள்ள மொத்தப் பெஞ்சுகளும் , நாற்காலிகளும் அங்கே பரந்து கிடந்தன. வந்து வந்து தன் விசுவாசத்தைத் தெரிவிக்கும் வாக்காளர்களின் புழக்கம். வெற்றிலைச் செல்லங்கள்
|
இரண்டு மூன்று ஆங்காங்கே ஊறிக் கொண்டிருக்கும் சுக்குக்காப்பி அண்டா. அந்த நூறு வீட்டு ஊரின் இரதவீதிகளைச் சுற்றிச் சுற்றிக் கோஷம் போட்டுத் தொண்டை கட்டியவர்கள் நெரிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். நாலை காலைக் காப்பிக்கான ஆயத்தங்கள். இட்டிலிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்டதால்கொர்என்ற சீரான இரைச்சல். சின்னம் பூசணிக்காய் ஆனபடியால் , பூசணிக்காய் சாம்பாருக்காக அரிந்து பனையோலைப் பாய்மீது குவிக்கப்பட்டிருந்தது. இலைக்கட்டுகள் இடத்தை அடைத்துக்கொண்டு கிடந்தன. பாத்திர பண்ட வகையறாக்களின் முனகல்.
|
செயித்தால் வீட்டுக்கொரு பூசணிக்காய் பரிசாக விளம்புவதற்காக ஐந்து மூட்டைகள் சாய்ப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பூச்ணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி , தோற்ற பிறகு தெருவில் போட்டு உடைப்பதற்காக உருளையுமிரண்டு மூட்டைகள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருந்ததாகக் கேள்வி. ஆகக் கனக மூலம் 170 சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்த முறை ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி , அதற்குத் தோதாக மேலாய்ச்சி கோணம் முழுவதும் பூச்ணிக்கொடு போடப்போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மாணித்திருப்பதாகத் தகவல். நாளை வாக்குச்
|
சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. ஒரேயொரு அசௌகரியம்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப் போல , இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடியாது. அதில் ஒரு புத்திசாலி , உருளை என்றால் உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்பதால் , அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் , அங்கே மொத்த ஒட்டுக்களே இரு நூற்று எழுபது. நூறு சதமானம்
|
வாக்களிப்பு நடந்தாலும் , இருநூற்றெழுபது வாக்காளர்களுக்கும் மொத்தம் பதினாறு வில் வண்டிகளும் நான்கு வாடகைக் கார்களும். அது மட்டுமல்ல வாக்கெடுப்பு நடக்கப் போகும் அரசினர் ஆரம்பப் பள்ளி , ஊரில் எந்த மூலையில் இருந்து நடந்தாலும் அரை பர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டுசெல்வது ? மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததைத் தல்லிப் பழுக்க வைப்பது போன்றும் சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதித்திருந்தால் கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். அவ்வளவு அவசரமும் பதட்டமும்.
|
ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள். அதைத்தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக் காப்பிக்கான சன்னத்தங்கள். அதிகாலையிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச் செய்து , புதிய வேட்டியும் துவர்த்தும் உடுத்து வெண்ணீறு பூசி ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரே புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒரு முறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான். பத்து மணிக்கு மேல் வாக்கெடுப்பு துரிதகதியில்
|
நடைபெறலாயிற்று. டாக்ஸிகள் எழுப்பும் புழுதிப்படலம். வில் வண்டிக்காளைகள் குடங்குடமாகப் பீய்ச்சித் தெருக்களை மெழுகின. சைக்கிள்கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப்பிடித்து வாக்காளரை இழுத்தது. பெற்றோர்கள் ஓட்டுப் போடப் போகும்போது சிறுவர்களுக்கும் காலைக் காப்பி , பலகாரம் , 171 டாக்ஸி சவாரி , சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து , காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அனுபவிப்பது ? இரண்டு வேட்பாளர்களும் வாக்குச்சாவடியில் பிரசன்னமாயிருந்தார்கள்.
|
அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு வரிசைகளில். இது தவிர அரசாங்க அதிகாரிகளான பள்ளி ஆசிரியர்கள். கலவரம் வரலாம் என்று அஞ்சப்பட்டதால் , இரண்டு போலீஸ்காரர்கள் கர்மசிரத்தையோடு கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் , லாத்தியுடன். வெள்ளாளனுக்கு லாத்தியே அதிகம் என்று துப்பாக்கி கொண்டுவரவில்லை. வைத்தியன் என்ற அணஞ்சபெருமாளை பெருமாள் வாக்குச்சாவடி முன் காரில் கொண்டுவந்து இறக்கிய போது எல்லோர் கண்களும் நெற்றி மேல் ஏறின. வெள்ளையும் சொள்ளையுமாக நீறணிந்த சைவ நாயனாக வந்து நின்ற அவனை அதிசயத்தோடு பார்த்தனர். * நாறப்பய புள்ளைக்கு என்ன
|
தைரியம் இருந்தா இண்ணைக்கு உள்ளூர் எலக்ஷன்லே கள்ள ஓட்டுப் போட வரும்... ம்... வரட்டும். " கறுவினார் உருளை. மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதால் கூட்டம் குறைந்து விட்டது. வைத்தியன் வந்து வரிசையில் நின்றபோது ஏழெட்டுப் பேரே அவன் முன்னால் நின்றார்கள். அவன் பின்னால் ஓரிருவர் வந்து சேரவா , இல்லை சாப்பிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாமா என்று யோசனையில் தயங்கி நின்றனர். இரண்டு நிமிடங்கள் பொறுத்ததும் வரிசையை விட்டு விலகி வேகமாக வெளியே நடக்கத் தொடங்கினான் வைத்தியன். இவனுக்குத் திடீரென என்ன வந்து விட்டது என்று புருவக்கோட்டை
|
உயர்த்தினார் பூசணிக்காய் ,என் எதிரில , எனக்கு விரோதமாகக் கள்ள ஓட்டுப் போட வந்திருவானாக்கும்...என்ற பாவனையில் மீசை மீது கை போட்டு இளக்காரத்துடன் பூசணிக்காயைப் பார்த்தார் உருளை. வரிசையிலிருந்து விலகிய வைத்தியனைப் பின்தொடர்ந்து ஓடிய மாணிக்கம் இரண்டு எட்டில் அவனைப் பிடித்துவிட்டான். 172 " கெழட்டு வாணாலே ! என்ன கொள்ளை எளகீட்டு உனக்கு ? எங்கே சுடுகாட்டுக்கா ஓடுகே... ? " “ அட சத்தம் போடாதேயும் போத்தி... இன்னா வந்திட்டேன்... " வைத்தியனின் குரலில் அவசரம். “ அதான் எங்க எளவெடுத்துப் போறேங்கேன்.. பிரி களந்திட்டோவ் ? " “
|
இரியும் போத்தி... ஒரு நிமிட்லே வந்திருகேன். " டுப் போட்டுக்கிட்டு எங்க வேணும்னாலும் ஒழிஞ்சு போயேங்கேன். " " அட என்னய்யா பெரிய சீண்டறம் புடிச்ச எடவாடா இருக்கு.... காலம்பற முகத்தைக் கழுவதுக்குள்ளே கூட்டியாந்தாச்சு. ஏழெட்டு இட்லி வேறே திண்ணேன்... வயசான காலத்திலே செமிக்கவா செய்யி... சித்த நிண்ணுக்கிடும்.. இன்னா ஒரு எட்டிலே போயிட்டு வந்திருகேன்... " வைத்தியன் குளத்தங்கரையோரம் போய் கால்கழுவி வருவதற்குள் உணவு இடைவேளைக்காக வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வைத்தியனை அங்கே காத்திருக்கச் சொன்னால் ஆபத்து என்று
|
கருதி , மீண்டும் காரிலேற்றி , வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சாப்பாடு போட்டு முதல் ஆளாகக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். சூரன்பாடு திருவிழாவில் , முதலில் வருகின்ற சூரனைப் போல வைத்தியன் வீர விழி விழித்தான். இடைவேளைக்குப் பிறகு , வாக்கெடுப்பு தொடங்கியது கையில் வைத்திருந்தஅணஞ்சபெருமாள் சீட்டுடன் வாக்கு சாவடியினுள் நுழைந்தான் வைத்தியன். இவனுக்கு ஒரு பாரம் படிப்பித்துத்தான் அனுப்ப வேண்டும் என்று உருளை உஷாராக இருந்தார். முதல் போலிங் ஆபிசரிடம் சீட்டை நீட்டினான் வைத்தியன். உருளை ஒரு உறுமல் உறுமினார். “ ஏவைத்தியா.. உனக்கு
|
ஓட்டு இருக்கா ? " சந்தேகத்துடன் அவன் அவரைப் பார்த்தான். 173 " இருக்கு போத்தியோ.. இன்னா நீரே பாருமே... " அவன் நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்த உருளைக்கு கொஞ்சம் மலைப்பு. அவர் மலைப்பதைக் கண்ட பூசணிக்காய் முகத்தில் மூரல் முறுவல். " அணஞ்ச பெருமாளா உன் பேரு.. ? " “ ஆமா போத்தி.. நான் பின்ன கள்ள ஓட்டா போட வருவேன் ? ” உருளையின் ஐயம் தீரவில்லை. வாக்காளர் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அவர் முகத்தில் சிறிய திகைப்பு. சற்று நேரத்தில் ஏளனப் புன்னகையொன்று விரிந்தது. " இதுவரைக்கும் கள்ள ஓட்டுப் போட்டாலும் நாடுவிட்டுப் போன
|
ஆளுக பேரிலேதான் போட்டிருக்கே. இப்ப செத்துப்போன ஆளு ஓட்டையும் போட வந்திட்டயோவ் ? " “ இல்லை போத்தி... என் பேரு அணஞ்சபெருமாளுதான்... நான் பொய்யா சொல்லுகேன்... " * அட உன் பேரு அணஞ்சபெருமாளோ , எரிஞ்ச பெருமாளோ என்ன எளவாம் இருந்திட்டுப்போகு... ஆனா இந்த அணஞ்ச பெருமாளு பொம்பிளையிண்ணுல்லா போட்டிருக்கு.... " “ என்னது ? பொம்பிளையா ? " “ பின்னே என்ன ? நல்லாக் கண்ணை முழிச்சிப்பாரு.. அது நம்ம கொழும்புப் பிள்ளை பாட்டாக்கு அக்காயில்லா... அவ செத்து வருஷம் பத்தாச்சே.... ஓட்டா போட வந்தே ஓட்டு... வெறுவாக்கட்ட மூதி.. போ அந்தாலே
|
ஒழிஞ்சு.... " வைத்தியன் செய்வதறியாமல் பூசணிக்காயைப் பார்த்தான். கடித்துத் தின்று விடுவதைப் போல அவர் அவனைப் பார்த்து விழித்தார். 174 கதவு - கி. ராஜநாராயணன் கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்கஎன்றான் சீனிவாசன். உடனே “ எனக்கொரு டிக்கெட் , உனக்கொரு டிக்கெட் " என்று சத்தம் போட்டார்கள். " எந்த ஊருக்கு வேணும் ? ஏய் இந்த மாதிரி இடிச்சி தள்ளினா என்ன அர்த்தம் ? அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன் " " இல்லை , இல்லை , இடிச்சி
|
தள்ளலே " “ சரி , எந்த ஊருக்கு டிக்கெட் வேணும் ? " குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் “ திருநெல்வேலிக்கு " என்று சொன்னான். “ திருநெல்வேலிக்கு , திருநெல்வேலிக்கு " என்று கூப்பாடு போட்டுச் சொன்னார்கள் எல்லோரும். லட்சுமி ஒரு துணியால் கதவைத் துடைத்துக் கொண்டிருந்தாள். சீனிவாசன் வெறுங்கையால் டிக்கெட் கிழித்துக் கொடுத்து முடிந்ததும் , கதவில் பிடித்துத் தொத்திக் கொண்டார்கள். சிலர் கதவை முன்னும் பின்னும் ஆட்டினார்கள். தன் மீது ஏறி நிற்கும் அக்குழந்தைகளை அந்த பாரமான பெரிய கதவு பொங்கிப்
|
பூரித்துப் போய் இருக்கும் அக்குழந்தைகளை வேகமாக ஆடி மகிழ்வித்தது. “ திருநெல்வேலி வந்தாச்சி " என்றான் சீனிவாசன். எல்லோரும் இறங்கினார்கள். கதவைத் தள்ளியவர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டார்கள். ஏறினவர்கள் தள்ளினார்கள். மீண்டும் கதவாட்டம் தொடங்கியது. 175 அது பழைய காலத்துக் காரை வீடு. பெரிய ஒரே கதவாகப் போட்டிருந்தது. அதில் வசித்து வந்தவர்கள் முன்பு வசதி உள்ளவர்களாக வாழ்ந்தவர்கள். இப்பொழுது ரொம்பவும் நொடித்துப் போய் விட்டார்கள். அந்த வீட்டிலுள்ள பெண் குழந்தைகளில் மூத்ததிற்கு எட்டு வயது இருக்கும். இன்னொன்று
|
கைக்குழந்தை. அம்மா காட்டுக்கு வேலை செய்யப் போய் விடுவாள். அப்பா மணி முத்தாறில் கூலி வேலை செய்யப் போய்விட்டார். லட்சுமியும் சீனிவாசனும் கைக்குழந்தையை அம்மா காட்டிலிருந்து வரும் வரை வைத்துக் கொண்டு கதவோடு விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில் ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பி தன் பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும் பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி , படம்
|
சுத்தமாகிவிட்டதென்று. படத்தை முகத்துக்கு நேராகப் பிடித்து தலையைக் கொஞ்சம் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். அப்புறம் இந்தப் பக்கமாகச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். சிரித்துக் கொண்டாள். காண்பிக்க பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. வீட்டை நோக்கி வேகமாக நொண்டி அடித்துக் கொண்டே போனாள் , சந்தோஷம் தாங்க முடியாமல். லட்சுமி வீட்டுக்கு வந்தபோது சீனிவாசன் நாடியைத் தாங்கிக் கொண்டு வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டதும் லட்சுமி படத்தைப் பின்புறமாக
|
மறைத்துக் கொண்டு , " டேய் நா என்ன கொண்டு வந்திருக்கேன் சொல்லு பாப்போம் " என்றாள் “ என்ன கொண்டு வந்திருக்கியோ ? எனக்குத் தெரியாது " " சொல்லேன் பாப்போம் " " எனக்குத் தெரியாது " லட்சுமி தூரத்தில் இருந்தவாறே படத்தைக் காண்பித்தாள். 176 “ அக்கா , அக்கா , எனக்குத் தரமாட்டியா ? " என்று கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான் சீனிவாசன்.முடியாதுஎன்ற பாவனையில் தலையை அசைத்து படத்தை மேலே தூக்கிப் பிடித்தாள். சீனிவாசன் சுற்றிச் சுற்றி வந்தான். " ம்ஹும் , முடியாது. மாட்டேன்... நான் எவ்ளோ கஷ்டப்பட்டு தேடி எடுத்துக் கொண்டு
|
வந்திருக்கேன் தெரியுமா ? " என்றாள். “ ஒரே தடவை பாத்துட்டுக் கொடுத்துர்றேன் அக்கா , அக்கா " என்று கெஞ்சினான். “ பார்த்துட்டுக் கொடுத்துறனும் " " சரி " “ கிழிக்கப்படாது " “ சரி சரி " சீனிவாசன் படத்தை வாங்கிப் பார்த்தான். சந்தோஷத்தினால் அவன் முகம் மலர்ந்தது. " டேய் , உள்ளப் போய் கொஞ்சம் கம்மஞ்சோறு கொண்டா , இந்தப் படத்தை நம்ம கதவிலே ஒட்டணும் " என்றாள். “ ரொம்பச் சரி " என்று உள்ளே ஓடினான் சீனிவாசன். ரெண்டு பேருமாகச் சேர்ந்து கதவில் ஒட்டினார்கள். படத்தைப் பார்த்து சந்தோஷத்தினால் கை தட்டிக் கொண்டு குதித்தார்கள்.
|
இதைக் கேட்டு பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஓடி வந்தன. மீண்டும் கதவு ஆட்டம் தொடங்கியது. 177 அந்தக் கதவைக் கொஞ்சம் கவனமாகப் பார்க்கிறவர்களுக்கு இந்தக் குழந்தைகள் ஒட்டிய படத்துக்குச் சற்று மேலே இதே மாதிரி வேறு ஒரு ப்டம் ஒட்டி இருப்பது தெரிய வரும். அந்தப் படம் ஒட்டி எத்தனையோ நாட்கள் ஆகி விட்டதால் அழுக்கும் புகையும் பட்டு மங்கிப் போயிருந்தது. ஒருவேளை அது லட்சுமியின் தகப்பனார் குழந்தையாக இருக்கும்போது ஒட்டியதாக இருக்கலாம். குழந்தைகள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது கிராமத்துத் தலையாரி அங்கே வந்தான். "
|
லட்சுமி உங்க ஐயா எங்கே ? " " ஊருக்குப் போயிருக்காக " " உங்க அம்மா ? * " காட்டுக்கு போயிருக்காக " 2. “ வந்தா தீர்வைய கொண்டு வந்து போடச் சொல்லு , தலையாரித் தேவரு வந்து தேடீட்டு போனாருன்னு சொல்லு " சரி என்ற பாவனையில் லட்சுமி தலையை ஆட்டினாள். மறுநாள் தலையாரி லட்சுமியின் அம்மா இருக்கும் போதே வந்து தீர்வை பாக்கியைக் கேட்டான். " ஐயா , அவரு ஊரிலே இல்லை. மணி முத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி. ஒரு தகவலையும் காணோம். மூணு வருஷமா மழை தண்ணி இல்லயே. நாங்க என்னத்தை வெச்சு உங்களுக்கு தீர்வை 178 பாக்கியைக் கொடுப்போம் ? ஏதோ
|
காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைங்கள காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாததா ? " என்றாள். இந்த வார்த்தைகள் தலையாரியின் மனசைத் தொடவில்லை. இந்த மாதிரியான வசனங்களைப் பலர் சொல்லிக் கேட்டவன் அவன். " நாங்கள் என்ன செய்ய முடியும்மா இதுக்கு ? இந்த வருஷம் எப்படியாவது கண்டிப்பா தீர்வை போட்டுறனும். அப்புறம் எங்க மேல சடைச்சிப் புண்ணியம் இல்லை. " என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான். 3. ஒருநாள் காலை வீட்டின் முன்னுள்ள மைதானத்தில் குழந்தைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தலையாரி நான்கு பேர்
|
சகிதம் வீட்டை நோக்கி வந்தான். வந்தவர்கள் அந்த வீட்டுப்பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். அவர்களுக்கு இது ஒரு மாதிரி வேடிக்கையாக இருந்தது. தலையாரியும் சேர்ந்து பிடித்து ஒரு மாதிரி கழற்றி நான்கு பேரும் கதவைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒருவன் நாதஸ்வரம் வாசிப்பவனைப் போல் கைகளை வைத்துக் கொண்டு “ பீப்பீ..பீ... பீ " என்று சத்தம் காட்டி விரல்களை நீட்டிக் கொண்டு உடலைப் பின் வளைத்துத் துடைகளின் மேல் ஓங்கி அடிப்பதாக பாவனை செய்து " திடும்.. திடும்..
|
ததிக்குணம்... ததிக்குண " என்று தவில் வாசிப்பவனைப் போல முழங்கினான். சீனிவாசனும் இதில் பங்கெடுத்துக் கொண்டான். இப்படி உற்சாகமாக குழந்தைகள் கதவைத் தூக்கிக் கொண்டு செல்கிறவர்களின் பின்னே ஊர்வலம் புறப்பட்டார்கள். தலையாரியால் இதைச் சகிக்க முடியவில்லை. “ இப்போ போகிறீர்களா இல்லையா கழுதைகளே ” என்று கத்தினான். குழந்தைகள் ஓட்டம் பிடித்தன. அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது லட்சுமி வாசல்படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். எல்லோரும் அரவம் செய்யாமல் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். ஒருவரும்
|
ஒன்றும் பேசவில்லை. சீனிவாசனும் முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டான். இப்படி வெகுநேரம் அவர்களால் இருக்க முடியவில்லை. தற்செயலாக ஒரு பெண் , " நான் வீட்டுக்குப் போறேன் " என்று எழுந்தாள். உடனே எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள். லட்சுமியும் சீனிவாசனும் மாத்திரம் அங்கிருந்தார்கள். வெகுநேரம் அவர்களும் ஒருவருக்கொருவர் பேசவில்லை. 179 கைக்குழந்தை அழும் குரல் கேட்கவே லட்சுமி உள்ளே திரும்பினாள். இதற்குள் சீனிவாசன் அக்குழந்தையை எடுத்துக் கொள்ளப் போனான். குழந்தையைத் தொட்டதும் கையைப் பின்னுக்கு இழுத்தான்.
|
அக்காவைப் பார்த்தான். லட்சுமியும் பார்த்தாள். " பாப்பாவை தொட்டுப் பாரு அக்கா ; உடம்பு சுடுது " என்றான். லட்சுமி தொட்டுப் பார்த்தாள் ; அனலாகத் தகித்தது. சாயந்திரம் வெகுநேரம் கழித்து அம்மா தலையில் விறகுச் சுள்ளிகளுடன் வந்தாள். சுள்ளிகள் சேகரிக்கும் போது கையில் தேள் கொட்டி இருந்ததால் முகத்தில் வலி தோன்ற அமைதியாக வந்து குழந்தைகளின் பக்கம் அமர்ந்து கைக்குழந்தையை வாங்கிக் கொண்டாள்.உடம்பு சுடுகிறதே ?என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். இதற்குள் குழந்தைகள் காலையில் நடந்த சேதியை அம்மாவிடம் சொன்னார்கள். செய்தியைக்
|
கேட்டதும் ரங்கம்மாவுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. உடம்பெல்லாம் கண்ணுத் தெரியாத ஒரு நடுக்கம். வயிற்றில் தாங்க முடியாத ஒரு வலி தோன்றியது போல் குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டாள். குழந்தைகளுக்கு முன் அழக் கூடாது என்று எவ்வளவு தான் அடக்கினாலும் முடியவில்லை. “ என்னைப் பெத்த தாயே " என்று அலறி விட்டாள். பயத்தினால் குழந்தைகள் அவள் பக்கத்தில்இருந்து விலகிக் கொண்டார்கள். இனம் புரியாத பயத்தின் காரணமாக அவர்களும் அழ ஆரம்பித்தனர். 4. மணிமுத்தாறிலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. நாட்கள் சென்று கொண்டேயிருந்தன. இரவு
|
வந்து விட்டால் குளிர் தாங்க முடியாமல் குழந்தைகள் நடுங்குவார்கள். கதவு இல்லாததால் வீடு இருந்தும் பிரயோஜனமில்லாமல் இருந்தது. கார்த்திகை மாசத்து வாடை , விஷக் காற்றைப் போல் வீட்டினுள் வந்து அலைமோதிக் கொண்டே இருந்தது. கைக்குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுக் கொண்டே வந்தது. ஒரு நாள் இரவு வாடை தாங்காமல் அது அந்த வீட்டை விட்டு அவர்களையும் விட்டு பிரிந்து சென்று விட்டது. ரங்கம்மாளின் துயரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. லட்சுமிக்காகவும் சீனிவாசனுக்காகவுமே அவள் உயிர் தரித்திருந்தாள். சீனிவாசன் இப்பொழுது பள்ளிக்கூடம்
|
போகிறான். ஒருநாள் அவன் மத்தியானம் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் போது ஒரு தீப்பெட்டிப் படம் கிடைத்தது. கொண்டுவந்து தன் அக்காவிடம் காண்பித்தான். லட்சுமி அதில் ஆர்வம் கொள்ளவில்லை. 180 “ அக்கா எனக்கு சீக்கிரம் கஞ்சி ஊத்து , பசிக்கி ; சாப்பிட்டு இந்த படத்தை ஒட்டனும் " “ தம்பீ , கஞ்சி இல்லை " இதை அவள் மிகவும் பதட்டத்தோடு சொன்னாள். “ ஏன் ? நீ காலையில் காய்ச்சும் போது நான் பாத்தேனே ? " ஆம்என்ற முறையில் தலையசைத்து விட்டு , " நான் வெளிக்குப் போயிருந்தேன். ஏதோ நாய் வந்து எல்லாக் கஞ்சியையும் குடித்து விட்டுப்
|
போய்விட்டது தம்பி... கதவு இல்லையே " என்றாள் துக்கமும் ஏக்கமும் தொனிக்க. தன்னுடைய தாய் பசியோடு காட்டிலிருந்து வருவாளே என்று நினைத்து உருகினாள் லட்சுமி. சீனிவாசன் அங்கே சிதறிக் கிடந்த கம்மம் பருக்கைகளை எடுத்துப் படத்தின் பின்புறம் தேய்த்து ஒட்டுவதற்கு வந்தான். கதவு இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுவரில் ஒட்டினான். படம் கீழே விழுந்து விட்டது. அடுத்த இடத்தில் , அடுத்த சுவரில் எல்லாம் ஒட்டிப் பார்த்தான் ; ஒன்றும் பிரயோசனம் இல்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் அவன் அழ ஆரம்பித்தான். சாயந்திரம் லட்சுமி சட்டி
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.